retroverted uterus

i have retroverted uterus kulanthai illai

எனக்குத் தெரிந்த வரை, குழந்தை தங்குவதில் பிரச்சினை இராது. யோசிக்காதீங்க.

எப்படித் தெரிய வந்தது என்று சொல்ல முடிந்தால் சொல்லுங்கள். உங்களுக்கு இதனால் ஏதாவது சங்கடங்களிருந்தனவா? அதனால் மருத்துவரை அணுகினீர்களா?

மருத்துவர் என்ன சொன்னார் என்பதையும் சொல்லுங்கள். என்ன கேட்க வருகிறீர்கள் என்பது புரியவில்லை. அதையும் சொன்னால் ஏதாவது அபிப்பிராயம் சொல்லலாம்.

இதற்கெல்லாம் மனம் தளரக் கூடாது. இது ஓரு சிறு பிரச்சினைதான். பலருக்கு தங்களுக்கு இப்படி இருப்பதே தெரிய வருவது இல்லை.

எனக்கு திருமனம் ஆகி 2 வருடஙகல் ஆகிரது. மருத்துவர் தா சொன்னர் retroverted utres. she informed me try for another 3 months. after that we have to do IUI. she informed me turn (stomach is in lower position) after sex. Past two months i also have pain while intercourse.

//pain// உடலுறவின் போது வலியைப் பற்றி யோசிக்காமலிருக்கப் பாருங்கள். முடிந்த வரை மனதையும் உடற்தசைகளையும் ரிலாக்ஸ்டாக வைத்திருங்கள். எந்தச் சின்னப் பிரச்சினையாக இருந்தாலும் ஆரம்பத்தில் பெரிதாகத் தெரியும். வேறு வழி இல்லை என்று புரியும் போது கொஞ்சம் மனசுக்கு இடறலாக இருந்தாலும், ஃபேஸ் பண்ணித்தான் ஆவோம். பிறகு... வாழ்க்கை, குடும்பம், கடமைகள் என்று பலதும் பெரிதாகத் தெரிய இது சின்னப் பிரச்சினை என்பது போல் ஆகி, ஒரு நிலையில் பிரச்சினையே இல்லை என்கிற அளவு மறந்து போவீர்கள். எப்போதாவது நினைவுக்கு வரும். அப்போ தோன்றும், 'இதைத்தான் ஒரு காலம் பெரிதாக நினைத்து வருந்தினோமா!' என்று.

இந்தப் பிரச்சினை, எங்கள் பெண்களுக்கு இருந்தாலும் மணமாகும் முன்னால் தெரிய வருவதற்குச் சாத்தியம் வெகு குறைவு; தெரியவே வராது என்று சொல்லலாம். இதுவே ஐரோப்பியப் பெண்களானால் நிலமை வேறு. பிரச்சினையைத் தெரிந்து கொண்டதும் சத்திர சிகிச்சை மூலம் திருத்தப் பார்ப்பார்கள் - ப்ளாஸ்டிக் சர்ஜர்ரி. அவசியமான சிகிச்சை இல்லை; காஸ்மடிகல் என்பதாகத்தான் பெரும்பாலும் இது கருதப்படும்.

இப்போது உங்கள் முதல் தேவை குழந்தை. //after that we have to do IUI.// தானாக குழந்தை தங்கட்டும் என்று காத்திருக்க, எம் சுற்றம் சும்மா விடுவதில்லை. பேச்சுக் கேட்டு மனசு கலங்கிப் போகும். ஏற்கனவே உங்கள் மனதில் கவலை இருக்கும். IUI நல்ல முடிவுதான். மருத்துவர் சொன்னதன் படி நடவுங்கள். தயக்கமில்லாமல் சொன்ன காலத்தில் சிகிச்சைக்குப் போங்க. குழந்தை தங்கிய பிறகு அது தொடர்பாகப் பெரிதாக பிரச்சினை எதுவும் இராது.

