Abortion அனுபவங்கள்

இரண்டு அல்லது மூன்று முறை க்கு மேல் Abortion ஆகி குழந்தை பெற்றவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும்.

எனக்கு புரியவில்லை சகோதரி .எனக்கு 4 அபோசன் ஆகிய பின் குழந்தை பெற்றேன் 5 அபோசன் ஆகிய பின் குழந்தை பெற்றேன் என்று வந்து சொல்ல வேண்டுமா ? அல்லது ஏன் ? எப்படி ?அபோசன் ஆனது என்று சொல்ல வேணுமா .?pஇழப்பு இறப்பு போன்ற சில விஷயங்களை மேலதிகமாக ஆராய்வது அவ்வளவு நல்லதல்ல .8 தடவை அபோசன் ஆனால் கூட குழந்தை பெற்று விடலாம் .மன பயம் கூட அபோசனுக்கு ஒரு பெரிய காரணிதான் .கர்ப்ப காலத்தில் வித்தியாசம் வித்தியாசமா சில சில உபாதைகள் வந்து கொண்டே இருக்கும் .சிலருக்கு அது சாதாரணமா கடந்து போற விஷயமாக இருக்க சிலருக்கு அதுவே கர்ப்பம் தொடர முடியாத காரணமாக அமைந்து விடும் .எல்லார் அனுபவத்தையும் கேட்டு வைத்தீர்களானால் நன்மை யை விட தீமை தான் அதிகம் உதாரணத்துக்கு ஒருவர் சொல்கிறார் எனக்கு தைரொயிட் வந்ததால் அபோசனாகி விட்டது என்று .உங்களுக்கும் கர்ப்ப காலத்தில் அதேபோலவே எதாவது வந்தால் உங்களுக்கு பயம் வர வாய்ப்பு இருக்கு .ஆனால் தைரொயிட் வந்து அபோசன் ஆவது என்பது மிக அரிது . ஆனால் பயத்தால் அபோசன் ஆவது அதிகம். .பிரசவ அனுபவங்கள் கேட்டு வைப்பது நல்லது இது அவ்வளவாக நல்லது கிடையாது .ஆனால் அறுசுவையில் ஏற்கனவே அபோசன் ஆனது பற்றி நிறைய பகிர்வுகள் இருக்கிறது . பகிர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பின்னர் குழ்ந்தை பெற்று விட்டார்கள் என்பது இங்குள்ள பழைய பதிவுகளை தொடர்ந்து படித்தால் உங்களுக்கு புரியும் .நல்லதையே சிந்தியுங்கள் . நல்லதே நடக்கும் என்று நினையுங்கள் .

//இழப்பு இறப்பு போன்ற சில விஷயங்களை மேலதிகமாக ஆராய்வது அவ்வளவு நல்லதல்ல// நானும் சுரேஜினி சொல்ல பல கருத்துகளோடு எனக்கும் உடன்பாடு இருக்கிறது. ஒரே ஒரு தடவை ஆன எனக்கே மனதில் ஆளமான வடு இருக்கிறது. மறக்க நினைக்காவிட்டாலும், நினைக்காதிருக்க விரும்புகிறேன். 2 அல்லது 3 முறை... எதற்கு அவர்கள் காயங்களை மீளவும் மேலே கொண்டு வர வேண்டும்!! உங்களுக்கு ஒரே ஒரு அனுபவமாவது இல்லாவிட்டால் இங்கு கேள்வியை வைத்திருக்க மாட்டீர்கள் கார்த்தி. அதே வலியைக் கடந்தவர்களுக்கு மீண்டும் கடக்கும் அழைப்பு வேண்டாமே!

//சிலருக்கு அது சாதாரணமா கடந்து போற விஷயமாக இருக்க சிலருக்கு அதுவே கர்ப்பம் தொடர முடியாத காரணமாக அமைந்து விடும்// உண்மை.

//எல்லார் அனுபவத்தையும் கேட்டு வைத்தீர்களானால் நன்மை யை விட தீமை தான் அதிகம்// 100% ஆமோதிக்கிறேன் சுரேஜினி. :-)
உங்களுக்கு என்ன சந்தேகம் என்பதைக் கேளுங்கள் கார்த்தி. சொல்ல வேண்டியதைச் சகோதரிகள் தாங்களாகவே முன்வந்து சொல்வார்கள். இப்படிப் பொதுவாகக் கேட்டு வைக்க வேண்டாம். அதனால் கிடைக்கும் அறிவு உங்களுக்கு நன்மை தராது.

