வீட்ல விசேஷமா... கேட்கலாமா...

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தம்பதிகள் எதிர் கொள்ளும் கேள்வி "விஷேஷம் ஏதும் உண்டா?". நம் சமூகத்தில் இது மிகச்சாதாரணமாக எல்லோரும் கேட்கும் கேள்வி. இதனால் அடுத்தவரின் மனம் புண்படுமே என்று நாம் நினைப்பது இல்லை. இப்படி கேட்பது ஒன்றும் தவறில்லை, எல்லோரும் கேட்பதுதானே என்றே எண்ணுகிறோம்.

நிச்சயம் இந்த கேள்விகள் அந்த தம்பதிகளின் குறிப்பாக பெண்ணின் மனதில் பதட்டம், பயம் போன்ற குழப்பங்களை ஏற்படுத்தும். இந்த குழப்பமான பதட்டமான மனநிலை கூட கருத்தரிப்பை பாதிக்கும். நம் அளவிலாவது இப்படிப் பட்ட கேள்விகளை கேட்பதை தவிர்த்து முதல் அடியை எடுத்து வைக்கலாமே.

உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியுமா என்பது பழமொழி. கேட்கறவங்க கேட்கத்தான் செய்வாங்க நம்ப மனசை நாமதான் பத்திரமாக பார்த்துக்கணும். சொல்றது ஈசி அனுபவிக்கும் போதும்தானே வலி தெரியும் அப்படீன்னு நினைக்கலாம். நிச்சயம் கஷ்டம்தான். ஆனால் நம்மால் முடியும்.

என் சந்தோஷத்துக்கும் என் கவலைக்கும் நான் மட்டுமே பொறுப்பு அப்படீங்கறதை நாம திடமாக நம் மனசுகிட்ட சொல்லிடணும். நம்மை காயப்படுத்தும் வார்த்தையை மூளைக்கு கொண்டே போயிட கூடாது. கேட்க ஈசியாதான் இருக்கு ஆனால் ப்ராக்டிகலா எப்படி சாத்தியமாகும் மனசு வலிக்குமே அப்படீன்னு நினைக்கலாம். வலிக்கும்தான். ஆனால் ஒரு நிமிடம் அந்த வலியால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று யோசித்தால், நிச்சயம் எந்த பயனும் இல்லை. மாறாக அந்த வலி நம் மனதையும் உடலையும்தான் பாதிக்கும்.

கருத்தரிப்புக்கு ஆரோக்கியமான உடல்நிலை எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான மனநிலையும் முக்கியம்.

நம்ப மனசை சந்தோஷமா வச்சுக்க சில டிப்ஸ்

கருத்தரிக்க தாமதம் ஆவதற்கோ, குழந்தயின்மைக்கோ, அல்லது உடல்நிலை குறைபாடுகளுக்கோ நாம் எந்த விதத்திலும் பொறுப்பில்லை. நாம் வேண்டுமென்றே இந்த குறைகளை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் குற்ற உணர்ச்சியும் தேவையில்லை. இதை நம் மனது நம்ப வேண்டும்.

குறை சொல்பவர்களும், நக்கலடிப்பவர்களும் நமக்காக துரும்பைக் கூட கிள்ளிப் போட போவதில்லை. அவர்கள் பேச்செல்லாம் பொருட்டே இல்லை.

குழந்தையின்மை என்பது பாவமோ குற்றமோ இல்லவே இல்லை.
இது முழுக்க முழுக்க தம்பதிகளுக்கு இடையேயான தனிப்பட்ட விஷயம். இதில் கணவன் மனைவியிடையேயான புரிதலும், முடிவும் மட்டுமே முக்கியம். குடும்பத்தினர் புரிந்து கொண்டால் சந்தோஷம். புரிய வைக்க முயற்சிக்கலாம். புரிந்து கொள்ளவில்லையா டோன்ட் கேர்.
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து வீணடிப்பதற்கு அல்ல!

நேர்மறை சிந்தனைகள் நம் வாழ்விற்கான அத்தனை சந்தோஷங்களையும் கொண்டு வரும்.

