ப்ராஸா ஆப்பம்

தேதி: August 1, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பச்சரிசி - ஒரு கப்
பழைய சாதம் - 2 கப்
சின்ன வெங்காயம் - 10
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
உப்பு - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி


 

பச்சரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
சாதம் மற்றும் ஊற வைத்த அரிசியை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் வெங்காயம், சோம்பு, தேங்காய் துருவல், மஞ்சள் தூள் போட்டு அரைக்கவும்.
அரைத்த விழுதை மாவுடன் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இரவு செய்ய வேண்டுமென்றால் காலையிலேயே அரைத்து வைக்க வேண்டும். மாவை அரைத்து உப்பு போட்டு கரைத்து வைத்து விடவும். மாவு புளித்தால் தான் நன்றாக இருக்கும். மாவு அதிகம் புளித்து விட்டால் மாவுடன் சீனி சேர்த்துக் கொண்டால் புளிப்பு இருக்காது.
வாணலியில் எண்ணெய் தடவி அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி நடுவில் கரண்டியை வைத்து தேய்த்து விடவும்.
மேலே ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மூடி வைக்கவும்.
வெந்ததும் எடுத்து விடவும்.
சுவையான ப்ராஸா ஆப்பம் தயார்.
இஸ்லாமிய சமையலில் நீண்ட அனுபவம் கொண்ட திருமதி. பைரோஜா ஜமால் அவர்களின் தயாரிப்பு இது. இவரது குடும்பத்தினர் பலரும் சமையல் துறையில் வல்லுனர்களாக வெளிநாடுகளில் இருக்கின்றனர். இவரது தந்தை சிங்கப்பூரில் உணவு விடுதி நடத்தி வந்தவர். குடும்பப் பின்னணி, வளர்ந்த சூழல் அனைத்தும் இவரது சமையல் திறனை செம்மைப் படுத்தியுள்ளன.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்