‍- இமா க்றிஸ்

அபார்ஷன் என்ற‌ ஆங்கிலச் சொல்லுக்கு மிக‌ மிக‌ மிக‌ அருமையான‌
கொடுமையான தமிழ் மொழிபெயர்ப்பு கருச்சிதைவு. இதன் பொருள் தெரியுமா?
இறைவன் பூமியில் பிறக்கும் அத்தனை உயிர்களுக்கும் தானே நேரடியாகத்
தாயாக‌ முடியாது என்பதால் தான் அனைத்துப் பெண் பிறவிகளுக்கும் தனக்கு
நிகராக‌ தாய்மை என்ற‌ தனிப்பெருங்கருணைத் தன்மையை இயல்பாகத் தந்தான்.
இறைவனை இறைவன் என்று அழைக்காமல் தாயுமானவன் என்று அழைத்தார்கள் தமிழகத்தில்.திருச்சி தாயுமானவன் கோயில் இறைவன்.
அணுவான‌ கரு உருப்பெற்று கண் காது மூக்கு என்று தனக்குள்ளே உருவாகும்
தன் குழந்தையை தன் கற்பனையில் கண்டு கண்டு ரசித்து ரசித்து உருவாக்கிய‌
தன் குழந்தை தனக்கு இல்லை என்பதை ஒரு தாய் உணரும் போது அந்நிலை
உலகமே தன் தலையில் இடிந்து விழுந்தது என்பது தானே.
எதிர்பாராமல் நடந்தாலும் (பல‌ காரணங்களால் நடந்திருந்தாலும்) தன் கருவின்
மரணம் தன் வயிற்றிலேயே நடப்பது என்பது தன் மரணத்தை விட மிக மிகக் கொடுமையானது. அதுவும் பலமுறை நடந்ததா? அதன் அனுபவம் எப்படி?
அது அனுபவமா? அல்லது உடலாலும் மனதாலும் அனுபவித்த‌ சித்திரவதைகளின் தொகுப்பை மீள்பார்வையிடுவதா? இதனால் இதைப் பார்க்கும்
தற்போதைய‌ கர்ப்பிணிகளின் எண்ண‌ ஓட்டம்
கருக்கலைந்த‌ பெண் இன்று கர்ப்பிணியாக‌ இருந்தால் அவர்களின் மனவேதனை
தாயாக‌ ஆசைப்படும் பெண்களுக்கு ஏற்படும் பயம்,அதனால் ஏற்படும் தயக்கம்
இந்தக் கேள்வியால் எத்தனை குடும்பங்களில் மறைந்து போன‌ பல‌ சிக்கல்கள்
மீண்டும் எழுந்து எத்தனை வித‌ குழப்பங்கள் எழும்? வார்த்தைகளில் வடிக்கக்
கூடிய‌ சோகமா இது? நெருப்பில் வெந்து என்றும் ஆறாத‌ ரணத்தினை
மீண்டும் நெருப்பில் காய்ச்சிய‌ சூலத்தால் மீண்டும் மீண்டும் குத்திக் கிழிப்பது
போலத் தான் நான் இதை உணர்கிறேன். வார்த்தைகள் நல்ல‌ எண்ணங்களை
உருவாக்கும் வார்த்தைகளாக‌ இருப்பது நல்லது.
பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

nan marriage agi 6 monthsla conseive a irunthen.urin test positivenu vanthuchu.but 45 daysla period lite a vanthuduchu. payanthu doctor a poi pathom.utrus scan panni pakkanumnu Dr sonnanga..panninom ana heartbeat illa apdinu sonnanga..karpapaila etho thickness irukunu matum sonnanga..ethanala heartbeat illa apram en urin test positive vanthuchu...ethanala antha thickness vanthuchu...therinja sollunga frnds...

Karu kulandhaioda valarchi ninruchu athan heart beat illa frnd... Then first three months la abortion aana athuku genetic problem than kaaranam..

karu first onna irukum aprm athu pirinchu erandu cell ahum.. Erandu 4 ahum..4 8 ahka maarum... Ithu cell pirithal(cell division).. Athu stop ahum pothu valarchi irukathu... Valarchi ilana heart beat ninurum...

#en urine test positive vanthuchu# karu form aanale positive varum...

#karpapaila etho thickness# athu estrogen harmone athigama surakurathunala than..

ellathukum karanam nama unavu murai than.. Obesity( athiga edai) undu panni , hormones olunga Vela seiama , ella problem um varthu...

//first three months la abortion aana athuku genetic problem than kaaranam..// ஜெனடிக் பிரச்சினை 'தான்' காரணம் என்று சொல்ல முடியது சகோதரி. வேறு காரணங்கள் இருக்கலாம். நிறைய காரணங்கள் இருக்கு.

