என் மகனுக்கு இருமல் இரவில் மட்டுமும் வருகிறது

தோழிகளே என் மகனுக்கு 2 1/2 வயது ஆகிறது..3 வாரமாக‌ இரவில் மட்டும் வறட்டு இருமல் வருகிறது. நானும் மருத்துவரின் ஆலோசனை படி மருந்து குடுத்து வந்தேன்.ஆனால் அவனுக்கு இருமல் நிற்க்கவில்லை.இன்று மருத்துவரிடம் காட்டினோம் அவர் ஆஸ்துமா கூட‌ வராலம் என்று கூறியுள்ளார்.என்ன‌ செய்வது என்று எனக்கு புரியவில்லை.இப்போது இருமலுடன் வாந்தியும் வருகிறது..

சிற்றரத்தை (சன்றாஷ்டம்) என்று கேட்டால் நாட்டு மருந்து கடைகளில்
கொடுப்பார்கள்.அதை இடித்து கசாயம் வைத்து பாலில் கலந்து சர்க்கரை சேர்த்து
குடிக்கக் கொடுங்கள், நல்ல‌ ரோஸ் கலரில் நல்ல‌ கார‌ வாசனையோடு குடிக்க‌
ரோஸ்மில்க் போல‌ இருக்கும். இருமல் நிற்கும் வரை தரவும்.
தூதுவளை துவையல், சாக்லேட், தக்காளியுடன் சேர்த்து சூப் மாதிரி
தரலாம். மஞ்சள் தூள் பாலில் போட்டு குடிக்க‌ கொடுக்கலாம்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

உங்கள் மகனுக்கு பெட்ல‌ படுக்கும் போது இருமல் வந்தால், பெட்ல‌ உள்ள‌ பஞ்சு, தூசி அலர்ஜியா இருக்கலாம்.

நிஷா

நன்றி பூங்கோதை அம்மா..நான் மஞ்சள் தூளும் கலந்து பாலில் குடுத்தேன் அவன் குடிக்கவில்லை...நிங்கள் சொன்னது போல் சிற்றரத்தை குடுத்து பாக்கிறேன்..

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

இரவில் படுக்கும் முன் வெது வெதுப்பான‌ நீர் கொடுத்து குடிக்க‌ வைத்து படுக்க‌ விடுங்கள். தூசு இருக்கிறதா தூங்கும் ரூமில் என்றும் ஒரு முறை பார்த்து சுத்தம் பண்ணிடுங்க‌,

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

என் மகளுக்கும் இவ்வாரு இருந்தது.வனி சொல்வது போல் வெது வெதுப்பா தண்ணீர் கொடுங்க.பனகற்கன்டு கொடுத்து சப்பி சாப்பிட சொல்லுங்க.மஞ்சள் தூள் கலந்த பாலில் பனகற்கன்டு சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொடுங்க.

Night thoonkum mun thoothuvalai podi1/2tsp+thulasi podi1/2tsp+honey1tabs ivai anaithaum nalla mix seithu kodungal

3 வாரமாக‌ இரவில் மட்டும் வறட்டு இருமல் வருகிறது. நானும் மருத்துவரின் ஆலோசனை படி மருந்து குடுத்து வந்தேன்.ஆனால் அவனுக்கு இருமல் நிற்க்கவில்லை.இன்று மருத்துவரிடம் காட்டினோம் அவர் ஆஸ்துமா கூட‌ வராலம் என்று கூறியுள்ளார்.என்ன‌ செய்வது என்று எனக்கு புரியவில்லை.இப்போது இருமலுடன் வாந்தியும் வருகிறது..

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

மருத்துவர் பரிந்துரைப்படி மருந்துகளை தொடர்ந்து கொடுத்து வாருங்கள்
அவர்கள் சொல்வதுபோல் ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்புகள் இருக்கு அதற்காக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை

நாம் சிலவற்றினை தவிர்த்தாலே போதுமானது
1,தூசு இருக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்
2,குளிர்ந்த நீர்,ஆகாரம் எதுவும் கொடுக்க கூடாது
3,குழந்தைகளை அதிக நேரம்குளிர்ந்த தண்ணீரீல் விளையாடவோ,குளிக்கவோ அனுமதிக்காதிங்க

மருந்துளை தவறாமல் கொடுக்க வேண்டும்
இப்படி சிலவிஷயங்கள் இருக்கு
கவனமாக பசங்களை கண்காணிக்க வேண்டும்

என்னோட பொண்ணுக்கும் இப்படிதான் இருந்தது
கவலைபடாதிங்க சரியாகிவிடும்
கைவைத்தியமும் செய்துபாருங்க

ML

மேலும் சில பதிவுகள்