Transabdominal Cervical Cerclage

உங்களில் யாறாவது Transabdominal Cervical Cerclage(Surture placed through Abdomen) செய்து இருக்கிறிர்களா? எனக்கு இரண்டு முறை Abortion ஆகி விட்டது. அதற்கு காரணம் என் cervix weak ஆக இருக்கிறது என்று சொல்கிறார்கள். முதல் முறை நான்காம் மாதத்தில் abortion ஆகி விட்டது. இரண்டாம் முறை ஐந்தாம் மாதத்தில் abortion ஆகி விட்டது. இரண்டாம் முறை எனக்கு Transvaginal Cervical Cerclage(Surture placed through Vagina) செய்து இருந்தார்கள். அதையும் தாண்டி கரு தங்காமல் வெளியே வந்து விட்டது.அதனால் அடுத்த முறை Transabdominal Cervical Cerclage செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள். உங்களில் யாராவது செய்தது உண்டா? பதில் கூறவும்.

Transvaginal Cervical Cerclage செய்த சகோதரிகள் அறுசுவையிலிருக்கிறார்கள். முன்பு பேசி இருக்கிறார்கள்.

//உங்களில் யாராவது செய்தது உண்டா? பதில் கூறவும்.// :-) ஆம் / இல்லை என்று இரண்டில் ஒன்று சொல்லச் சொல்லிக் கேட்கவில்லை நீங்கள். இதுவரை யாரும் பதில் சொல்லாததால்... இமாவின் பதில் இங்கே. :-)

உங்கள் கேள்வி என்ன? சந்தேகம் என்ன? எதுவும் புரியாமல் பொதுவாக என் மனதில் தோன்றுவதைத் தட்டுகிறேன்.

//Transabdominal Cervical Cerclage // செய்யவில்லை. இருந்தாலும்... உங்கள் இடத்தில் இமா இருந்தால்... கட்டாயம் செய்வேன். எத்தனை ரிஸ்க் என்று யார் சொன்னாலும் செய்வேன்.

//அதையும் தாண்டி கரு தங்காமல் வெளியே வந்து விட்டது.// ஒரு தடவை ஆனதால் மறு முறையும் அப்படி ஆவதற்கான சாத்தியங்கள் அதிகம் சகோதரி.

வெளியேறினால், அது கரு. உள்ளேயே இருந்தால்! அதுதான் என் குழந்தையாக பின்னால் கையில் வளரப் போகிற சின்னவர். கட்டாயம் குழந்தை வேண்டும்; இந்தச் சிகிச்சையினால்தான் அது சாத்தியம் என்றால் தயங்க மாட்டேன். செய்யாவிட்டால்!! என் கவனமின்மையால் குழந்தையை இழக்க நேரலாம். அப்படி ஆனால்... பிறகு ஒருபொழுதும் என் மனது என்னை நிம்மதியாக இருக்க விடாது.

ப்ளஸ் மைனஸ் எல்லாவற்றிலும் இருக்கலாம், இருக்கும். ஆரோக்கியமான குழந்தையைத் தாங்கியிருக்கிற பிரச்சினைகளே இல்லாத தாய்மாருக்கும் கூட கடைசி நேரத்தில் பிரச்சினைகள் வருவது உண்டு.

நம்பிக்கைதான் வாழ்க்கை. நிச்சயம் நல்ல மருத்துவர், நல்ல மருத்துவமனை என்று தேடித்தான் சிகிச்சைக்குப் போயிருப்பீங்க. தைரியமாக இறங்குங்க. டாக்டர் சொல்வதைக் கவனமாகக் கேட்டு நடங்க. சிகிச்சை பற்றிய விபரங்களை உங்கள் மருத்துவரே விளக்கியிருப்பார். சிசேரியன் வேண்டாம், நார்மல் டெலிவரி என்கிற பேச்சுக்கு இடம் இல்லை. டாக்டர் சொல்வதுதான் முடிவாக இருக்கும்.

என்ன சிரமம் வந்தாலும் குழந்தையைப் பார்த்ததும் எல்லாம் மறந்து போய்ரும். பிறகு அந்த சந்தோஷம் ஒன்றுதான் நினைவு இருக்கும்.

சும்மா தைரியம் சொல்லல. ஒரு காலம், வேறு ஒரு பிரச்சினைக்கு... என்னிலும் சிலர் மருத்துவம் பழகி இருக்கிறாங்க. இப்போ சரியாகி இருக்கிறேன். அதனாலேயே மருத்துவத்தின் மேல் ஒரு நம்பிக்கை. பயம் வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

நீங்கள் செய்தீர்களா என்பதை விட உங்களுக்கு இது பற்றி குறிப்பா என்ன தகவல் and விளக்கம் வேணும் என்பதை குறிப்பிட்டால் பதில் தர சுலபமாக இருக்கும் .

