பட்டர் சிக்கன்

தேதி: February 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோழிகறி - முக்கால் கிலோ(கறி பீஸ் மட்டும்)
தக்காளி - கால் கிலோ
பட்டர் - 200 கிராம்
பல்லாரி - கால் கிலோ
சீஸ் - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 100 கிராம்
இஞ்சிவிழுது - 1 மேசைக்கரண்டி
பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி
புட் கலர் - சிறிது
கருவா - சிறிய துண்டு
ஏலம் - 2
வத்தல் தூள் - 2 மேசைக்கரண்டி
மசாலாதூள் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
புதினா இலை - சிறிது


 

முதலில் கறியை சுத்தம் செய்து அதில் இஞ்சி,பூண்டு விழுது,மசாலாதூள்,உப்பு தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.

தக்காளியை தனியாக வேகவைத்து தோலை நீக்கிக்கொள்ளவும்.

பல்லாரியை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

பின் தக்களி, பல்லாரி,முந்திரி பருப்பு இவற்றை அரைத்துக்கொள்ளவும்.

பின் அரைத்த கலவையை வேகவைத்த கறியுடன் சேர்த்து வத்தல் தூள்,சீஸ்,புட் கலர், உப்பு சேர்த்துகலந்துக்கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு பேனை வைத்து பட்டர்விட்டு உருகியதும்,ஏலம்,கருவா,போட்டு பொறிந்ததும் கறிக்கலவையை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கி எல்லாம் ஒன்று சேர்ந்ததும் கொத்தமல்லி இலை,புதினா சேர்த்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்