சொல்ல வந்ததை தெளிவாக. சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் என் அனுபவத்தில் இருந்து சொல்லியிருக்கிறேன். ஒருகாலத்தில் இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ளத் தெரியாமல் நானும் கலங்கி வேதனைப் பட்டிருக்கிறேன். எப்போது என் மனதிற்கு இது என் தவறோ குற்றமோ இல்லை என்பதை உணர்ந்தேனோ அன்று முதல் என் வேதனைகளும் மறைந்தது. இப்போது யார் எப்படி கேட்டாலும் ஆலோசனை சொல்கிறேன் என்று மூக்கை நுழைத்தாலும முன்போல் தலைகுனியாமல் தலைநிமிர்ந்து பதில் சொல்கிறேன். அளவுக்கு மீறி எரிச்சல் படுத்துபவர்களை உறுதியுடன் பதில் சொல்லி விலக்கியும் வைக்கிறேன். பெண்ணுக்கு உரிய குழந்தைக்கான ஏக்கம் அவ்வப்போது தலைதூக்கும்தான். ஆனால் ஏக்கம் எந்த விதத்திலும் எனக்கு உதவப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருப்பதால், அப்போதெல்லாம் என் மனதை எனக்குப் பிடித்த விஷயங்களில் திருப்புகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.

5
Average: 4.6 (8 votes)

Comments

இடுகைக்கு ஒரு சல்யூட் கவி!

ஒவ்வொரு வரியிலும் ஆளமான கருத்துகள். //குறை சொல்பவர்களும், நக்கலடிப்பவர்களும் நமக்காக துரும்பைக் கூட கிள்ளிப் போட போவதில்லை. அவர்கள் பேச்செல்லாம் பொருட்டே இல்லை.// 100% உண்மை.

//அளவுக்கு மீறி எரிச்சல் படுத்துபவர்களை உறுதியுடன் பதில் சொல்லி விலக்கியும் வைக்கிறேன்.// அருமை. சகோதரிகள் உங்களை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளட்டும். இங்கு வரும் குட்டிப் பெண்கள் தவறாமல் உங்கள் இடுகையைப் படிக்க வேண்டும் என்பது என் ஆவல்.

பகிர்வுக்கு மிக்க நன்றி கவி.

‍- இமா க்றிஸ்

Neenga solrathu unmaithaan ...wedding aagi 1 monthila irunthu gedguraanga. ...enagu ippo six months aasu ...baby illa. ...ivangalugaka nan veedugu velija pooga pajapuduran. Jara paarthaalum ithuthaan guestian gedguraanga. ..nanum rompa nonthu pooiduwan. Hasband kidda solluwan. Awarum ungalai mathirithaan solluwaar. ..ivanga eppathaan thirunthu waangaloo terejala

friend
i like ur writing very much
this will help for all problems that v r facing.
anpudan
suba

be happy

வாங்கக்கா வாங்க‌ ;) இப்படி பெரிய‌ பெரிய‌ கருத்தை எல்லாம் அசால்டா சொல்ல‌ நம்ம‌ அக்கா கவிசிவா வேணும். சூப்பரு. என்னை முதல் ஒரு வருஷம் இப்படித்தான் பாடா படுத்தினாங்க‌... எனக்கு பதில் சொல்ல‌ வாய் படக்குனு வரும்... எங்க‌ ஆள் என்னை பிடிச்சு இழுத்துகிட்டு வந்துடுவார். ;) என்னை டாக்டரை பாருன்னு சொல்லாத‌ ஆளுன்னா அது என் அப்பா அம்மா மட்டும் தான். இதை பற்றி என்ன‌ ஏதுன்னு கூட‌ கேட்காத‌ மக்கள் இவங்க‌ தான். மற்ற‌ எல்லாரும் கேட்டாங்க‌, அட்வைஸ் பண்ணாங்க‌, திட்டுனாங்க‌... நான் சிரிச்சுகிட்டே கடவுளுக்கு எப்ப‌ தரணும்னு தெரியும்னு சொல்லிட்டு வந்தேன். உண்மையில் சம‌ கடுப்பு தான் கேட்டால்... ஆனால் நம்ம‌ ஆள் தான் கையையே விட‌ மாட்டாரே பேச‌.

