ரெட்டை ஜடை

பள்ளி பருவத்தை நினைவூட்டுகிறது. இரட்டை ஜடை பின்னி, இரு ஜடைகளையும் இணைக்கும் மல்லிகை பூ பாலம். அதன் அழகு. அய்யோ, அரும்பு மீசை இளசுகளை பயணிக்க தூண்டும் அழகு அல்லவா அது. இன்று ஒற்றை ஜடை பின்னுவதை காணவே கனா காண வேண்டும் போல. தூக்கி வாரி ஆண்களை போல திரிகின்றனர் பெண்களும்.

மஞ்சள் பூசிய முகம்
மஞ்சள் என்றாலே வெள்ளிக்கிழமை தான் ஞாபகத்திற்கு வரும். அன்றைய நாட்களில் ஏதோ ஓர் எக்ஸ்ட்ரா சந்தோஷம் காரணமே இல்லாமல் பூக்கும். மஞ்சளில் இருந்த மகத்துவம் அறிந்து தான், பெண்களுக்கு சரும பிரச்சனைகள் வராமல் இருக்க, முன்னோர் மஞ்சள் பூசி குளிக்க கூறினர். இன்று மஞ்சளின் நற்குணம் இருக்கிறது என்று விற்கப்படும் பூச்சுகளை வாங்கு போசிக்கொள்ளும் பெண்கள், மஞ்சள் பூச தயங்குகிறார்கள்.

பாவாடை தாவணி
இது தமிழ்நாட்டு பெண்களின் ஆழகை அதிகரித்து காட்டும் உடை. இன்று ஏதேனும் பண்டிகை நாட்களில் மட்டும் தான் அணிகின்றனர். உண்மையிலேயே கல்லூரிகளிலும், பண்டிகை நாட்களிலும், ஆண்கள் எப்போது பெண்கள் பாவாடை தாவணி அணிந்து வருவார்கள் என்று ஏங்குவது உண்டு. ஆனால், இன்றைய பெண்களுக்கு புடவை, பாவாடை தாவணி அணியவே மறந்து வருகிறார்கள் என்பது தான் நிதர்சனம். (ஒரு சிலரை தவிர)

கால் கொலுசுகள்
மணிகள் தொங்கும் அந்த கால் கொலுசுக்கு பெண்கள் அடம்பிடித்த காலம் மலையேறிவிட்டது. பிளாஸ்டிக் கொலுசுகளை விரும்பு அணிகின்றனர் இன்றைய பெண்கள். அது பார்ப்பதற்கு மட்டும் தான் அழகு. ஆனால், பழைய மணி கொலுசுகள் குருடனை கூட மெய் சிலிர்க்க வைக்கும் சத்தம் எழுப்பும்.

அன்பு சூர்யா,

தயவு செய்து பிற‌ தளங்களில் இருந்து தகவல்களை இங்கு பேஸ்ட் செய்யாதிர்கள். அது இந்த‌ தளத்தின் தரத்தை வெகுவாக‌ பாதிக்கும். இதைப் பற்றி விதிமுறைகளும் இருக்கின்றன‌. இந்த‌ தளம் நம் போன்றவர்களுக்கு எத்தனையோ விதத்தில் பயன்படுகிறது. நான் இந்த‌ தளத்தை 4 ஆண்டுகளாக‌ உபயோகப்படுத்துகிறேன். அதற்கு முக்கிய‌ காரணம் இதன் நேர்மைதான். அது சீர்கெடும் வகையில் நாம் நடந்து கொள்ள‌ வேண்டாம். நன்றி.

மேலும் சில பதிவுகள்