கம்பு புட்டு

தேதி: August 4, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

கம்பு - ஒரு கப்
கொள்ளு - கால் கப்
சுக்கு - 2


 

கம்பு மற்றும் கொள்ளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
வறுத்தவற்றுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
பொடித்து வைத்திருக்கும் மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்
புட்டு குழலில் மாவை வைத்து ஆவியில் வேக வைக்கவும்.
வெந்ததும் எடுக்கவும். சுவையான கம்பு புட்டு தயார்.

கம்பு என்பதால் தண்ணீரின் அளவு அதிகமாக தேவைப்படும். தண்ணீர் தெளித்து பிசறி பத்து நிமிடம் அப்படியே வைக்கவும். காய்ந்து போனால் மீண்டும் தண்ணீர் தெளித்து பிசறி வேக வைக்கவும்

குறிப்பு கொடுத்த தோழி நிகிலா அவர்களுக்கு நன்றி.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நிகி குறிப்பை ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா? அருமை ரேவ்'ஸ். சூப்பரா இருக்கு. நான் கம்பில் புட்டு செய்தது இல்லை. கொள்ளும் புட்டில் கலந்தது இல்லை. இதை கட்டாயம் செய்து பார்க்கிறேன். அருமை ரேவ்'ஸ். நிகிக்கும் நன்றி.

எல்லாம் சில‌ காலம்.....

அன்பு ரேவா
நீங்க‌ ரொம்ப‌ ஃபாஸ்ட். சீக்கிரமா ஸ்டார்ட் பண்ணிட்டீங்களே. புட்டோடு நில்லாமல் வரிசை கட்டுங்க‌.....
குட்டீசுக்கு பிடிச்சுதா ? சாஃப்ட் ஆ வந்ததா பா.
செய்து பார்த்து அனுப்பியதுக்கு மிக்க‌ நன்றி ரேவா :)

Kalakarammaa... :) super revs. Idhu dhaan revs speciality.. onnu sonnaa No sollaama udane seyyuradhu. Thanks revs.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குறிப்பை வெளியுட்ட அட்மின் அண்ணா & டீம் மிக்க நன்றி

Be simple be sample

தான்க்யூ பாலா. கொள்ளு கொஞ்சமா சேர்க்கறதால எதுவும் வித்தியாசம் இல்லப்பா. சுக்கும் சேர்க்கறதால நல்ல மணமா இருக்கு. செய்து பாருங்க.

Be simple be sample

குறிப்பை கொடுத்த நிகி க்கு ஸ்பெஷல் தான்க்ஸ்.

எல்லோருக்கும் பிடிச்சுதுப்பா புட்டு. அடிக்கடி செய்யலாம் ஈசியாவும் இருக்கு. தான்க்யூ

Be simple be sample

தான்க்யூ வனி.இப்படியெல்லாம் சொல்லப்படாது.

Be simple be sample