முதல்ல‌ பெத்துக்க‌ தான் கேட்கறாங்கன்னா, ஒன்னு பிறந்ததும் அடுத்தது எப்ப, ஒன்னு போதும்னு முடிவு பண்ணிட்டீங்களான்னும் தயங்காம‌ கேட்கறாங்கய்யா!! ஆமாம்னு சொன்னா ஒத்த‌ பிள்ளையா நிக்க‌ கூடாதுன்னு அதுக்கு அட்வைஸ் பண்ணவும் ஒரு கூட்டம் இருக்கு. மக்க‌ திருந்தவே மாட்டாங்க‌.... கேட்குற‌வங்க‌ வாந்தி எடுக்கும் போது கூட‌ இருந்து நமக்கு சமைச்சும் போட‌ மாட்டாங்க‌, பெத்ததும் ஹாஸ்பிடல்ல‌ வந்து உதவ‌ மாட்டாங்க‌, பிள்ளையை பார்த்துக்கவும் உதவ‌ மாட்டாங்க‌... ஆனா யாரை பார்த்தாலும் எத்தன‌ பிள்ளை? விஷேஷம் உண்டா? எப்ப‌ நல்ல‌ சேதி சொல்வீங்க‌ போன்ற‌ உதவாத‌ கேள்வியை கேட்டு அழ‌ வைப்பாங்க‌. டோன்ட் கேர் மக்கா... பீ ஹேப்பி... யுவர் லைஃப், யு ஆர் தி பாஸ் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் கவிசிவா,

இந்த‌ கசப்பான அனுபவம் எனக்கும் உண்டு. இதில் என்ன‌ கொடுமை என்றால், திருமணம் ஆகி, 10 வருடங்கள் கழித்து பிள்ளை பெற்று கொண்ட‌ ஒருவரும் என்னை கேட்டதுதான். என்னை பொறுத்தவரை இது மிகவும் அந்தரங்கமான‌ விசயம், இதில் கேள்வி கேட்பது மிகவும் அநாகரிகம்.

நன்றி இமாம்மா! அறுசுவையில் பல தோழிகளின் வேதனைப் பதிவுகளே இந்த இடுகைக்கு காரணம்.

இமாம்மா பதிவில் எழுத்துப் பிழை ;-)
"ஆளமான" இல்லை "ஆழமான"
மன்னிச்சூ இமாம்மா மன்னிச்சூ... பதிலளி தட்டிட்டேன். இனி மாற்ற முடியாது :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

//வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து வீணடிப்பதற்கு அல்ல!//
இது எந்த‌ சூழலுக்கும் பொருந்தும்:)

ஊர் வாயை மூட‌ முடியாதுன்னு சொல்லுவாங்க‌.
டோண்ட் கேர் நு போயிட்டே இருக்க‌ வேண்டியது தான்.

//என் மனதை எனக்குப் பிடித்த விஷயங்களில் திருப்புகிறேன். சந்தோஷமாக இருக்கிறேன்.// குட்... இப்படித் தான் இருக்கனும்.:)

பயத்தையும் தயக்கத்தையும் தூக்கிப் போடுங்க. யாரும் கேட்டால் விஷேஷம் இருந்தால் கண்டிப்பாக நீங்க இப்படி கேட்காமலேயே நானே உங்ககிட்ட சொல்றேன் அப்படீன்னு உறுதியாக சொல்லுங்க. சந்தோஷமா இருங்க.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி சுபா. சந்தோஷமா இருங்கள். நல்லதே நடக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நன்றி வனி. இந்த கேள்விகள் தொடர்ந்துகிட்டே போகும்.
கேட்கறவங்க ஹாஸ்பிடல் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டாங்கன்னு நீங்க சொன்னது 100% உண்மை. அடுத்தவரை. குத்தி அதில் இன்பம் காணும் ஜென்மங்கள் சிலர்... காயப்படுத்தும் என்பதை உணராமலேயே ஜஸ்ட் லைக் தட் கேட்பவர்கள் பலர். நாமதான் நம்மை காப்பாத்திக்கணும்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

நீங்க சொல்பவர்களை போன்ற சில ஆட்களை நானும் பார்த்திருக்கிறேன். யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெற வேண்டும் என்பதை யாம் பெற்ற துன்பமும் இவ்வையம் பெற வேண்டும் நினைச்சிருப்பாங்களோ...