//ellathukum karanam nama unavu murai than.. Obesity( athiga edai) undu panni , hormones olunga Vela seiama , ella problem um varthu...// இதையும் ஆமோதிக்க மாட்டேன். சொல்வதைச் சரியாகச் சொல்ல வேண்டும். :-) குழந்தை இல்லாமல் போனவங்க எல்லோரும் ஓபிஸாவா இருக்காங்க! மெல்லிசா, அளவான எடையோட இருக்கிறவங்களுக்கும் குழந்தை இடையில் கலைந்து போவது உண்டுதானே! நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுறவங்களுக்கும் பிரச்சினைகள் வரத்தானே செய்யுது!

என் குழந்தை இல்லாமல் போனதற்கு நீங்கள் சொன்ன ஒன்று கூட காரணமாக இருக்கவில்லை என்று அடித்துச் சொல்லுவேன். :-)

‍- இமா க்றிஸ்

Nandri ungal karuthirku...

ellarum kunda irukinga athanaala than abortion aanathu endru naan solavillai... Unavu murai than kaaranam endru sonen...ellarukum ithu than porunthum endru solavillai..

#வேறு காரணங்கள் இருக்கலாம். நிறைய காரணங்கள் இருக்கு.# kandipaga ullathu... Ivlo matum than reasons endru kooravilai...

unavu murai endru sonaathu melisaga irunthum jung foods sapdravangalukum porunthum... Harmones udalin ella iyagankalukum kaaranam.. Hormones kum food kum nerayave thodarbu iruku ...

#நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுறவங்களுக்கும் பிரச்சினைகள் வரத்தானே செய்யுது!# varum aanal varuvatharku vaaipugal kuraivagave irukum nichayamaaga...

melisa irunthu aarokiyamatra unavu palakamum karanamagalam... Unavirkum udal eyakathirukum thodarbu ilaamal illai enbathu en karuththu...

Unavu murai,harmones,obesity ellame na kooria thani thani reasons ... Unavu muraiyum karanam endru soliruka vendum..

#என் குழந்தை இல்லாமல் போனதற்கு நீங்கள் சொன்ன ஒன்று கூட காரணமாக இருக்கவில்லை என்று அடித்துச் சொல்லுவேன். :-)#ithu matum than kaaranam,ithu thavira veru kaaranangaluku vaaipillai,elarukum ithu porunthum endru solavillai...

enaku therintha, en arivuku ettiya kaaranangalai sonen..

:-) மன்னிக்க்க வேண்டும். :-) இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் உங்கள் பதிவு முழுவதையும் படிக்கவில்லை. வழக்கம் போல... தமிங்கிலம்... சரியாகப் புரிந்துகொள்வேனா என்கிற சந்தேகம் இருக்கிறது. :--)

முதலாவது பதிவில்... 'தான்', 'தான்' என்று இரண்டு இடத்திலும் போட்டிருந்தீங்க. அதனால் 'தான்'' அப்படிப் பதில் சொல்லத் தோன்றியது. இப்போது அந்த 'தான்' ஸ்டேட்மண்ட்ல இருந்து கொஞ்..சம் வெளியே வந்திருக்கீங்க என்று தோணுது. :-)

//Unavu murai than kaaranam endru sonen.// ம்ம்... //Unavu muraiyum karanam endru soliruka vendum..// நான் சொல்ல வந்தது அதைத் 'தான்'. புடிச்சிட்டீங்க, நல்ல பொண்ணு. :-)

நீங்கள் பதில் கொடுத்திருந்த சகோதரியின் நலனுக்காகவே அந்தப் பதிலைச் சொல்லியிருந்தேன். உங்களை நோக வைக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் ஆர்த்திக்கு சொல்வதை விட, உங்கள் வார்த்தைகள் வழியாகவே சொல்ல வைக்க விரும்பினேன். இப்போது திருப்தி. மிக்க நன்றி ஜெனிசா. :-)

‍- இமா க்றிஸ்

For me too same problem.don't worry.next pregnancyku 15 days once injection potanga now I'm having 4 month child ma.

#முதலாவது பதிவில்... 'தான்', 'தான்' என்று இரண்டு இடத்திலும் போட்டிருந்தீங்க. அதனால் 'தான்'' அப்படிப் பதில் சொல்லத் தோன்றியது. இப்போது அந்த 'தான்' ஸ்டேட்மண்ட்ல இருந்து கொஞ்..சம் வெளியே வந்திருக்கீங்க என்று தோணுது#
nenga konjam nakkal panringa imma ma... Enaku padithathum ore siripu..

#நான் சொல்ல வந்தது அதைத் 'தான்'.# marupadium kindal panitinga..

#இப்போது திருப்தி. மிக்க நன்றி ஜெனிசா. :-)#
ungal karuthirku nandri ma..

மேலும் சில பதிவுகள்