கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை எடை அதிகரிக்க டிப்ஸ் குடுங்க

ஹாய் தோழிகளே,

நான் இப்போது 38 வார கர்ப்பம், டியூ டேட் 22 ஆகஸ்ட். ஆனால் குழந்தையின் எடை 2.3 கி தான் இருக்கு... இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்தில் குழந்தை பிறந்தால் கூட எடை குறைவாய் தான் இருக்கும்னு மருத்துவர் சொல்றாங்க...

இந்த இரண்டு வாரங்களில் எதை எல்லாம் சாப்பிட்டு குழந்தையின் எடையை அதிகரிக்க செய்யலாம்னு சொல்லுங்க ப்ளீஸ். இனிப்பு சுத்தமா தொட முடியலை. பழங்களில் உள்ள இனிப்பு சுவை கூட வாந்தி வர வச்சிடுது. அதுமட்டுமில்லாமல் எனக்கு நட்ஸ் அலர்ஜி ஆகும்.

பிரேமா முதலில் வாழ்த்துக்கள்.நல்லபடியாக குழந்தை பிறந்தால் போதும் எடைலாம் பார்க்காதீங்க.

2.500 தான் என் பையன் ரொம்ப ஆக்டிவா இருக்கான்.பாதாம்பால் குடிங்க..நார்மல்லா சாப்பிடுங்கள் இனி எப்ப வேண்டுமானாலும் குழந்தை பிறக்கும்.ஏதாவது சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம்.
இதைப்பற்றி நிறைய இழைகள் இருக்கு பாருங்கள் உங்களுக்கு ஏற்ற உணவை சாப்பிடுங்கள்....கேரட் மற்றும் பிடித்த உணவுகளை சாப்பிடுங்கள்.

அன்பு தோழி. தேவி

என்னதான் சொல்லியிருக்கீங்க ப்ரேமாவுக்கு! கர்ர்... கொஞ்சம் ஸ்பெல்லிங் பார்த்துத் திருத்திவிடுங்க.

‍- இமா க்றிஸ்

இனிப்பு சாப்பிட்டு எடை கூட்டுற விஷயம் யாருக்குமே ஆரோக்கியமானது இல்லை. எடை கூடுறதுக்குப் பதிலா சுகர் கூடிரப்படாதுல்ல! எப்பவும் சாப்பிடுற மாதிரி சாதாரணமா சாப்பிடுங்க. சந்தோஷமா இருங்க. எடை குறைவா இருக்கும் என்று சொன்ன டாக்டர் பிரச்சினையா இருக்கும் என்று சொல்லல. பிறகு ஏன் யோசிக்கிறீங்க!

‍- இமா க்றிஸ்

டாக்டர் எதுவும் பிரச்சனை இல்லதப்பா நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். பிறப்பதற்குள் 2.5 கி தாண்ட வாய்ப்பு உண்டு. நல்ல ஹெல்தியா காய், முட்டை, கீரைகள் சாப்பிடுங்கள் போதும். இதறகாக டென்ஷலாம் ஆகமா குட்டிசெல்லம் கூட பேசின்னு இருங்க.

Be simple be sample

சந்தோஷமாக இருங்௧ தோழி
௧டைசி வாரங்௧ளில் குழந்தையின் எடையை அதி௧ரிக்௧ செய்வது என்பது சற்று ௧டினம் தான்

இருந்தாலும் நீங்௧ள் எப்போதும் உண்ணும் உணவினையே உண்ணுங்௧ள் மாறுதல் உணவு௧ள் இப்போதைக்கு வேண்டாம்
குழந்தையின் எடை 1 வாரத்தில் 200லிருந்து 300 கிராம் வரைகூடும்

சத்தான உணவை உட்கொள்ளுங்௧ள்
ஆரோக்கியாகமாக குழந்தை பிறப்பார்௧ள்

ML

அம்மா புதிய செல்லால் என்னால் எழுத்துக்களை கண்டுபிடித்து தட்டுவதற்குள் கஷ்டமாக இருக்கின்றது.அதனால் தான் அறுசுவைக்குள் வர வில்லை.....சாரி வெரி வெரி சாரி.காலையில் சின்னவன் அழுகிறான்னு தட்டுனதை சேர்க்க கிளிக் பண்ணிட்டு போய்விட்டேன்.செல்லில் டிக்சனரி தமிழ் தான் வருது.....அதன் எடக்குமுடக்காகிவிட்டது.....

யாரும் என்னை அடிக்க வரவில்லை.....அவ்வ்வ்.....எல்லாரும் படிச்சிருப்பாங்களோ???¿¿¿¿¿¿

அன்பு தோழி. தேவி

Weight koodanumnu ninachu unhealthy food sapdathinga pa.. Normal weight 2.5kg irunthale pothum nu doc sonanga.. Ungaluku kandipa atha Vida weight koodirum pa... Dnt worry... Enjoy ur pregnancy time.

Fruits juice kudinga ma...pomegranate juice nalla kudibga baby wgt balla koodum...na athan kudichan enakum en baby last scan la 2.2 than iruntha apram perakrappo 3.100 ayitta...pomegranate juice than ma daily kudichan...follow panunga nala imprvmnt therium...irunthalum neenga bayapda venam inum tme iruku one wk ku half r one jg aerynu solvanga 9th mnth la so u follow dis. .dnt wry. Be happy always ..alaga kolandhaiya petthu edupinga. In shaa allah...

நன்றிங்க‌..

2.5 இருந்தால் சந்தோஷம் தான். என் மூத்த‌ மகள் பொறந்தப்போ 2.3 தான் இருந்தால் ஆனால் எந்த‌ ப்ரச்சினையும் இல்லை. அதே நேரத்தில் பக்கத்து பெட்டில் இருந்த‌ பெண்ணுக்கு 2.2 ல‌ குழந்த்தை பிறந்து 3 நாட்கள் இன்குபேட்டர் ல‌ வச்சிருந்தாங்க‌.

பதில் அளித்தமைக்கு நன்றிகள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நீங்க‌ சொல்றது சரி தான். இங்கே சில‌ பேர் சொன்னாங்க‌ சாக்லேட், ஐஸ்கிரிம் சாப்பிட்டா எடை கூடும் நு... கொடுமை என்னவென்றால் எனக்கு பழங்கள் கூட‌ சாப்பிட‌ முடியவில்லை. இந்த‌ வார‌ செக்கப்பில் குழ்ந்தையின் எடை கொஞம் கூடி இருக்கு அதனால் வொரி பன்ன‌ வேண்டாம்னு டாக்டர் சொல்லிட்டாங்க‌.

நன்றிகள் இமாம்மா.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

மேலும் சில பதிவுகள்