2 வயது குழந்தைக்கு மேக்அப்

எனக்கு மேக்அப் பற்றி சொல்லித்தர முடியுமா?? எனது 2 வயது மகளுக்கு மேக்அப் போட ஆசையாக உள்ளது. நான் இதுவரை மேக்அப் பயன்படுத்தியது இல்லை. 2 வயது குழந்தைக்கு எதை போட்டால் நல்லா இருக்கும் என்ன ப்ரான்ட் சிறந்தது. எப்படி பயன்படுத்த வேண்டும். ஏதாவது வாங்கி போட்டு குழந்தைக்கு நோவினை தந்து விடக்கூடாது என அஞ்சுகிறேன் .

2 வயது குழந்தை... சும்மாவே அழகா தானே இருப்பாங்க‌ :) மேக்கப் எதுக்கு? சரி உங்க‌ விருப்பம். நல்ல‌ ப்ரான்டா வாங்குங்க‌. முதல்ல‌ சிறிது போட்டு ஒத்துக்குதான்னு பாருங்க‌... அப்ளை பண்ணி ஒரு 8 மணி நேரம் விட்டுடுங்க‌... எதாச்சும் ஸ்கின்ல‌ சிவப்பு, அரிப்புன்னு ஏற்படுதான்னு பார்த்துட்டு போடுங்க‌. ரொம்ப‌ நேரம் மேக்கப் முகத்துல‌ விடாதீங்க‌. ப்ரான்டட் ஹெர்பல் ப்ர்டாக்ட்ஸ் கிடைச்சா பெட்டர். சும்மா ஒரு பவுடர், பொட்டு, கண் மை, லிப்ஸ்டிக் போதுமே... குழந்தைக்கு அள

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

2 வயசு குழந்தைக்கு நீங்கள் மேக்கப் போடுவது சரி அந்த மேடம் இதுக்கு ஒத்து கொள்ளுவாங்களோ ? . ஒத்து கொண்டாலும் பிஞ்சு குழந்தைக்கு அதை மெயிண்டன் பண்ண தெரியுமோ .எல்லாத்தையும் கலைச்சுட்டு அதைவிட அழகா வந்து நிக்கமாட்டாங்களோ ?? .என்னோட 2 வயசுக்கு பவுடர் நல்லதில்ல ன்னு ஒரு டாக்டர் சொன்னதுக்கு பிறகு அது கூட போடுறது கிடையாது . கெட் பாண்ட் போட்டு பாக்க புடிக்கும் எனக்கு . அந்தந்த ட்ரெஸ் க்கு ஏற்றாப்ள 100 க்கு மேல வாங்கியும் செய்தும் 1 கூட போட விட்டதில்ல . சரி நம்மட விருப்பத்தை குழந்தை மேல திணிக்க கூடாது எண்டு விட்டுட்டன் . மேக்கப் ல நல்ல பிராண்ட் வாங்கிறதா இருந்தா மேட் இன் பிரான்ஸ் நல்லது . அதைவிட நாச்சுரல் ஆ செய்தது நல்லது . லிப்டிக் செரி ,ஸ்ராபெரி பழங்கள் ல செய்தது கிடைக்கும். பட் அதுவும் 3 பிளஸ் தான் .

நன்றி வனிதா

நன்றி surejini

நானும் பவுடர் கண்மை தவிர எதுவும் போடமாட்டேன் குழந்தைக்கு இப்போ ரீசன்டா ஒரு functionகு lipstick போட்டு பார்த்தப்போ அழகா பொறுமையா இருக்கா அதோட வீட்ல எல்லார்டையும் உதட்ட பார்க்க சொல்லுறா அவ்ளோ சந்தோஷம் .. அதான் இன்னும் கொஞ்சம் அழகு படுத்தி பார்க்க ஆசை.. நீங்க சொன்னதை try பன்றேன்மா ரொம்ப நன்றி.

அன்புடன்,
zaina.

நோ சாயினா . இன்னிக்கு மால் க்கு போயிருந்தேன் . எனக்கு காஸ்மெட்டிக் தேவைக்கு போயிருந்தப்பதான் பாத்தேன் கிட்ஸ் க்கும் நாங்கள் பாவிக்கிற மாதுரியே செட் ஆ இருக்கு .ஸ்பாக்கிள் மிக்ஸ் தான் அதிகமா இருக்கு .3 வயதுக்கு மேல தாராளமா யூஸ் பண்ணலாமாம் . விசாரிச்சேன் .குழந்தைக்கு விருப்பம் இருந்தா அழகு பண்ணி பாக்கலாம் தானே .கிட்ஸ் மேக்கப் செட் அப்டின்னு கேட்டு பாருங்கோ . வேல்ட் பேமஸ் perfumes என்னென்ன நேம் ல இருக்கோ அந்த நேம்லையே நல்ல மேக்கப் செட் இருக்கு .

மேலும் சில பதிவுகள்