ஹாய் எனக்கும் இரண்டு முறை 5 மற்றும் 6 மாதங்களில் Miscarriage நடந்திருக்கிறது.எனக்கு கருப்பை வாயில் தையல் தான் அடுத்த முறை கருவுறும் போது போட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
2 வருடங்கள் முழுதாக ஆகியும் என் மனதில் உள்ள பயத்தின் காரணமாக இன்னும் கரு உருவாவதை தள்ளி போட்டு கொண்டிருக்கிறேன்.
ஆனால் அப்படி தையல் போடும் பொழுது முழுக்க பெட் ரெஸ்ட்டில் தான் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்களே.நீங்கள் அப்படி தான் இருந்தீர்களா?
நீங்கள் குறிப்பிட்டுள்ள முறை பற்றி மேலும் தோழிகள் யாராவது விளக்கம் சொன்னால் நம்மை போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இமாவின் பதிலை கண்டதும் மனதில் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது.நல்லதே நினைத்து இந்த முறை முயற்சிப்போம் என்று.
நன்றி இமா...

தோழி௧ளே கருப்பை வாயில் தையல் போட்டு பின்பு குழந்தையை
ஆரோக்கியமா௧ பெற்றெடுப்பதற்கா௧ தான் மருத்துவர் இம்முறையை
கையாளுகின்றனர்

அவர்௧ள் மருத்துவ சேவையை இம்முறையை திறம்பட செய்து விடுவார்௧ள் நாம் தான் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பது
நம் கையில் தான் உள்ளது

அதற்கு ஒரே வழி bed rest எடுத்தால் மட்டுமே முடியும்
கருப்பைக்குள் வளரும் குழந்தை சில மாதத்தில் வெளி உலகத்தை சீக்கிரம் காண காரணம் கருவளர்ச்சி அடைந்து கொண்டு வருவதால் கருப்பையானது அதன் தாங்கும் சக்தியை இழப்பதால் தான்

இத்தகைய இழப்பை சரிசெய்ய தான் கர்ப்பபைவாயில் தையல் போட்டு பாதுகாப்பா௧ பெற்றெடுக்௧ வைப்பது

வேலைப்பளு அதி௧மா௧ செய்தாலும் போதுமான ஓய்வு இல்லாவிட்டாலும் தோல்வி தான்

ஓய்வு தான் முக்கியம்

மருத்துவர் பரிந்துரைப்படி நடந்துகொள்வது மி௧வும் நல்லது

ML

நன்றி imma and Kalyani sister. எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது இந்த வகையான Cerclage பற்றி.. அடுத்த முறை நான் கண்டிப்பாக Transabdominal Cerclage செய்து தான் ஆக வேண்டும். அதில் உறுதி ஆக உள்ளேன். இந்த கேள்வியை கேட்டதற்கு காரணம், நான் தற்போது kochi ல் வசித்து வருகிறேன். அடுத்த முறை Coimbatore ல் treatment எடுக்கலாம் என்று நினைக்கிறேன். எனது native coimbatore தான். Coimbatore ல் இந்த Transabdominal Cerclage செய்யும் doctor பத்தி தெரிந்து கொள்ள தான் இந்த கேள்வியை தட்டினேன்.

@Mazin - எனக்கு முதல் முறை abortion ஆவதற்கு முன்பு நான் அதிகம் travel செய்து விட்டேன். Travel காரணத்தினால் இப்படி ஆனதென்று நினைத்து விட்டோம். முதல் குழந்தைக்கு நான் Coimbatore ல் treatment எடுத்து கொண்டேன். இரண்டாம் முறை நான் kochi வர வேண்டிய சுழல் ஆகி விட்டது. அதனால் இங்க இருந்த doctor எனக்கு இரண்டாம் முறை safety ஆக Vaginal Stitch போட வேண்டும் என்று சொன்னார். அதன் படி செய்தோம். ஆனால் BedRest எதுவும் எடுக்கவில்லை. Vaginal Stitch செய்தால் கண்டிப்பாக Bed Rest வேண்டும்.

//Travel காரணத்தினால் இப்படி ஆனதென்று நினைத்து விட்டோம்.// ம். சில சமயம் நாமாகவே இதுதான் காரணம் என்று நினைத்துக் கொள்வோம். நாம் சொல்வதை வைத்து மருத்துவர்களும் அதே முடிவுக்கு வருவார்கள். இதற்கு சந்தர்ப்பத்தைத்தான் காரணமாகச் சொல்லலாமே தவிர, உங்கள் தப்போ மருத்துவர்கள் தப்போ எதுவும் இல்லை.

