asthuma

asthuma kunaa madaiya konjam sollunga tholargalee

என்ன சிகிச்சை எடுத்தாலும், எதனால் அஸ்துமா வருகிறது என்பதை அறிந்து தவிர்ப்பது அவசியம். சில இழைகள் தேடிக் கொடுக்கிறேன், படித்துப் பாருங்கள். இன்னும் சிலது இருக்க வேண்டும்.

http://www.arusuvai.com/tamil/node/16438
http://www.arusuvai.com/tamil/node/24675
http://www.arusuvai.com/tamil/node/18457

‍- இமா க்றிஸ்

சார்லஸ் சார்
ஆஸ்துமாக்கு கடலூர்ல வினாயகா மெமோரியல் ஹாஸ்பிடல்னு இருக்கு அங்க இதுக்கு மருந்து தராங்க,
ஹோமியோபதி மருந்து தான் ஆனா புல்லா கியூர் ஆகுது,

எங்க அத்தைக்கு அங்க தான் டீரிட்மென்ட் பண்ணாங்க, எங்கெங்கோயோ பார்த்து சரி ஆகாமா இங்க பாத்து சரியாகிடுச்சு.இப்போ ரொம்ப நல்லா இருக்காங்க,

காசும் அதிகம் இல்ல ரொம்ப கம்மியா தான் வாங்குவாங்க டாக்டர். நீங்க கண்டிப்பா போங்க சீக்கிரம் சரியாகிடும்.

நீங்க ஏற்கனவே வேறு இலைல கேட்டு இருந்தீங்க, அதுல பதில் சொல்லி இருந்தேன் சார்.

இந்த ஹாஸ்பிடல் போங்க கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

thanks imma(and)subi.

avanga indiala illa. srilankala irugganka.
avanka sonntha oore srilankathan.
asthuma pattri kedanka.
atha patthi ungaketta keten.
athuku ennanna sapitanum?
sapita kudathu? konjam sollunga........?

imma. asthumala pathika pattavanga
unga ooru karangathan konjam uthavi pannunga.......?

http://www.arusuvai.com/tamil/node/16438 புனிதா கமண்ட் படிச்சுப் பார்த்தீங்களா?

//unga ooru karangathan konjam uthavi pannunga.// :-)
சரி, நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.
1. எந்த ஊர் அவர்? (இலங்கை நாட்டில்... நான் திருகோணமலை.) அங்கே மருந்து எடுக்கவில்லையா? என்ன மருந்து எடுத்தார்?
2. எப்பெப்போ ஆஸ்துமா தொல்லை அதிகமாக இருக்கிறது?
3. எங்கு தங்கியிருக்கிறார்? குடும்பத்தோடா தனியாகவா நண்பர்களுடனா?
4. புகை பிடிப்பாரா? கூட இருப்பவர்களில் யாருக்காவது புகைக்கும் பழக்கம் உண்டா?
~~~~~
இது உங்களுக்கான கேள்வி. :-) உங்களை எப்படி அழைப்பது?

‍- இமா க்றிஸ்

yes padithu parthen nalla
arivuraithan sollirunthaanga.
paathiga pattavanka ledish marunthu
eduthu konthuthan iruganka.but
avanka hasband shikarat kudipanka.
avanka family vavuniyala iruganka.
enna marunthu eduthanganu theriyala
ketu solluren.

ennaiya neenga brothernum kupidalam
illa per solli kupidalam epati ungaluku
kupida thonuthoo aptiye kupidunga?

//but avanka hasband shikarat kudipanka.// வீட்டில் புகைபிடிக்கிறாராமா?
//enna marunthu eduthanganu theriyala ketu solluren.// ம்.
மீதிக் கேள்விகளுக்கும் பதில் கேட்டுச் சொல்லுங்க.
//per solli kupidalam// உங்கள் பெயர் சார்லஸ் / சார்லஷ்!!! தப்பாகக் கூப்பிடக் கூடாது. அதனால்தான் கேட்டேன். தமிழ் டைப் செய்ய முடியாவிட்டால் சரியான பெயரைக் காப்பி செய்து பதிலில் போட்டால் உதவியாக இருக்கும்.

‍- இமா க்றிஸ்

MM OK.(சார்லஸ்)CHARLASH ITHUTHAN
ENNUDAIYA NAME, KARAIGTANA SPELLING
ENGLISH,TAMIL.

பதிலுக்காகக் காத்திருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்

சார்லஸ் பதிலைக் காணோம். :-)

எனக்கும் ஆஸ்துமா இருக்கிறது (ஆனால் பெரும்பாலும் இல்லை.). :-) அனுபவத்தில் என் அபிப்பிராயம்...
'வீட்டினுள்' புகைப்பவர் ஒருவர் இருந்தால் ஆஸ்துமா நோயாளி 'தொடர்ந்து' மருந்திலேயே இருப்பதுதான் நல்லது. ;( நோய்க்கான காரணியைப் பக்கத்திலேயே வைத்துக் கொண்டு குணமாகும் என்று எதிர்பார்ப்பது எப்படி!

சிகரெட்டில் ஃபில்டர் என்று பகுதி இருக்கிறது. அது புகைப்பவரைப் பாதுகாக்கவாம். அதாவது.... புகைப்பவர், தன் சுவாசத்தில் சில நச்சுப் பொருட்கள் கலக்காமல் வெளியே காற்றில் ஊதிவிடுவார். கர்ர்.. சுயநலவாதிகள். ;)))

அந்த நச்சு எல்லாம் வீட்டார் இலவசமாக உள்ளே இழுப்பார்கள். அதன் பின் ஆஸ்துமா என்று கஷ்டப்பட்டு நோயாளி என்று மற்றவர்களால் பார்க்கப்பட்டு... :-(( கர்ர்...

Prevention is better than cure. நோயாளியின் கணவரை புகைப்பதை விடச் சொல்லுங்கள். நோயாளி தொடர்ந்து கொடுத்த மருந்தை எடுக்கட்டும். அனேகம் புகைத்தலை விட்ட ஆறேழு மாதங்களுக்குள் நோயாளியின் நிலையில் மாற்றம் தெரியும்..

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்