தேதி: August 20, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சுறா மீன் - அரை கிலோ
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லித் தழை - சிறிது
சுறா, சூறை, கோலா போன்ற புட்டு செய்யும் மீனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

மீனை ஆற வைத்து முள் இன்றி எடுத்துவிட்டு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு (வேக வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளதால் குறைவாக சேர்க்கவும்.), மிளகு தூள், சீரகத்தூள், இரண்டாக கீறிய பச்சை மிளகாய் மற்றும் தோலுடன் பூண்டை நசுக்கி சேர்த்து நன்கு பிசையவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை தாளித்து அதனுடன் பிசைந்து வைத்துள்ள மீன் கலவையை சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக விடவும்.

2 நிமிடம் கழித்து திறந்து சுற்றி எண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். இது சுருள வந்ததும் இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

சுவையான மீன் புட்டு கறி தயார்.

Comments
Bala
எனக்கு ரொம்ப பிடிச்ச சுறா புட்டு. நல்லா செய்து போட்டுருக்கிங்க.சூறை மீன்லயும் செய்யலாமா.இது தெரியாது.ஒரு முறை இந்த மீன் வாங்கி எப்படி செய்யறதுன்னு தெரியாம ஒரு மோசமான வறுவல் வறுத்தேன். இனி வாங்கினா புட்டு செய்யறேன்.
Be simple be sample
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
ரேவ்'ஸ்
நன்றி ரேவ்'ஸ். சுறா மட்டும் இல்லீங்க. சூறை கானாங்கத்தை கோலா இது எல்லாத்துலயும் புட்டு செய்யலாம்.
எல்லாம் சில காலம்.....