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

// டோண்ட் கேர் நு போயிட்டே இருக்க வேண்டியதுதான்//

அதேதான் நிகி. இவங்க சொல்லை எல்லாம் ரொம்ப மனசுல போட்டுக்கவே கூடாது. நன்றி நிகி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி நல்ல பதிவு. இங்க அறுசுவையில் அடிக்கடி வரும் பதிவுகள் எனக்கு கல்யாணம் ஆகி 2 மன்த்ஸ் ஆகுது. இன்னும் கன்சீவ் ஆகல இப்படித்தான். கஷ்டமா இருக்கும். கல்யாணம் ஆகி 40 வது நாள் கன்சீவ் ஆகலன்னாலே நமக்கு ஏதோ குறையோ அப்ப்டின்னு தோழிகள் குழம்பி மனஉளைச்சல்உடன் பதிவிடும்போது என்ன டொல்லறதுன்னே தெரில. என் தோழிக்கும் கல்யாணம் ஆகி 15 வருடம் ஆகுது. நிறைய கேள்விகள் இப்போதுதான் அவர் மனஉளைச்சல் குறைந்து உள்ளார். பிறக்கும்போது பிறக்கட்டும் இல்லன்னாலும் பரவாயில்ல. நானும் இதனாலயே யாரிடம் கேட்பது இல்லை. இந்த கேள்வியை. என் தோழிக்கு நான் தரும் ஒரே அட்வைஸ் பிறந்த ஹாப்பியா இரு. இல்லன்னா இன்னும் ஹாப்பியா இரு அவளும் அதையேதான் சொல்லுவாள்.

என் ஓரகத்திக்கும் 10 வருடங்கள் கழித்தே பிறந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தில் அவரை கேள்விகள் கேட்டு மனஉளைச்சலில் தள்ளவில்லை. இப்போது மருத்துவமனைகளிலும் இவர்களை வைத்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துள்ளது. அது குழந்தை இல்லாத கஷ்டத்தை விட இன்னும் கஷ்டம்.

Be simple be sample

அருமையான‌ பதிவு. எனக்கு இந்த‌ ப்ரச்சனை இல்லை. ஆனால் என் தோழிக்கு இருந்தது. என் தோழி வட்டாரம் தவிர‌ வெளி ஆட்கள் அனைவரும் கேட்டு கேட்டு அவள் மிக‌ பாதிக்க‌ பட்டால். இப்போது அது பழகி போய் கண்டுகொள்வது இல்லை. குழந்தை இல்லாதது ஒரு கஷ்டம் என்றால் சுற்றி இருப்பவர்கள் அதை விட‌ பெரிய‌ கஷ்டத்தை அவர்களுக்கு கொடுக்கிறார்கள்.

வனி அக்கா சொல்வது போல‌ யாரும் வாந்தி எடுத்தாலோ (அ) ஹாஸ்பிட்டலிலோ வந்து பார்க்க‌ உதவ‌ போவதில்லை. ஆனால் அவர்களுக்கு தான் நம் மீது மிகுந்த‌ அக்கறை என்பது போல‌ மேலுக்கு காட்டிக்கொள்வது. இது தேவையா? எதுக்கு இந்த‌ வீண் விளம்பரம்? இதனால் அவர்களுக்கு என்ன‌ ஆக‌ போகிறது?

என் நட்பு வட்டாரத்தில் தோழிகள் யாரும் இது போல் கேட்பது இல்லை. என் தோழியின் நிலை கண்ட‌ பின். அருமையான பதிவு கவி.

எல்லாம் சில‌ காலம்.....

