கிட்ஸ் ஆரஞ்சு பிரியாணி

தேதி: August 3, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (2 votes)

 

ஆரஞ்சு பழம் - 4 அல்லது 5
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
வெங்காயம் - 2 அல்லது 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
புதினா இலைகள் - அரை கைப்பிடி
காரட் - 1 அல்லது 2
காஷ்மீரி சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு


 

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். காரட்டை துருவி வைக்கவும்.
அரிசியை கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஆரஞ்சு பழங்களைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். (ஒன்றரை கப் அளவு)
குக்கரில் எண்ணெய் ஊற்றி கரம் மசாலா தூள் போட்டு நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து உப்பு போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின்னர் நறுக்கிய புதினா, மல்லி இலைகளை சேர்த்து வதக்கி விட்டு அதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து மேலும் வதக்கவும்.
அதன் பிறகு ஆரஞ்சு ஜூஸை சேர்த்து மூடி வைத்து கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பு சரி பார்த்து மூடியிட்டு வேக வைக்கவும்.
அரிசி முக்கால் பதம் வெந்ததும் குக்கர் மூடியை திறந்து கிளறி விட்டு துருவிய காரட் சேர்த்து மீண்டும் குக்கரை மூடி மேலும் 5 - 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.
இனிப்பு சுவையுடன் கூடிய ஆரஞ்சு பிரியாணி தயார். இதை குழந்தைகள் விரும்பி உண்பார்கள். லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செம கலர்புல் ஹெல்தி. செய்து பார்க்கிறேன். சூப்பர்

Be simple be sample

என் அண்ணன் மகளுக்கு பெயர் தேர்வு செய்து கொண்டிருக்கிறோம். இ, யு, எழுத்துகளில் நல்ல சிறிய தமிழ் பெயராக கூறுங்கள் தோழிகளே...!!!

Idhuvarai paarthadhilla.. supera irukku kadaisi padam presentation. Seydhu paarkaraen :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தகவலுக்கு நன்றி

Reiki Guna ( Reiki Distance Group Healer )