கீலாய்டு

அன்புள்ள தோழிகளே, என் கால் பாதத்தின் ஓரத்தில் 20 வருடங்களுக்கு முன் ஏற்ப்பட்ட‌ தழும்பு, 7 வருடத்திற்கு முன் சற்று புடைத்து, ஊரல் எடுத்து கருக்க‌ ஆரம்பித்தது. டாக்டர்களிடம் காண்பித்தேன், இது கீலாய்டு(வளரும் தழும்பு) என்றும், உள் மருத்துவம் பலன் தராது என்றும் கூறினர். ஆப்பரேக்ஷன் அல்லது லேசர் சிகிச்சை மட்டுமே பலன் தரும் என்றார்கள். அதற்கு பயந்து நான் மறுபடியும் செல்லவில்லை, தற்பொழுது கனுக்கால் மேல்வரை வளர்துகொன்டெ போகிறது. தயவு செய்து இதற்கு தீர்வு கூறுங்கள். எப்பொழுதும் சிறிது வலிபோல் உள்ளது.

//ஆப்பரேக்ஷன் அல்லது லேசர் சிகிச்சை// ஆமாம். ஆனால் ஆப்பரேஷன் - திரும்பவும் அந்தத் தழும்பிலிருந்து கீலொய்ட் வளரலாம். லேசர் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். காய்களுக்கு ஃப்ரீஸ் பண்ணுற மாதிரி இதற்கும் ஏதும் சிகிச்சை இருக்கவும் கூடும்.

எங்கள் வீட்டு கீலொய்ட்காரர் வலி என்று சொன்னதே கிடையாது. கணுக்கால் என்பதால் அப்படி இருக்கிறதோ! வலி இருந்தால் சிகிச்சைக்குப் போய்விடுங்களேன்! லேசர் ட்ரீட்மண்டுக்குப் பயப்பட வேண்டாம்.

துணை வாசிப்பிற்கு... :-)
http://www.arusuvai.com/tamil/node/29859 & http://www.arusuvai.com/tamil/node/21604?page=16

‍- இமா க்றிஸ்

இமா அக்கா நன்றி, லேசெர் சிகிச்சையினால் பக்க‌ விளைவுகள் ஏற்படுமோ என்று தான் பயம். :‍(

//பக்க‌ விளைவுகள்// இராது என்று நம்புகிறேன். அதே லேசரை வைச்சுதான் என் வாய்க்குள்ள ஒரு குட்டி விளையாட்டு நடத்தினாங்க. 2 வருஷம் இருக்கும். கண்ல ட்ரீட்மண்ட்... அதே லேசர்லதான் செபாவுக்கு பண்ணாங்க. என் வாய்ல அப்போ மட்டும் கொஞ்சமா பாபக்யூல சாசேஜ் தீஞ்ச வாடை அடிச்சுது. :-) அப்றம் எல்லாம் ஓகே. பக்க விளைவு, பின்விளைவு ஒண்ணும் காணோம்.

கீலொய்டுக்கு சர்ஜரியை விட இது பொருத்தமா இருக்கும் என்கிறது என் நம்பிக்கை.

‍- இமா க்றிஸ்

நன்றி, உங்கள் ஊக்கமான பதில் எனக்கு சிறிது தெம்பை தருகிறது. லேசர் செய்து கொள்ள‌ முடிவு எடுத்துள்ளென், இறை நம்பிக்கையுடன்.

நிஷா... சிகிச்சையின் பின் உங்கள் அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொண்டால் பின்னால் யாருக்காவது உபயோகமாக இருக்கும். இப்போதே நன்றி. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்