தேதி: July 31, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கருணைக்கிழங்கு - அரைக் கிலோ
குழம்பு மிளகாய்த் தூள் - 2 தேக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி + கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கருணைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி அதனுடன் 2 தேக்கரண்டி குழம்பு மிளகாய்த் தூள், அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைக்கவும். பின்னர் நீரை வடித்து வைக்கவும். இப்படி வேக வைத்து எடுத்தால் சாப்பிடும் போது நாக்கில் அரிப்பு இருக்காது.

ஒரு தட்டில் ஒரு தேக்கரண்டி மிளகாய்த் தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், சிறிது உப்பு, 4 பூண்டு பல் தோலுடன் நசுக்கி சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்.

அதனுடன் வேக வைத்த கருணைக்கிழங்கை சேர்த்து பிரட்டி 5 நிமிடம் ஊற விடவும்.

தோசைக்கல்லை சூடாக்கி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் இந்த கருணைக்கிழங்கை சுற்றி அடுக்கவும்.

ஒரு புறம் வெந்ததும் திருப்பி போட்டு மேலும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மற்றொரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான கருணைக்கிழங்கு வறுவல் தயார்.

கிழங்கு வகையில் கருணைக்கிழங்கு எந்த தீமையும், வாயு தொல்லையும் இல்லாதது.
இது கேன்சர் வராமல் தடுக்கும் குணம் கொண்டது.
Comments
tks for ur receipe
Innaiku lunch ku karuna kilangu varuval than seithu iruken
kuna kelanga? senakelanga?
kuna kelanga? senakelanga?
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
SHAIKNASEERA
குறிப்பு பார்த்து செய்ததற்கு நன்றி ஷாய்க்னா. கருணை கேன்ஸர் வராமல் தடுக்கும் குணம் கொண்டது.
எல்லாம் சில காலம்.....
சூர்யா
இது கருணை கிழங்கு. சேனை கிழங்கு வேறு.
எல்லாம் சில காலம்.....