தோழிஸ் எனக்கு 2 பொண்ணுங்௧
பெரிய குட்டிக்கு 4 வயது, சின்ன வாண்டுக்கு 1,1\2 வயது
சின்ன குட்டிஸ் பெரிய பொண்ண அடிக்௧டி கடித்து விடுகிறாள் சிலசமயம் இரத்தம் வரும்படி கடித்துவிடுகிறாள்
வலியில் சிலசமயம் அழும்போது குட்டிஸை அடித்துவிடுகிறாள்
குட்டிஸ் அழதொடங்கினாள் 2மணிநேரம் தொடந்து அழுகிறாள்
சமாதானம் செய்ய முடியவில்லை ரொம்ப அடம்பிடிக்கிறாள்
2பேரும் இப்போது ஒன்றா௧ விளையாடுவது இல்லை
ஒன்றா௧ விளையாடினால் வீட்டில் போர்௧ளம் தான்
என்னசெய்தால் இவர்கள் அமைதியா௧ இருப்பார்௧ள்
கல்யாணி
ஹஹஹா ;) எல்லார் வீட்டிலும் இப்படி ஒரு குட்டி இருக்கும் போல. எங்க வீட்டில் என் தங்கை மகள் அப்படி கடிக்கும் பழக்கம் இருந்தது. அவ கிட்ட வரான்னாளே எல்லாரும் ஓடுவாங்க. இப்ப நினைச்சா கூட சிரிப்பு வருது. இப்போ அந்த பழக்கம் போயிடுச்சுங்க.
குழந்தைகளுக்கு ஒவ்வொரு வயதில் ஒரு சில பழக்கங்கள் வந்து போகும்... அதை பற்றி பெரிதாக கவலை வேண்டாம். அழுது அடம் பிடிப்பது எந்த மாதிரி விஷயத்துக்காக என்று கவனிங்க. சில நேரம் பிள்ளைகள் நம் கவனத்தை ஈர்க்க அழுவார்கள்... அது பிரெச்சனை இல்லை, சிறிது காலத்தில் மறைந்து போகும், அந்த பழக்கம். ஆனால் எதையாவது கேட்டு அடம் பிடித்து அழுகிறார்கள் என்றால் கவனம் தேவை... அழுதால் அந்த பொருள் கிடைக்காது என்பதை புரிய வையுங்கள்... இல்லையெனில் எப்போதும் அழுது சாதிக்கும் பழக்கம் வர வாய்ப்பு உண்டு. கடிக்காமல் இருக்க அன்பாக எடுத்துச் சொல்லுங்கள்.
பெரியவள் புரிந்து கொள்வாள்... 4 வயதாகிறது, எந்த சந்தர்ப்பத்தில் குழந்தை கடிக்க வந்தாலும் தன்னை காத்துக்கொள்ள கற்றுக்கொடுங்கள். அவளிடம் சிக்காமல் இருக்க பழகுங்கள். அந்த நிமிட கோபம் போனால் பிள்ளை கடிக்காது. இருவரும் சேர்ந்து விளையாடினாலும் சன்டை வராத வகையிலான பொருட்களை வாங்கி கொடுங்கள். ஒரே பொருளை ஷேர் பண்ண சொல்லாதீங்க, இப்போதைக்கு அது பிரெச்சனை வளராமல் பார்க்கும். இது என்னுது, அது உன்னுது, ஏன் எடுத்தன்னு தான் பாதி சண்டை வரும். கொஞ்ச நாள் அவங்க சேர்ந்து விளையாடும் போது அருகிருந்து விட்டுக்கொடுத்து விளையாட பழகுங்கள். எல்லாம் சரியாகும்... இந்த நிலையை எல்லாரும் கடந்து தான் வருகிறோம்... பயப்படாதீங்க :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
vani akka
Thanks akka
Nan rompa payanthutaen
ML