கடலைக்கறி

தேதி: July 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (5 votes)

 

கறுப்பு கொண்டைக்கடலை - 250 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
காய்ந்த மிளகாய் - 6 + 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
தனியா - 3 தேக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி


 

கொண்டைக்கடலையை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணிநேரம் ஊற வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காய், காய்ந்த மிளகாய் மற்றும் தனியாவை வெறும் கடாயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் தூள் வகைகள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து பச்சை வாசம் போக கொதிக்க விடவும்.
வதக்கி கொதிக்க வைத்தவற்றுடன் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
இந்த கலவையில் வேக வைத்து எடுத்து வைத்துள்ள கடலை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்..
கலவை நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இறக்கவும்.
புட்டுடன் பரிமாற சுவையான கேரள கடலைக்கறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்குது. சூப்பர் ரேவ்ஸ்.

‍- இமா க்றிஸ்

சூப்பர் கடலைக்கரி அப்படியே அந்த‌ புட்டயும் எப்படி செய்ரதுனு சொல்லி தந்திங்கனா ரென்டையும் சேர்த்தே செய்து பார்த்துடலாம். உங்க‌ பகாரா பைகன் செய்து பார்த்தேன் ரொம்ப‌ நல்லா இருந்தது சூப்பர் ரெசிப்பி. நான் அருசுவையின் நீன்ட‌ நால் ரசிகை, ஆனாலும் இது தான் என் முதல் கருத்து உங்கல் ரெசிபிக்காக.

:-) தமிழில் தட்டியதற்குப் பாராட்டுகள். யார் என்ன சொன்னாலும் விட்டுராம தொடருங்க. சீக்கிரம் எக்ஸ்பர்ட் ஆகிருவீங்க.

Ri அல்லது rri அடித்தால் றி வரும். கடலைக்கரியை கடலைக்கறியாக மாற்றிவிடலாம். மாற்றி விடுறீங்களா? லேட்டாக விட்டீங்கன்னா திருத்த முடியாமப் போய்ரும்.

‍- இமா க்றிஸ்

Kadalakari ellaam seydhu vegu kaalam aayiduchu. Tidelpark food courtla saappitten mudhan mudhalaa puttum kadalakariyum.... eppa idhu irandaiyum serthu paarthaalum adhu dhaan ninaivu varum. Adhu oru kanaa kaalam. Miss those days.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அம்மே, நிங்களோட‌ புட்டும், கடலை கறியும் அருமையாயிட்டு உண்டு..

"எல்லாம் நன்மைக்கே"

குறிப்பை வெளியிட்ட அட்மின்அண்ணா & டீம் நன்றிகள் பல.

Be simple be sample

தான்க்யூ இமாம்மா

Be simple be sample

ரொம்ப ரொம்ப தான்க்ஸ்ப்பா. உங்கள் பதிவு, பாராட்டிற்கு.பகாரா பைகன் ந்னும் செய்திங்களா பிடிச்சிருந்தா ரொம்ப சந்தோஷம்பா.

புட்டுக்கு இந்த லின்க் பாருங்க. பட்த்தோட விளக்கமா இருக்கும்.
23011
இந்த நம்பர் சர்ச் பாக்ஸ்ல போடுங்க. எனக்கு லின்க் பேஸ்ட் ஆகல புட்டு ரெசிபி இருக்கும்.;) செய்து பார்த்துட்டு கட்டாயம் சொல்லுங்க

Be simple be sample

உங்க நினைவுகளை தட்டி விட்டுட்டமோ. செய்து சாப்புடுங்க வனி . தான்க்யூ

Be simple be sample

எந்தா பெண்குட்டி புட்டு பார்த்து மலையாளம் பறயணுது. நன்டி மோளே.

Be simple be sample

மிக்க‌ நன்றி இப்ப சரியா இருக்குங்களா?

ரெசிபி நோட் செய்தாச்சு செய்து பார்த்துட்டு கண்டிப்பா சொல்றேன்.

:-) சூப்பர். பிடிச்சிட்டீங்க.

அங்க உங்க முதல் கமண்ட்ல பார்த்தீங்கன்னா... கீழ 'மாற்று' என்று பச்சைல ஒரு ஆப்ஷன் தெரியும். அது இருந்தா, நீங்க முதல்ல போட்ட கமண்ட் & கமண்ட் தலைப்பை எடிட் பண்ணலாம்.

‍- இமா க்றிஸ்

எனக்கு அந்த‌ வாய்ப்பு தெரியவில்லையே?

நாந்தான் பதிலளி தட்டிட்டேன். அனிதாவுடையது. அனிதா மாற்று வராதுப்பா பதிலளி தட்டிட்டா.

Be simple be sample