தேதி: July 17, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
ஈரல் - கால் கிலோ
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தக்காளி - ஒன்று
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிது
தாளிக்க :
பிரிஞ்சி இலை - ஒன்று
பெருஞ்சீரகம் - அரை தேக்கரண்டி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வாணலியில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பெருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பின்னர் தக்காளி சேர்த்து நன்கு பிரட்டவும். தக்காளி குறைவாக சேர்த்தால் தான் இந்த பொரியல் நன்றாக இருக்கும்.

தக்காளி நன்கு வதங்கியதும் தனி மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும்.

அதனுடன் நன்கு சுத்தம் செய்த ஈரலை சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டவும். இதை மூடி போட்டு நன்கு வேக விடவும். 2 நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து அடி பிடிக்காமல் கிளறி விடவும்.

ஈரல் நன்கு வெந்த பின் ஒரு கைப்பிடியளவு கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கவும்.

கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான கறிவேப்பிலை ஈரல் பொரியல் தயார்.

தக்காளி குறைவாக சேர்க்கவும். அதிகமானால் சுவை மாறிவிடும்.
கறிவேப்பிலையை அதிகம் வேக விட வேண்டாம். லேசாக சூடேறினாலே நன்கு வெந்து மொறுமொறுப்பான சுவையுடன் இருக்கும்.
Comments
பாலா
நேக்கு கொத்தமல்லி மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது ;) வேர் இஸ் ஈரல்? வேர் இஸ் கறிவேப்பிலை?? ஒளிச்சு வெச்சு படங்காட்டினா செல்லாது ;) ஹஹஹா. வித்தியாசமா இருக்கு பாலா... நான் இதுவரை இப்படி தனி தனியா எல்லாம் வாங்கி சமைச்சதில்லை :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி டீம்
ஜெட் வேகத்துல வேலை செய்றீங்க. இவ்ளோ ஸ்பீடு எப்டி? எப்டியோ அழகாக வெளியிட்டமைக்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
ஈரல் கறிவேப்பிலைலாம் கொத்தமல்லிக்கு உள்ள ஒளிஞ்சிட்டு இருக்கு. வெக்கமா இருக்காம் அதனால வெளில வரல. கொஞ்சம் தான் கொத்தமல்லி போட்டேன் அது என்னனா திமிர் பிடிச்சி மத்த எல்லாத்தையும் மறச்சிடுச்சி. என்ன பண்ண? பரவாயில்ல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க.
எல்லாம் சில காலம்.....
பாலநாயகி.
இன்று ஈரல் பொரியல் செய்தேன் மிக மிக அருமை எப்பொழுதும் ஈரல் என்றாலே ஓடும் என் மகன் இன்று விரும்பி சாப்பிட்டான் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது மிக்க நன்றி.
சிராஜ்
நன்றி சிராஜ். செய்து பார்த்து கருத்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
எல்லாம் சில காலம்.....