:‍) இதில் மன்னிக்க‌ என்ன‌ இருக்கிறது! சொன்னதற்கு நன்றி. எனக்கு இந்த‌ ழ‌, ள‌ எப்போதுமே காலை வாரும். இனி இந்த‌ ஒரு சொல்லை மட்டுமாவது (எழுதும் போது உங்களை நினைத்துக் கொண்டு) சரியாக‌ எழுதுவேன். :‍)
¬¬¬
ஹ்ம்.. இன்று தட்டியவற்றிலெல்லாம் என்னென்ன‌ பிழைகள் இருக்கப் போகிறதோ! கீபோர்ட் சரியாக‌ வேலை செய்யவில்லை. ;(

‍- இமா க்றிஸ்

கவி நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன். உங்க்ள் வலை பதிவு பார்த்ததில் ரொம்ப சந்தோஷம். ரொம்ப காலமாக உங்கள் பதிவிற்காக காத்துக் கொண்டிருந்தேன்.
என் தோழியும் குழந்தை இல்லாமல் 8 வருடம் ரொம்ப கஷ்டபட்டார்கள். இப்போது உறவினர் குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள். எனவே இப்போதெல்லாம் யாரும் இந்த கேள்வியை கேட்பதில்லை. அவர்களும் சந்தோசமாக இருக்கிறார்கள். ஒரு வேளை வளர்ந்த பிறகு அவள் அம்மாவிடம் போய் விடுமோ என்ற பயம் இருந்தது. இப்போது எந்த பயமும் இல்லை. நன்றாக வளர்க்கிறார்கள். சந்தோசமாக இருக்கிறார்கள். தத்து எடுப்பது என்பது கடவுளையை வளர்ப்பதற்கு சமம். இது என் மனதில் தோன்றிய கருத்து.

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

நீங்க சொல்றது சரிதான் ரேவ்ஸ். இப்பல்லாம் குழந்தையின்மை சிகிச்சைன்னு சொல்லி பணம் பறிப்பதும் அதிகமாயிடுச்சு. இன்னும் விஷேஷம் இல்லை என்ற கேள்வி தம்பதிகளை இது போன்ற மருத்துவமனைகளை நோக்கி ஓடச் செய்கிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

உண்மைதான் பாலா. கேட்பவர்கள் பலரும் இது அடுத்தவரை காயப்படுத்தும் என்பதை அறிவதில்லை. சிலர் மட்டுமே காயப்படுத்தும் நோக்கில் கேட்கிறார்கள் (என் அனுபவத்தில்). கேட்காமல் இருப்பதே நாகரீகம்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

இமாம்மா மன்னிப்பு கேட்டது பதிலளி தட்டியதுக்குதான் :). எனக்கு ல,ள, ழ பிரச்சினை வராது ஆனால் சந்திப்பிழை நிறைய வரும் ;)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மிக்க நன்றி தாமரை. அப்படியே ஆகாயத்தில் பறக்கிறேன் :)

உண்மைதான் தத்து எடுத்து வளர்க்க மிகப்பெரிய மனம் வேண்டும். அக்குழந்தையும் பெற்றோரும் எல்லா வளங்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

பிள்ளைகளைப் பொறுப்பே இல்லாமல் வளர்த்து வைத்திருப்பவர்களும் இந்த கேள்வியை கேட்ப்பது கொடுமையா இருக்கு.
குழந்தைகளை பெற்றுக் கொள்வதை மட்டுமே சாதனையாக நினைப்பது தவறு. அவர்க்ளை சிறந்த முறையில் வளர்ப்பது தான் பெற்றோரின் கடமை. அதையெல்லாம் செய்யாதவர்கள் எப்படி மற்றவர்களுக்குப் பிள்ளை இருக்கா இல்லையான்னு கேட்ப்பது ?!
எனக்கு இரண்டாவது குழந்தைக்கு சிலர் ஒவ்வோரு மாதமும் கேட்டாங்க. நம் மனதை தர்ம சங்கடமாக்கி பார்ப்பதில் தான் அவர்களுக்கு மகிழ்வென்றால் என்னால் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டுமே என நினைத்துக் கொள்வேன்.

