டூட்டி ஃப்ரூட்டி பிஸ்கெட்

தேதி: August 19, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

மைதா - ஒரு கப்
பட்டர் - கால் கப்
பொடித்த சர்க்கரை - அரை கப்
டூட்டி ஃப்ரூட்டி - 1/3 கப்
பால் - 1/8 கப்


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பட்டர் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
மைதா மற்றும் டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து தேவையான அளவு பால் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தியை விட சற்று தடிமனாக தேய்த்து விருப்பமான வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதை பேக்கிங் ட்ரேவில் அடுக்கி முற்சூடு செய்த அவனில் 160 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான டூட்டி ஃப்ரூட்டி பிஸ்கெட் தயார். இதனை வேறு உலர்ந்தபழங்கள் வைத்தும் செய்யலாம்.

பிஸ்கெட் பேக் செய்து வெளியே எடுத்ததும் சாஃப்டாக இருக்கும். வேறு தட்டில் மாற்றி ஆற வைத்தால் க்ரிஸ்பியாகிவிடும்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

hai revathy Super.. delicious and tasty dish.. super revathy.. kandipa try panni feedback solren.. :)

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பிஸ்கெட் சூப்பர். இவ்வளவு ஈஸியா பிஸ்கெட் செய்றது. தாங்ஸ் ரேவதி.

குறிப்பு, படம் எல்லாமே பிடிச்சிருக்கு. ட்ரை பண்ணுறேன்.

‍- இமா க்றிஸ்

thanks revathy.kandipa try pannunga

thanks devi

thanks imma

சூப்பர்.குறிப்பு அருமை.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.