தைத்த ஆடையில் 1பிழை

தைத்த ஆடையில் 1பிழை என்னவென்ரால் ஆடையின் தோல் வழிகின்ரது plsஉதவுங்கள் இதை எவ்வாறு சரி செய்வவது

:-) பிழை //தைத்த ஆடையில்// மட்டுமா அல்லது தட்டிய வார்த்தையிலுமா! :-) //ஆடையின் தோல் வழிகின்ரது// ஜாக்கட்டோ சுடிதார் டாப்போ தைச்சிருக்கீங்களா? கழுத்தைப் பெரிதாக வெட்டிட்டீங்களா? ம்... தோ..ள் தானே! அல்லது நிஜமாவே லெதர் துணில தைச்சதைச் சொல்றீங்களா?

ஜாக்கட் / சுடி டாப் - உள்ளாடை எட்டிப் பார்க்கவில்லை & மீதி உடல் கச்சிதமாக இருக்கிறது என்றால்... சுலபமான வேலை, பின் பக்கம் நாடா வைத்துத் தைப்பது. அளவுக்கு கட்டி விடலாம். பொருத்தமான நிறத்தில் குஞ்சம் / மணிகள் வைத்துத் தூங்க விடலாம். http://www.arusuvai.com/tamil/node/27524 பாருங்க. உதவக் கூடும்.

கை இறுக்கம் அதிகமாக இருந்தாலும் இப்படி நழுவும். ஸ்பெசிஃபிக்காக இன்ன துணி தைச்சீங்கன்னு சொன்னால் பதில் சொல்ல ஈசியா இருக்கும்.

‍- இமா க்றிஸ்

http://www.arusuvai.com/tamil/node/28607 இதையும் பாருங்க. உதவக் கூடும்.

நீங்க ஃபேஸ்புக்ல இருந்தால்... தைத்த ஆடையை ஒரு ஃபோட்டோ எடுத்து மெசேஜ் பண்ணுங்க. என்ன செய்யலாம் என்று நாளை இரவு வந்து பார்த்துச் சொல்லுவேன்.

‍- இமா க்றிஸ்

இமா மேம் நான் தைத்தது சுடிதார் அது ெகாட்டுன் துணி நீங்கள் சொன்னது சரி கழுத்து பெரிதானதே இதற்கு காரணம் என்னிடம் fb
இல்லை

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

தோள்பட்டையில் ஒரு டக் பிடிங்க‌. கழுத்து சிறியதாகும்.
அல்லது கழுத்தின் பின்பக்கம் கயிறு வைக்கலாம்.
கழுத்தின் முன்னால் ஒரு பிளீட் வைத்து கழுத்தை சிறியதாக்கி அதில் பட்டன் வைத்து டிசைன் மாதிரி மாத்தலாம்.

உரிய நேரத்தில் தக்க பதில்களை தந்தமைக்கு மிக்க நன்றி தாங்கள் கூரியவாரு நாடா பிடித்தேன் சரிவந்து விட்டது மிக்க மகிழ்ச்சி

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

மேலும் சில பதிவுகள்