\\இதில் கணவன் மனைவியிடையேயான புரிதலும், முடிவும் மட்டுமே முக்கியம்.\\ மற்றவர்களை விடுங்க, ஆனால்... புரிந்து கொள்ளாத துணையை கொண்ட பெண்களின் நிலை தான், வடிக்கப் படாத எழுத்துக்கள்.
நான் அடிக்கடி ஊர்ல இருக்கிற பெண்களை நினைத்து வருந்தும் விஷயம் இது.

நம் பெரியவங்களால் பாரம்பரியமாக இது பின் பற்றி வந்து கொண்டிருப்பதால், நாம் தான் இந்த தலை முறையில் இந்த வார்த்தையை துண்டிக்க வேண்டும். நாம் கேட்க்காமல் விட்டு விட்டாலே நமக்கடுத்த தலை முறைக்கு இப்படி வார்த்தையை இவ்விஷயத்திற்க்கு உபயோகிக்க வேண்டுமென தெரியப் போவதில்லை.

\\வீட்ல விசேஷமா... கேட்கலாமா... \\
விசேஷம் வரும் போது தன்னாலே தெரிந்து விடும், எவராலும் மறைக்க முடியாது.

;)) அப்பவே புரிஞ்சுது. நானும் நிறையத் தடவைகள், எடுத்துக் கொடுக்கிறேன் என்று மறதியாக 'பதிலளி' தட்டிவைத்திருக்கிறேனே!

‍- இமா க்றிஸ்

வீட்ல விசேஷமா... கேட்கலாமா...

Ungal heading(i) parthaley oru santosamum kavalium serthullathu but ithey pol neriya per kastapattu kondirukirarkal but ketkiravanga yosikamal ketkanga neenga sonnathu pol makkal purinthu kolla villai kasta paduvanga nu nenaika mattanga husband & wife Purinthu kondal mattumay kavalai kurriyum ennaku 7 yrs Aaguthu no baby neengal sona varthai enaku roma pidichuruku sister (வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து வீணடிப்பதற்கு அல்ல!) very very beautiful,very nice thank u mam

தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும் வாணி.
உண்மைதான் வாணி. துணை புரிந்து கொள்ளவில்லை என்றால்தான் ரொம்ப கஷ்டம் .
//விஷேஷம் வரும் போது தன்னால் தெரிந்து விடும் //
அந்த பொறுமைதான் சிலருக்கு இல்லையே.
மிக்க நன்றி வாணி.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஜெயா மன நிம்மதியோடு வாழ்க்கையை ரசித்து வாழுங்கள். நல்லதே நடக்கும்.
நன்றி ஜெயா.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

தலைப்பிற்கு முதலில் வாழ்த்துக்கள்!
நிச்சயம் விவாதிக்க‌ பட‌ வேண்டிய‌ விஷயம். கண்டிப்பாக‌ கேட்க‌ கூடாத‌ கேள்வி. கேட்கிற‌ நமக்கு அவங்க‌ மேல அக்கறை இருக்கிறது என்றே வைத்து கொண்டாலும் சம்பந்தபட்டவர்களின் மனசையும் பார்க்கனும்.

பாவம் குழந்தை இல்லனு அவங்க‌ எவ்வளவு வருத்தத்தில் இருப்பாங்க‌ தெரியுமோ?
என் தோழி ஒருத்திக்கு திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. குழந்தை இல்லை. பார்க்கிறவங்க‌ எல்லாரும் கேட்கிற‌ முதல் கேள்வி இதுதான். எல்லாரையும் பார்ப்பதற்கும் ஏன் போனில் பேசுவதைக் கூட‌ தவிர்க்கிறாள். மனசு கேட்காம‌ கிட்டதட்ட‌ எட்டு மாதம் கழித்து பொனவாரம் கால் பண்ணேன்.

