பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டை

தேதி: July 18, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (4 votes)

 

பொட்டுக்கடலை - முக்கால் கப்
டேட்ஸ்(நறுக்கியது) - கால் கப்
பால் அல்லது நெய் - தேவைக்கு


 

தேவையானவற்றை தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு கடாயில் பொட்டுக்கடலையை போட்டு வறுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் நறுக்கிய டேட்ஸ் போட்டு இரண்டு சுற்று அரைத்தால் டேட்ஸ் பொடியாக ஆகிவிடும்.
கடலை ஆறியதும் அதையும் அரைத்த டேட்ஸுடன் சேர்த்து பொடிக்கவும்.
பொட்டுக்கடலை டேட்ஸ் பொடியை ஒரு தட்டிற்கு மாற்றி அதனுடன், பால் அல்லது நெய் சேர்த்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
சுவையான பொட்டுக்கடலை டேட்ஸ் உருண்டைகள் தயார். குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான இனிப்பு.

நெய் சேர்த்த உருண்டைகளை நான்கு நாட்கள் வரை வைத்து உண்ணலாம். பால் சேர்த்து பிடிக்கும் உருண்டைகள் ஒரே நாளில் காலி பண்ணிவிடுவது நல்லது.

இந்த உருண்டைகளை டயட்டில் இருப்பவர்கள் கொழுப்பில்லாத பால் சேர்த்து உண்ணலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செய்து சாப்பிட்டாச்சு வாணி. யமி!! பிடிச்சிருக்கு.

அறுசுவை க்ரூப் ஃபேஸ்புக் பேஜ்ல படம் போட்டிருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

குறிப்பு ரொம்ப‌ அருமை பார்க்கும்போதே சாபிடனும் போல‌ இருக்கு இதை 1 1/2 வயது குழந்தைக்கு கொடுக்கலாமா

செய்துட்டு பதிவிடலாம்னு விட்டு வெச்சேன், ஆனா செய்யவே நேரமில்லை :( இந்த‌ வாரமாவது கட்டாயம் செய்து ஃபேஸ்புக்ல‌ ஃபோட்டோ ஷேர் பண்றேன் வாணி. நல்ல‌ சுவையான குறிப்பு... பார்க்கவே அருமையா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Seydhutten vaany... romba super :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இமா, வனி மிக்க நன்றி :)

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் சங்கீதா.
ஒன்றரை வயது குழந்தைக்கு கொடுக்கலாம். மலச்சிக்கல் வராமல் தவிர்க்க நிறைய தண்ணீர் குடிக்க கொடுக்க வேண்டும். மிக்க நன்றி :)