Urgent help me friends

Friends en close frnd ku nethu kaluthula eth chinna kati mathiri irukumnu hospital ponanga anga ....doctor tb test pandra injection kaila potu round pani vitutanga. .vanthathularnthu bayapadranga romba light skin konja veengi iruku ...ethachum problem ah friends..enakey kashtama iruku ..

//vanthathularnthu bayapadranga// பயம் இருக்கும்தான். ஆனால்... எதற்காகப் பயப்பட வேண்டும்! இது மரணத்தைக் கொண்டு வரும் நோய் அல்ல. மருத்துவம் முன்னேறிய காலம் இது. தோழிக்கு டீபீயாக இருந்தாலும் குணப்படுத்த மருந்துகள் இருக்கின்றன. இங்கு முன்னேற்பாடாக குடும்ப உறுப்பினர்களுக்கும் மருந்து கொடுக்கிறார்கள். சிகிச்சைகள், வெறும் மாத்திரைகளும் ஊசிகளுமாக மட்டும்தான் இருக்கும்.

//romba light skin konja veengi iruku ...ethachum problem ah friends.// :-) கண்ணால் பார்க்காமல் ஆம், இல்லை இரண்டில் எதுவும் சொல்ல முடியாது. திரும்பப் போவாங்க இல்ல! போகாமல் விட்டுரக் கூடாது. போகணும். அப்போ டாக்டர் சொல்லுவாங்க.

//enakey kashtama iruku// கர்ர்... நீங்க அவங்களுக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட் என்றால், அவங்களைப் பயமுறுத்தாமல் இருப்பீங்க. சாதாரணமாக எந்த ஊசியானாலும் சின்னதாக ஒரு வீக்கம் இருப்பதில்லையா! டாக்டர் ஒரு சந்தேகத்துல... எதையும் மிஸ் பண்ணிரக் கூடாது என்று முன்ஜாக்கிரதையா இந்த டெஸ்ட் பண்ணி இருக்கிறாங்க. டீபீ இல்லை என்று கூட முடிவு வரலாம்.

‍- இமா க்றிஸ்

Nan konjam avangala samathanam panitu than iruken imma mam. Avanga veetula yarukum illa avangalum apadi cough cold nu oru karanam kooda illa athunalathan bayasm venam solli iruken athuku piragu kadavul thazn avangalaku help pananum..... Thanks imma mam

//athuku piragu kadavul thazn avangalaku help pananum.// :-) நீங்க இந்த அளவு யோசிக்கிறதுக்கு, இது பெரிய விஷயமே இல்லை.

எனக்கு மிக நெருக்கமானவங்க ஒருத்தருக்கு இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாம நல்லா இருக்கிறாங்க. ஊர்லயும் ஒருத்தருக்கு இருந்தது. அவங்க குணமாகி பல வருஷம் கழிச்சு கிழவியாகிப் போய்த்தான் இறந்தாங்க. இருவரிடமிருந்தும் வேறு யாருக்கும் தொற்றியதாகக் கேள்விப்படவில்லை.

‍- இமா க்றிஸ்

Avangaluku skin test la positive blood test la negative doctor ey confuse agitangalam ...avangala ennala samathanam seiya mudiyala imma mam ....another test ku koduthu irukanga...

தோழி இதில் பயபட‌ எதும் இல்லை. சாதாரனமாக‌ போடுவதுதான் இது.எனக்கும் சளிக்கு, அல்சர் டெஸ்ட் பன்னும் போது போட்டுறுக்காங்க‌. இது அலர்ஜி இருக்கானு பாக்க போடுவாங்க‌ T2,T4 இதுல‌ ஏதாதுத‌ போட்டுறுப்பாங்க‌.முக்கியமாக‌ அந்த‌ இடத்தில் 48 or 24 மணி நேரத்துக்கு தண்ணி, சோப்பு போன்றவை படாமல் பார்த்துக்க‌ வேண்டும் அவ்வளவுதான்.வீக்கம் இருக்கும்.அது குறையுரது பொறுத்து பாப்பாங்க‌.

maximum blood test la varathuthan unmaiya irukkum.XRay eduthangala.enna maximum XRay laie therunjurum TB irukka illaiyanu.neenga katti irukkunu solirukinga athu sathai valarchi allathu elumbu valarchi maathiri kuda irukkalam. unga friend ku weight loss thodar irumbal, breath pannum pothu maarbula sound intha maari ethathu irukka. apd ethum illaina 98% athu tb ah irukkathu. payapadamal irungal.

Cold cough weight loss ethumey illa frnds blood la test paninaga athulavum normal ah iruku monto test la matum positive x Ray normal nu sollitanga ipo innoru test ku koduthu irukanga ....negative na 3 days la solliduvanga.. Illati 10 kalichu soldren nu solli irukanga ,, ennala avangala pakavey mudiala avnaga elarkum avlo help panuvanga odi odi last la avangaley intha nilaimai ...

வாணி... இதை நீங்கள் இங்கே கேட்டிருப்பது உங்கள் தோழிக்கு தெரியுமா? வருத்தப்படக்கூடும்... கேட்டுவிடுங்கள்.

தெரிந்த‌ மருத்துவரை விசாரித்தேன். இது போல‌ வருவதை லிம்ஃப் நோட் என்பார்களாம். இதற்கு இருமல் இருக்க‌ வேண்டிய‌ அவசியம் இல்லை. ஃபைன் நீடில் டெஸ்ட் எடுத்தால் தான் உண்மையில் என்ன‌ என்பது தெரியும். அதன் மூலம் அது வெறும் கொழுப்பு கட்டியா, கேன்சர், டிபி என‌ எதுவானாலும் கண்டு பிடிக்கலாம் என்றார். கட்டியில் இருந்து சிறிது எடுத்து பரிசோதிக்கும் முறையாம்.

எதுவானாலும் பயம் வேண்டாம், நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது இவை ஏற்படுகிறது. நல்ல‌ ஆரோக்கியமான‌ உணவும் 6 மாத‌ கால‌ மருந்தும் போதுமானது. மருத்துவர் தந்த‌ தகவல் தான்.... அதனால் பயம் வேண்டாம் என‌ உங்கள் தோழிக்கு சொல்லுங்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

//avangaley intha nilaimai // ‍ !!! நீங்க‌ ஒருத்தர் போதும் போல‌ உங்க‌ ஃப்ரென்ட‌ பயங்காட்ட‌!! வாணிக்கா... அது அவ்வளவு பெரிய‌ நோயல்ல‌. செஸ்ட் எக்ஸ்ரே பிரெச்சனை இல்லாத‌ போது பயமே இல்லை. இது உயிர் கொல்லியும் அல்ல‌, தொற்று நோயும் அல்ல‌. 6 மாதம் மருந்தெடுத்து பின் நல்ல‌ உணவு பழக்கம் வைத்துக்கொண்டால் போதும். ஆரோக்கியமா 100 வயசு வாழ்வாங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

////avangaley intha nilaimai // ‍ !!! நீங்க‌ ஒருத்தர் போதும் போல‌ உங்க‌ ஃப்ரென்ட‌ பயங்காட்ட‌!!// :-) டாக்டர்ட்ட தோழி போறாங்க. இவங்க விடாம இங்க டவுட்டு கேட்டுட்டே இருக்காங்க. :-) எல்லாம் நார்மல்னு முடிவு வந்தாலும் டவுட்டு முடியுமோ தெரியல. :-)

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்