கடைசிவரை என்னாச்சு என்று கேட்ககூடாது என்ற‌ முடிவோடு தான் பேசினேன். அவளும் வருத்தமாகவே பேசினாள். சரிடி உடம்பை பார்த்துக்கோ என்று வைக்கும் நேரத்தில் உடைந்து அழுது விட்டாள். இப்படிதான் பார்ப்பவர்கள் எல்லோரும் இதை பற்றியே பேசி அழ‌ வைக்கிறார்கள் என்று. எனக்கு ரொம்ப‌ சங்கடமாய் போய்விட்டது. என்னால் முடிந்தவரை பாஸிட்டிவாக‌ பேசினேன். ஒருவழியாக‌ தேறினாள். நம்மால் மற்றவர்களின் வேதனையைக் குறைக்க‌ முடியாது குறைந்த‌ பட்சம் அதிகப்படுத்தாமலாவது இருக்கலாமே!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

போஙப்பா உஙகட போக்கே எனக்கு பிடிக்கவில்லை .இப்பிடி அடுத்த ஆக்களின் பெர்ஷனல் விஷயத்தில கொஞம் கூட வெக்கபடாமல் இங்கிதம் தெரியாமல் மூக்கை நுழைக்கிற ஆக்களை நான் ரெம்ப அருவருப்பா தான் பாப்பன் .உங்களை போல இதுங்கள் சொல்லுறதை எல்லாம் ஒரு பேச்சாவே எடுக்கமாட்டன் .இந்த நிலையில் என்னை யாரும் காய படுத்தவில்லை என்பதை விட காயப்படுத்த நான் அனுமதிக்கவில்லை .அதுக்கு முன்னமே என்னில் உரிமை எடுக்க விடாமல் தூக்கி கடாசி விடுவேன் .ஒரு பெண்மணி 3 குழந்தைகள் உடையவர் பழக்கமில்லாதவர் .குழந்தயை டாக்டரிடம் கூட்டி வந்திருந்தார் .நானும் ஊசி போட கூட்டி போயிருந்தேன் .நீஙகள் தமிழா என்று பேச்சை ஆரம்பித்தார் . பிள்ளைகள் வயசு சாப்பாடு குணம் பற்றி பேசி கொண்டிருந்தோம் . அவரது மகள் 3 வயசு அனுங்கி கொண்டிருந்தார் .ஓ காய்ச்சலோ சீசனுக்கு வரத்தான் செய்யுது .டொண்ட் வொரி என்றேன் . அவர் சொன்னார் இல்லை சீசனுக்கு இல்லை அப்பிடியெல்லாம் என் பிள்ளைக்கு சும்மா சும்மா காய்ச்சல் வருவதில்லை .என் மச்சினி புளியை விளையாட்டுக்கு ஊட்டி விட்டார் .அவருக்கு இன்னும் 5 வருசமா குழந்தை இல்லை .குழந்தை இல்லாததுக்கு எப்புடி குழந்தையை பற்றி தெரியும் .காய்ச்சல் வந்தா குழந்தை எப்புடி கஷ்டப்படும் என்ரு இந்த குழந்தை இருந்தாதானே விளங்குறதுக்கு . நல்லா திட்டி விட்டேன் என்றார்> இம்ஸ் க்கு கர்ர்ர் போல எனக்கு கோவம் சுர்ர்ர்ர்ர். மெதுவா மெல்லிய குரலில் அமைதியா அவரிடம் முதலே மன்னிப்பு கேட்டு விட்டு .........நான் கேட்டது உன்களுக்கு 2 மகள்கள் என்ரு சொன்னீஙகதானே அந்த 2 மகள்களூக்கும் இப்பிடி ஒரு நிலை வரவே வராது என்று கடவுள் உங்களூக்கு கையொப்பம் இட்டு தந்தாரா? அப்பிடி நிலை இந்த குழந்தைகளுக்கு வரக்கூடாது வந்ததால் இவர்களை இந்த சமூகம் தாழ்த்துவதை உஙளால் ஏற்றுக்கொள்ள முடியுமா?உஙகள் மச்சினி யும் உங்களைப்போல ஒரு அம்மா பெற்றெடுத்த குழந்தை தானே> கேட்டு விட்டு பதிலை எதிர்பாக்காமல் என் மகளுடன் கிளினிக் ல் இருந்த விளையாட்டுக்களை எடுத்து எதுவுமே நடக்காதது போல் விளையாட தொடங்கி விட்டேன் .அந்த அம்மா மூஞ்சி பொசுக்.......ஒரே ஒரு தத்துவம் என் மனசில் நானே உருவக படுத்தி வைத்திருப்பது உன் எதிகாலம் பற்றி தெரியாத நீ என் நிகழ்காலத்தை சல்லடை போடுகிறாயே நான் கடந்து போகும் இதே கட்டம் வாழ்க்கை எனும் வட்டத்தில் சுற்றி வராமல் போகுமென்று உனக்கு உறுதி படுத்தியது யார்???????? வேதனைகள் வெட்டு காயங்கள் மனதின் ரணங்கள் இழப்புகள் மருந்துகள் மாத்திரைகள் பயணங்கள் எல்லாத்தையும் அனுபவித்து குழந்தை பெட்றவள் நான் .இப்பொது எல்லாம் மறைந்து மறந்து போகவில்லையா.அதுபோலதான் இங்குள்ள சகோதரிகளூம் இந்த துன்பம் நிரந்தரம் இல்லை .இன்று வரை என் கெட்ட குணம் யாராவது குடும்ப சம்பாத்தியம் உன்களுக்கு வயசு என்ன இப்பிடி ஏதாவது கேட்டால் என் பதில் சொறி நான் பெர்சனல் கேள்விகள் கேக்கிறதும் இல்ல பதில் குடுக்குறதும் இல்ல தப்பா எடுத்து கொள்ளாதீங்கோ எதுவுமே நடக்காததுபோல் தொடர்ந்து அவர்களுடன் பழகுவேன் முடியவில்லையா டாட்டா பாய் பாய் தான் .காரணம் என்னை நேசிக்க கூடியவர்கள் தாராளமாக இருக்கிறார்கள்.கஷ்ட பட்டு டைப் பண்ணி இருக்கேன் அதுக்காக தேவையான அறிவுரையை எடுத்து கொள்ளுங்கோ

