தேதி: August 25, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
தினை மாவு - ஒரு கப்
வெல்லம் - 100 கிராம்
துருவிய தேங்காய் - அரை கப்
ஏலக்காய் - 2
எள் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - கால் டம்ளர்
தினை மாவை கட்டிகளின்றி உதிர்த்து வைக்கவும்.

கால் டம்ளர் தண்ணீரில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து மாவில் தெளித்து நன்கு கலக்கவும்.

இதை இட்லி தட்டில் பரப்பி வைத்து மேலே ஈரத்துணி போர்த்தி மூடி போட்டு வேக விடவும்.

வெந்ததும் இதனுடன் துருவிய வெல்லம், துருவிய தேங்காய், ஏலம், எள் சேர்த்து நன்கு கிளறி வைக்கவும்.

சுவையான சத்தான தினை புட்டு தயார்.

வரகு, சாமை, தினை மூன்றையும் சேர்த்து அரைத்த மாவிலும் செய்யலாம்.
வரகு, சாமை, தினை மூன்றையும் சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது புட்டு செய்யலாம். தோசை அல்லது அடையாகவும் வார்க்கலாம். இதில் எல்லா சத்தும் சேர்ந்தே நமக்கு கிடைக்கும்.
Comments
நன்றி டீம்
அம்மாடியோ எம்புட்டு ஸ்பீடு? இம்புட்டு வேகம் உடம்புக்கு ஆகாது. நன்றி டீம். உங்க வேகத்துக்கு வாழ்த்துக்கள்.
எல்லாம் சில காலம்.....