
தேதி: August 10, 2015
பட்டை - ஒன்று
மெல்லிய கறிவேப்பிலை குச்சிகள் - 5
டைல்ஸ் அல்லது கண்ணாடி - ஒன்று
சீரகம்
சோம்பு
தனியா
வரமிளகாய்
கிராம்பு
ஏலம்
க்ளூ
தேவையான பொருட்களை தயாராக எடுத்து கொள்ளவும்.

கறிவேப்பிலை குச்சிகளில் க்ளூவை பூசி சரிவாக டைல்ஸில் ஒட்டிக் கொள்ளவும்.

வரமிளகாயின் காம்பினை நீக்கி விட்டு சிறு சிறு கறிவேப்பிலை குச்சிகளை சொருகி வைக்கவும்.

அடிபகுதிக்கு பட்டையை ஒட்டவும். மிளகாயில் க்ளூவை பூசி இடையிடையே ஒட்டவும். அதே போல் கிராம்பையும் ஆங்காங்கே ஒட்டவும்.

எல்லா மசாலா பொருட்களையும் அவரவர் கற்பனைகேற்ப டைல்ஸ் முழுவதும் அலங்கரித்து ஒட்டி விடவும். மேலும் அழகு சேர்க்க விரும்பினால் சிறிய கறிவேப்பிலை இலைகளை தெரிவு செய்து இடையிடையே ஒட்டவும்.

இப்போது அழகான வாசனை மிக்க ஒரு பூங்கொத்து உங்கள் கிச்சனை அலங்கரிக்கவும், கிச்சனுக்குள் நல்ல வாசனையை உண்டு பண்ணவும் கிடைத்துவிட்டது.

Comments
சுரேஜினி...
வாவ்! கலக்கிட்டீங்க. :-)
ம்... சொன்ன மாதிரி இனி தொடர்ந்து குறிப்பு அனுப்ப வேணும்.
பின்னால வரிசையாத் தெரியும் டெஸ்ட் ட்யூப்ஸ்!! வடிவா இருக்கு.
- இமா க்றிஸ்
Sure sis
மசாலா பூங்கொத்து ரொம்ப அழகா செய்துஇருக்கீங்க.......சூப்பர்.
வாசம் அறுசுவை புல்லா அடிக்குது போங்க.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
மசாலா பூங்கொத்து
செய்தாச்சுது. சுவரில மாட்டியும் ஆச்சுது. :) வடிவா வந்திருக்கு சுரேஜினி. மிளகாயை மட்டும் விட்டுட்டன். தொட்டுப் பார்த்த உடனே முகத்தில வைச்சு... ;(( ஏன் கரைச்சல்!
- இமா க்றிஸ்