தேதி: July 28, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
காலிஃப்ளவர் - ஒன்று
கடலை மாவு - ஒரு கப்
ரவை - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
ஓமம் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக நறுக்கி சூடான தண்ணீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் நீரை வடித்து எடுத்து வைக்கவும்.

பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு, ஒரு தேக்கரண்டி ரவை, அரை தேக்கரண்டி மிளகாய்த் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், தேவைக்கேற்ப உப்பு, கால் தேக்கரண்டி ஓமம் சேர்த்து பின்னர் ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய் ஊற்றி நன்கு கலக்கவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து வைக்கவும்.

பிசைந்து வைத்த கலவையுடன் காலிஃப்ளவரை சேர்த்து தேவைக்கேற்ப இன்னும் சிறிது தண்ணீர் ஊற்றி பிசைந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு பொரித்தெடுக்கவும்.

மொறுமொறுப்பான சுவையான கோபி 65 தயார்.

Comments
பாலா
சிம்பிளி சூப்பர் பாலா.
Be simple be sample
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
சிம்ப்ளி தேங்க்ஸ் ரேவ்'ஸ்.
எல்லாம் சில காலம்.....