வெள்ளரிப்பிஞ்சு சட்னி

தேதி: February 14, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளரிப்பிஞ்சு - 5
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கெட்டி தயிர் - ஒரு கப்
மல்லிக்கீரை - 2 கொத்து
உப்பு - அரை தேக்கரண்டி


 

வெள்ளரிப்பிஞ்சை கழுவி வட்ட வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
தயிரில் உப்பு கலந்து மற்ற பொருட்களை நைசாக நறுக்கி அதில் போட்டு நறுக்கிய வெள்ளரிப்பிஞ்சையும் அதில் போட்டு பிரட்டி வைக்கவும்.
இது பிரியாணி, புலாவ் போன்றவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்