உடலுறவின் போது வலியைத் தவிர்க்க / குறைக்க - உங்கள் கணவரின் உதவி உங்களுக்குத் தேவை. வலிகளை அவரிடமிருந்து மறைக்க வேண்டாம். புரிதல் அவசியம். புரிதலிருந்தால், வேறு நிலைகளை முயற்சித்துப் பார்க்கலாம். உங்களுக்கு ஆங்கிலம் தெரிகிறது. நீங்கள் இருவருமாக, இணையத்தில் இது பற்றிப் பேசி இருக்கும் ஆங்கில ஃபாரங்களைத் தேடிப் படித்துப் பாருங்கள். குழந்தை கிடைத்த பின்னாலும், வாழ வாழ்க்கை மீதம் இருக்கிறது. அது மனதிற்குப் பாரமாக இருந்துவிடக் கூடாது. வாழ்க்கையை அனுபவித்து வாழ முடியாவிட்டால்.... குழந்தையையும் பெரிதாக ரசிக்க இயலாமல் போகும். இப்போ உங்களுக்கு தேடிப் படிக்க நேரம் கிடைக்கும். முன் காலத்தில் பெண்களுக்கு இருந்திராத அதிஷ்டம் இப்போது உள்ள சந்ததிக்கு இருக்கிறது - இணையம் - பயன்படுத்துங்கள். தப்பு எதுவும் இல்லை. சிகிச்சையின் ஒரு பகுதியாக இதை நினைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கை; உங்கள் உடலும் மனதும். சந்தோஷமாக வாழ மற்ற எல்லோரையும் போல உங்களுக்கும் உரிமை இருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் பதில் போதும் என்று நினைக்கிறேன். சந்தோஷமாக இருங்க. வேறு ஏதாவது தெரிந்துகொள்ள வேண்டி இருந்தால் கேளுங்கள். நேரம் கிடைக்கும் போது பதில் சொல்கிறேன்.

in my ovulation day i have lot of fluid leakage so he have not able to perform well. I dont know exact ovulation day, but one day in my fertile period he have not able to complete. I have noticed this more then three cycle. whether is it our problem.

retroverted uterus நிலைக்கும் நீங்கள் இப்போது சொல்லியிருக்கும் சிரமங்களுக்கும் தொடர்புகள் எதுவும் இல்லை. அதற்கும் ovulation நாளுக்கும் கூட தொடர்புகள் கிடையாது. //one day in my fertile period// இதைப் பற்றியும் யோசிக்கத் தேவையில்லை. உங்கள் பிரச்சினை ஒரு சிறிய உடல்மாறுபாடு, அவ்வளவே.

//perform well// & //not able to complete// உங்களைச் சிரமப்படுத்துவதாக மனதில் எண்ணம் இருக்கும் போது இயல்பாக இருப்பது சிரமமாக இருக்கலாம். //whether is it our problem.// இல்லை. நீங்கள் உங்கள் கேள்வியில் வைத்த பிரச்சினையிலிருந்து - உங்கள் உண்மையான பிரச்சினை எதுவோ அதிலிருந்து வேறு திசையில் சிந்திக்கிறீர்கள்.

உண்மையில் உங்களுக்கு இயல்பாகக் கருத்தரிப்பதற்கான சாத்தியமில்லாமல் இல்லை. தாமதமாகுவதால் உங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைத் தவிர்ப்பதற்காக மட்டும்தான் மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சைக்குப் போவது நல்லது என்கிறேன். நீங்கள் மருத்துவரிடம் உங்கள் பிரச்சினையை வைத்திருக்கிறீர்கள். இதனால் உங்களுக்கு ஒரு நல்ல தீர்வு சொல்லும் கடமையை அவருக்குக் கொடுத்திருக்கிறீர்கள். அதனால்தான் மருத்துவர் அப்படிச் சொல்லியிருக்கிறாரே தவிர உங்களுக்கு எந்தக் குறையும் இருப்பதாகச் சொல்லவில்லை என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். வேறு விடயங்களை இடையில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.

thank you

thank you

மேலும் சில பதிவுகள்