தேதி: July 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
மாங்காய் - 2
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
வெறும் வாணலியில் வெந்தயம், கடுகு சேர்த்து நன்கு வறுத்து பொடியாக அரைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய மாங்காய் சேர்த்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி வேக விடவும். இடையிடையே சிறிது சூடான நல்லெண்ணெய் சேர்க்கவும்.

மாங்காய் 10 நிமிடம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள வெந்தயம் கடுகு தூளை சேர்க்கவும்.

மேலும் எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கவும். சுவையான மாங்காய் ஊறுகாய் தயார். இது ஒரு வாரம் வரை கெடாது. நீண்ட நாள் வைக்க விரும்புவோர் வினிகர் சேர்த்து கலந்து வைக்கவும்.

தண்ணீர் படாமல் செய்ய வேண்டும்.
இடையிடையே நல்லெண்ணெய் சேர்ப்பதானால் சூடான நல்லெண்ணெயே சேர்க்கவும்.
Comments
பாலா
சூப்பர் ;) எனக்கு ஊறுகாய் போட ஆசை... ஆனா இங்க இப்ப ஊத்தும் மழைக்கு வேலை செய்யவே தோன மாட்டங்குது ;(
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு மிக்க நன்றி
எல்லாம் சில காலம்.....
விட்டது
* இதில் கடுகு சேர்த்திருப்பதால் இந்த நிறத்தில் தான் இருக்கும்.
* கலருக்காக எதுவும் சேர்க்க தேவையில்லை.
* நீண்ட நாள் வைக்க விரும்புவோர் வினிகர் சேர்க்க விரும்பாவிடில் சூடு பண்ணின 50 கிராம் நல்லெண்ணையை மேலே ஊற்றி மூடி வைக்கவும். நீண்ட நாட்கள் கெடாது
எல்லாம் சில காலம்.....
வனி அக்கா
இது மழைலயும் செய்யலாம். ஈஸி தான். காய வைக்க தேவையில்லை. செய்து ஃப்ரிட்ஜில வச்சிடுங்க. இல்ல வினிகர் சேத்தீங்கனா வெளிலயே கூட வைக்கலாம்.
எல்லாம் சில காலம்.....