
தேதி: August 18, 2015
சிறிய க்ளவ் - ஒன்று
பஞ்சு
பின்னல் ஊசி
டபுள் சைடட் டேப்
கத்தரிக்கோல்
சிறிய செராமிக் டம்ளர்
2.25 லி ஃபான்டா பாட்டில்
அகலமான லேஸ்
பழைய தோடு / ப்ரோச்
க்ளூ
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

பஞ்சை நீளத்துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

க்ளவ்வைப் பாதியளவிற்கு புறப்பக்கமாகத் திருப்பிக் கொள்ளவும். நீளமாக வெட்டியுள்ள பஞ்சை ஒவ்வொரு விரலாக நுழைத்து பின்னல் ஊசியால் விரல் நுனி வரை அழுத்தி, அளவுக்கு இறுக்கி விடவும்.

விரல்கள் நிரம்பியதும் மீதிக் கையில் பாதி அளவை பஞ்சு வைத்து நிரப்பவும்.

செராமிக் கிண்ணத்தில் க்ளவ்வை மாட்டி தேவையானால் மேலும் பஞ்சு சொருகி இறுக்கவும். இறுக்கும் போது வடிவத்தைக் கவனித்து தேவையான இடத்தில் மட்டும் பஞ்சு வைக்கவும்.

கிண்ணத்தின் அடியில் வட்டமாக டபுள் சைடட் டேப் போட்டு க்ளவ்வை ஒட்டிவிடவும்.

ரிங் ஹோல்டர் தயார். பஞ்சு அடைத்திருப்பதால் மோதிரங்கள் சேர்ந்தாற் போல் விரலின் அடியில் போய் விழாமல், ஒன்றோடொன்று உராயாமல் தனித்தனியே நிற்கும். க்ளவ்வின் அடியில் ப்ரேஸ்லட்களை மாட்டி வைக்கலாம்.

ஃபான்டா பாட்டிலைச் சுத்தம் செய்து துடைத்து, கீழ் வட்டத்தை மட்டும் வெட்டி நீக்கவும்.

மூடியை மறைத்து டபுள் சைடட் டேப் போட்டு லேஸை ஒட்டவும். ஒற்றைக் காதணி அல்லது உடைந்து போன ப்ரோச் எதையாவது ஹாட் க்ளூ கொண்டு ஒட்டி அலங்கரிக்கவும்.

இப்போது ரிங் ஹோல்டரையும் ஆபரணங்களையும் தூசு படியாமல் பாதுகாப்பாக வைக்க மூடியும் தயார்.

Comments
இமா
சூப்பர் ஐடியா இமா ம்மா. நிச்சயமா ரொம்ப ஈஸியா இருக்கும் இப்படி ஜுவல்லரிலாம் இருந்தா எடுத்துக்கறதுக்கு. கலட்டி ஒரு டப்பால கடாசுரது தான் நம்ம வழக்கம் சாரி என் வழக்கம். ரொம்ப உபயோகமான க்ராஃப்ட் ம்மா
ஹோல்ட ர்
ஹோல்டரும் அதுக்கு மூடியும் ரொம்ப எளிமையானவை.
அதிலும் மூடி ஐடியா சூப்பர்.:)
தேவி & நிகி
//கலட்டி ஒரு டப்பால கடாசுரது// கற்கள் இருந்தால் கழன்று போகுமே!!
செய்து பார்க்கிறீங்களா தேவி? :-)
//மூடி ஐடியா சூப்பர்.// :-) ட்ரெஸ்ஸர்ல எல்லாவற்றையும் ஏதாவது அளவான பாட்டிலை வெட்டி மூடி வைப்பேன். இங்க அனுப்புறதால கொஞ்சம் மேக்கப் போட்டு அனுப்பினேன் நிகி. :-)
உண்மைல... படங்கள் திருப்தியா வரல. இன்னொரு தடவை செய்றது, படம் எடுக்கிறது எல்லாம் நடக்காது. அப்பிடியே அனுப்பிட்டேன். ;(
- இமா க்றிஸ்
beest ring
Madam na ongada hand works ellam pathen nalla Iruku enaku oru help panna mudiuma?
beest ring
Madam na ongada hand works ellam pathen nalla Iruku enaku oru help panna mudiuma?
keerthu
என்ன உதவி தேவை? கேளுங்க, என்னல் முடிந்தால் நிச்சயம் செய்வேன்.
- இமா க்றிஸ்
hai
hai
இறைவன் மிக உயர்ந்தவன்
hai
hai
இறைவன் மிக உயர்ந்தவன்