nightil parkal kadi

iravil nan thugumputhu parkal kadikeren edhanala enudu theyriyavilai ithu 6 years kastapadukeran yen enana thiriyavilai pls kojam reply pannuga frds

பொதுவாக‌ இரவில் தூக்கத்தில் பற்களைக் கடித்தால் வயிற்றில்
பூச்சித் தொந்தரவு தான் முக்கியமான‌ காரணமாக‌ இருக்கும், நீங்கள் அசைவம்
உணவு உண்டால் அந்தத்தொந்தரவு இருக்கலாம். அதற்கான மருத்துவம்
பார்ப்பது நல்லது. ஓமியோபதியில் " வொர்மால்" என்ற‌ மாத்திரையை எடுக்கலாம்
வீட்டுவைத்தியமானால் குப்பைமேனிக் கீரையை பொரியலாகவோ,
கடைந்தோ, சூப்பாகவோ எடுத்துக் கொள்ளலாம், பொடியானால் இரவில் அரை
தேக்கரண்டி தேனில் குழைத்து சாப்பிடலாம்.( 10 நாளாவது) சர்க்கரைப்பூசனிக்
காய், கல்யாணப்பூசனிக்காய், வெள்ளரிக்காய் இவற்றின் பருப்புக்களைப் பச்சையாகவே மென்று தின்னலாம். பாகற்காயை கசப்பு நீக்காமல் சாப்பிடனும்.
வேகவைத்து தண்ணீரைக் கொட்டக்கூடாது,
அல்லோபதியானால் ஆங்கில‌ மருத்துவரிடம் தான் போகவேண்டும்.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நீங்கள் //6 years kastapadukeran// என்று சொன்னதால் பூச்சியாக இருக்காதோ என்று தோன்றியது. அதனால்தான் யோசித்துவிட்டு பதில் சொல்லலாம் என்று விட்டிருந்தேன். ஆமாம், 6 வருடங்கள் எதற்காக விட்டிருந்தீர்கள்? யோசிக்கவே இல்லையா? அல்லது இப்போதும் கூட இது பெரிய பிரச்சினையாக இல்லையா? !!!

பூச்சிக்கு மருந்து எடுக்கும் நோக்கத்திலிருக்கிறீர்களானால் ஒரு எச்சரிக்கை... நீங்கள் மணமானவர் என்கிறது உங்கள் ப்ரொஃபைல். உங்களுக்கு கரு தங்கியிருந்தால் அல்லது குழந்தைக்காக முயற்சிப்பவரானால்... வேமோல், வேமொக்ஸ் வேண்டாம். எந்த விதமான பூச்சி மருந்தானாலும் மருத்துவர் சொல்லாமல் வேண்டாம். கைமருந்து, வீட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் எதுவாக இருந்தாலும்... வேண்டாம். கரு கலையும் சாத்தியம் நிறைய இருக்கிறது. எப்போது பூச்சி மருந்து எடுக்கப் பாதுகாப்பான காலம் என்பதை மருத்துவர் சொல்லுவார்.

கர்ப்பம் பற்றிய கவலை இல்லையென்றால்... பூச்சிக்கு மருந்து எடுத்துப் பார்த்துவிட்டு சரியாகாவிட்டால் மருத்துவரிடம் பேசலாம். இதிலும் ஒரு விடயம் கவனிக்க இருக்கிறது. இது பூச்சிப் பிரச்சினைதான் என்றால்... 6 வருடம் தொற்று இருந்திருக்கிறது. நிச்சயம் உங்கள் முழுக் குடும்பத்தாருக்கும் தொற்றி இருக்கும். எல்லோரும் சிகிச்சை எடுக்காமல் நீங்கள் மட்டும் எடுப்பதால் பயனில்லை. மாறி மாறித் தொற்றும். சிகிச்சை சமயம் உங்கள் குளியலறை, கழிவறைக் கதவு, கைப்பிடி, பைப் திருகிகள் என்று எல்லாவற்றையும் ஒரு தடவை சுத்தம் செய்துவிடுவது நல்லது.

உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். நீங்கள் என்ன சிகிச்சை எடுத்தாலும் உடனே பற்கடிப்பு நின்றுவிடும் என எதிர்பார்க்க வேண்டாம். 6 வருஷத்துப் பழக்கம், இல்லாமல் போவதற்கும் உடல் (மூளை) பழகியாக வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்