தேதி: August 18, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
முருங்கைக்காய் - 3
இறால் - கால் கிலோ
பூண்டு - 3 பல்
வடகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
வெங்காயம் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வாணலியில் எண்ணெய் ஊற்றி வடகம், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் முருங்கைக்காயை விரல் நீளத்தில் நறுக்கி சேர்த்து அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

அதனுடன் முருங்கை வேக தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடி போட்டு வேக விடவும்.

முருங்கை பாதி வெந்ததும் சுத்தம் செய்த இறாலை சேர்த்து மீண்டும் மூடி போட்டு வேக விடவும்.

வெந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான முருங்கை இறால் கறி தயார்.
