ரஸ்க் உருண்டை

தேதி: August 26, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (4 votes)

 

ரஸ்க் - 10
சீனி - ஒரு மேசைக்கரண்டி
ஏலக்காய் - 4
முந்திரி - 4
நெய் - 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்


 

ரஸ்கின் ஓரத்தில் உள்ள பகுதியை மட்டும் நீக்கி விடவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி, தேங்காய் துருவல் போட்டு பொடி செய்த ஏலக்காயை போட்டு கலந்து 10 நிமிடம் வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதை கலந்து வைத்திருக்கும் தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
உடைத்த நடுப் பகுதியை மட்டும் எடுத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் பொடி செய்த ரஸ்கை போட்டு அதனுடன் தேங்காய் கலவையை போட்டு பிசையவும்.
பின்னர் சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
சுவையான எளிமையாக செய்யக்கூடிய ரஸ்க் உருண்டை தயார்.
அறுசுவைக்காக ஏராளமான உணவுகள் தயாரிப்பினை செய்து காட்டியுள்ள திருமதி. ஜெயலெட்சுமி சீனிவாசன் அவர்கள், சமையல் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர். இவரது குறிப்புகள் அனைத்தும் புதுமையாக இருக்கும். தமிழகத்தின் பல பாகங்களிலும் பிரபலமாக இருக்கக் கூடிய, வித்தியாசமான பலவகை உணவுகளை நேயர்களுக்கு தரவிருக்கின்றார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முன்பு என் சின்னவர்களுக்கு பாடசாலை விட்டு வந்ததும் ரஸ்க் தூளில் தேங்காய்ப்பூ, சீனி, உப்பு சேர்த்துப் பிடித்துக் கொடுப்பது நினைவுக்கு வருகிறது. :) விரும்பிச் சாப்பிடுவார்கள்.

ஏலக்காய், முந்திரி, நெய் சேர்க்க‌ இன்னும் தூக்கலாக‌ இருக்கும் என்று தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன்.

‍- இமா க்றிஸ்