Hai friends, ellorukum vanakkam, naan arusuvaiyin puthiya kulanthai, ipo en thaai veetirkul poramathiri oru puthiya unarnu. my mail id is palanigeetha17@gmail.com.
nalla manithargal yaarum ipadi manathu punpadum padi ketka matarkal. keta manitharkal ketpathai patri naam yen varuthapadanum. be cool.
enakum marriage aki 10 years akuthu. kulanthai illa. niraya treatment eduthu ethuvum enaku kai kodukavillai. ipoluthu migavum vali vethanaiyodu valkaiyai nagarthikondu irukiren. IUI, IFV elam seithuvitten no improvement. enaku utres wall thadimanaga iruku, harmons normalaga irupathilai, itharkaga edutha medicine elam sideeffect aki epo enaku health la neraya problem iruku. en mamavuku(husband) modility power % kuraivaga irunthathu. avarum treatment eduthu sariyakiya piraku than IUI,IVF seithom. ini treatment ethum seya viruppamillai.oru oru muraiyum treatmentukaga hospital selumpothu anku anupavikum vali, solla kooda vethanayaga iruku. scan ethanai murai seivargal endral solla koda enidam answer illai. oru murai IUI seya period clear ana date la irunthu karu muttai rupture akum varai daily internal scan. thanga koda ipoluthu enidam strenth illai. treatment seithu seithu nambikai, thairiyam,sakthi, amount elathaiyum ilanthuviteen.Treatment kaga 9 lacks selavu seithen. doctor solkirar enkalal mudintha ela treatmentum seithum success agavillai. ini kadavul sakthi thaan unaku kulaithai pirakka vaikum endru. enaku normalaga kulanthai pirakka vali irunthal solungal. naan kadavulidam ketkum ore varam ennavendral ini ivulakil yarukum kulanthi ilai endru oru vethanaiyai thara vendam endru matum thaan. migavum kodiya vethanai ithu. kadvul irukirara endru sila neram enaku kavalayaga thaan irukum. ini kaalam than pathil sollum