பாகற்காய் வறுவல்

தேதி: August 22, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (2 votes)

 

பாகற்காய் - அரை கிலோ
தனி மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி


 

பாகற்காயை மெல்லிய‌ வில்லைகளாக‌ நறுக்கி வைக்கவும்.
அதனுடன் தனி மிளகாய்த் தூள், குழம்பு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், தட்டிய பூண்டு, தேவையான‌ அளவு உப்பு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி ஊற‌ வைத்த‌ பாகாற்காயை சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு வேக‌ விடவும்.
இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
நன்கு சுருண்டு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
சுவையான‌ கசப்பு தெரியாத‌ பாகற்காய் வறுவல் தயார்


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பை எடிட் செய்து அழகாக‌ வெளியிட்ட‌ அட்மினுக்கு நன்றிகள் பல‌.

எல்லாம் சில‌ காலம்.....

* இதில் தண்ணீர் சேர்க்க‌ கூடாது. (தூள் சேர்த்து பிரட்டும் போதும் கூட‌ வெறும் தூள் மட்டுமே பிரட்ட‌ வேண்டும். தண்ணீர் சேர்க்க‌ கூடாது. பாவைக்காயே நீர் விடும்)

* தண்ணீர் சேர்த்தால் கசப்பு தெரியும்.

எல்லாம் சில‌ காலம்.....