பார்லி பயறு பொங்கல்

தேதி: July 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

பார்லி - ஒரு கப்
பச்சை பயறு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
சீரகம்
மிளகு
எண்ணெய்
கறிவேப்பிலை
நறுக்கிய இஞ்சி


 

பார்லி மற்றும் பச்சைபயறை சுத்தம் செய்து தயாராக எடுத்து வைக்கவும்.
பார்லியை கழுவி அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பார்லி ஊறியதும் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பயிறை சேர்த்து உப்பு போட்டு 20 முதல் 30 நிமிடங்கள் குக்கரில் வேக வைக்கவும்.
ஒரு கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து பொங்கலுடன் கொட்டவும்.
ஆரோக்கியமான பார்லி பொங்கல் தயார். இதற்கு எல்லாவித சட்னிகளும் பொருத்தமாக இருக்கும்.

இதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் அரிசி உணவுகளை தவிர்க்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த உணவு.

பார்லியை தமிழில் வாற்கோதுமை என்பார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்