//Vaginal Stitch செய்தால் கண்டிப்பாக Bed Rest வேண்டும்.// இதுவும் கூட ஆரம்பத்தில் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டுப் பிறகு வேலைக்குப் போய் நல்லபடி குழந்தை பெற்றவர் ஒருவரை எனக்குத் தெரியும். அவர் தாதி. விஷயம் தெரிந்தவர். தன் நிலை அறிந்து சரியான வழிநடாத்துதலோடு கர்ப்ப காலப் பயணத்தைத் தொடர்ந்திருப்பார்.

பரவாயில்லை, போனது போகட்டும். எல்லாம் அனுபவம்தான். அவையெல்லாம் அடுத்த தடவை கவனமாக இருக்க உதவும். பயமில்லாமல் சிகிச்சைக்கும் போங்க. என்ன சந்தேகமானாலும் டாக்டர்ட்ட கேளுங்க. டாக்ரட்ட மட்டும் கேளுங்க. சந்தோஷமா இருங்க. எல்லாம் நலமாகும்.

‍- இமா க்றிஸ்

யாராவது கார்த்திக்கு உதவ முடியுமா! //Coimbatore ல் Transabdominal Cerclage செய்யும் doctor பத்தி தெரிந்து கொள்ள// விரும்புறாங்க.

உங்களுக்கு தெரிஞ்ச விபரத்தைச் சொல்லுங்க. சகோதரி யோசிச்சுப் பார்த்து தனக்கு ஏற்ற டாக்டர் / மருத்துவமனையைப் பிடிச்சுப்பாங்க.

இப்பொழுதே... உங்கள் உதவிக்கு நன்றி.

‍- இமா க்றிஸ்

பிரக்னன்ஷி உங்களுக்கு நாச்சுரலா இருக்கும் பட்சத்தில இதுக்கு நீங்கள் ஸ்பெசல் ஹோஸ்பிடல் தேடி ற்றீட்மெண்ட் எடுக்க தேவையில்லை . நீங்கள் இருக்கும் ஏரியாவிலேயே போட்டு கொண்டால் அலைச்சலை தவிர்க்கலாம் . பெட் ரெஸ்ட் ன்னு சொல்லி ஓவரா படுத்துட்டே அதே நினைவா இருந்தா சுகர் ம் வேறு சில உபாதைகளும் வரும் . ஸ்ரிச் போட்டு விட்டு பெட் ரெஸ்ட் எடுத்த போது ( டுவின்ஸ் பேபி) 5 மாசத்தில் அபோசன். அடுத்த தடவை ச்ரிச் போட்டு கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று சந்தோசமாக ஓடி ஆடி குழந்தை பெற்றேன் . போட்ட அந்த மாசம் மட்டும் ஓய்வு எடுத்தேன் . 3 வது தடவையும் போட்டு ஒரே பயணம். ஜெர்மன் டு பிரான்ஸ் . பிரான்ஸ் டு கனடா . முதல் குழந்தையை பாக்குறது . தூக்குறது . சொப்பிங் . டிரைவிங் எல்லாம் . எல்லா குழப்படியும் பண்ணி அடுத்த குழந்தையையும் பெற்றெடுத்தேன் . இதுல இருந்து என்ன தெரியுது கட்டாயத்துக்கு எதுவும் செய்ய கூடாது . கட்டாயத்துக்கு எடுக்குற ஓய்வை விட சந்தோசமா வழக்கம்போல இருக்குறது உடம்புக்கு நல்ல தென்பை குடுக்கும் .ரெஸ்ட் எடுக்குறதில சிரமம் இல்லாட்டி தராளமா எடுக்கலாம் நல்லதுதான் . பட் எனக்கு ரெஸ்ட் எடுக்குறது ஜெயில் குள்ள போட்டு டாச்சர் பண்ணுற மாதுரி .சோ எது கடினமோ அதை விடுத்து கட்டுபாடுகள் கட்டாயங்களை தவிர்த்து ரிலாக்ஸா மன தைரியமா இருங்கோ . குழந்தை கைல கிடைக்கும் .ரெஸ்ட் கூட அளவோடதான் இருக்க வேணும் .தேவையில்லாத கவலைகள் பயங்கள் கூட இதுக்கெல்லாம் எதிரிதான் .

Thank you so much friends for your advice.

மேலும் சில பதிவுகள்