ஈஸி ராகி தோசை

தேதி: August 6, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ராகி மாவு - ஒரு கப்
அரிசி மாவு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - சிறிது
மிளகு தூள் - சிறிது
பச்சை மிளகாய் - பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கறிவேப்பிலை - ஒரு கொத்து


 

ஒரு பாத்திரத்தில் மேலே கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போடவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ரவா தோசை ஊற்றும் பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
பிறகு தோசை கல் சூடானவுடன் ரவா தோசை போல் சூற்றிலும் ஊற்றவும். மேலே எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
மொறு மொறுப்பான ராகி தோசை தயார். சூடாக சாப்பிட்டால் சுவை அதிகம். கார சட்னியுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பு வெளியிட்ட டீமிற்கு நன்றி.

தோழிகளே முளைகட்டிய கேழ்வரகை(ராகி) வைத்து என்ன செய்வது ஏதேனும் யோசனை கூறுங்கள் ப்லீஸ்

"அடுத்தவர்களை பற்றி பேசும் முன் உன் தவறான எண்ணத்தை மாற்று....
உன் முதுகில் உள்ள அழுக்கை நீக்கி விட்டு அடுத்தவர் முதுகில் உள்ள அழுக்கை பற்றி பேசு "
மைதிலி பாலகிருஷ்ணன்
Love my swasthi kuttty