தர்த் போம்(ஆப்பிள்)

தேதி: August 24, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - 3
பப்ஸ் சீட் - ஒன்று
ஆப்பிள் ப்யூரி(கொம்போட்) - 200 கிராம்
லேசான பட்டர் - ஒரு மேசைக்கரண்டி


 

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.
ஆப்பிளை தோல் சீவி மெல்லிய ஸ்லைஸாக வெட்டி அதில் உள்ள விதைகளை நீக்கவும்.
அவன் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து அதில் பப்ஸ் சீட்டை ரவுண்டாக விரித்து வைக்கவும்.
பப்ஸ் சீட்டின் மீது ஆப்பிள் ப்யூரியை பரவலாக தடவவும்.
பின்பு அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ஆப்பிளை வரிசையாக பரப்பவும். ஆப்பிள் துண்டுகள் இரண்டு அடுக்குகளாக வரும்.
அதன் பிறகு அவனுள் ட்ரையை வைத்து 180 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான தர்த் போம் ரெடி.
பொடித்த சர்க்கரை அல்லது கேரமல் சிரப்பை மேலே ஊற்றி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்