ஈஸி ப்ரவ்னி வித் சிம்பிள் ஐஸிங்

தேதி: August 28, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

ப்ரவ்னி செய்ய :
மைதா - ஒரு கப்
பட்டர் - அரை கப்
முட்டை - 2
சாக்லெட் சிப்ஸ் - 3/4 கப்
கொக்கோ பவுடர் - 2 1/2 மேசைக்கரண்டி
இன்ஸ்டண்ட் காஃபித்தூள் - அரை தேக்கரண்டி
பொடித்த சீனி - 3/4 கப்
உப்பு - கால் தேக்கரண்டி
ஐஸிங் செய்ய :
பொடித்த சீனி - ஒரு கப்
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பட்டர் - 1 1/2 மேசைக்கரண்டி
பால் - 2 மேசைக்கரண்டி


 

பட்டர், முட்டை இவைகளை ஒரு மணிநேரத்திற்கு முன்பாகவே ஃப்ரிட்ஜிலிருந்து வெளியே எடுத்து வைத்து விடவும். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் சாக்லெட் சிப்ஸுடன் பட்டர் சேர்த்து மைக்ரோவேவில் 30 வினாடிகள் வைத்து எடுக்கவும்.
சாக்லெட் மற்றும் பட்டர் உருகிய நிலையில் இருக்கும். அதை நன்கு ஒன்று சேர கலக்கி ஆற விடவும்.
அதற்குள் பேக் செய்ய தேவையான பாத்திரத்தை எடுத்து் பேக்கிங் பேப்பரை கொஞ்சம் வெளியே வரும் அளவு நறுக்கி அதில் போட்டு பட்டர் தடவி வைத்து கொள்ளவும். மைதா, கொக்கோ பவுடர், காஃபி பவுடர், உப்பு இவைகளை ஒன்றாக சலித்து வைத்து கொள்ளவும்.
அதன் பின்னர் ஆறிய நிலையில் இருக்கும் சாக்லெட், பட்டர் கலவையில் முட்டையை சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். அதனுடன் பொடித்த சீனி, சலித்து வைத்திருக்கும் மாவு வகைகள் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கரண்டியால் கலந்து விடவும்.
பின்பு அதை பேக்கிங் தட்டில் கொட்டி பரவலாக தடவி விட்டு 180 டிகிரியில் அவனை முற்சூடு செய்து விட்டு இதனை 40 நிமிடங்கள் வைத்து பேக் செய்யவும். பேக் ஆனதும் வெளியில் எடுத்து நன்கு ஆற விடவும்.
ஒரு பாத்திரத்தில் பொடித்த சீனி மற்றும் கொக்கோ பவுடரை போட்டு அதனுடன் பட்டரை சேர்த்து ஒரு மரக்கரண்டியால் நன்கு கிளறி விடவும். ஓரளவு கலந்ததும் பால் சேர்த்து நன்கு கிளறும் போது தான் அது மிருதுவான கலவையாக ஆகும்.
அதை ஆறிய ப்ரவுனியின் மேல் பரவலாக ஊற்றி சமப்படுத்தவும்.
அதன் மேல் கலர் மற்றும் சாக்லெட் ஸ்ப்ரிங்க்ள்ஸை கொண்டு அலங்கரிக்கலாம்.
இதனை அப்படியே இரண்டு மணிநேரம் வைத்து செட்டான பின் பேக்கிங் பேப்பரை கொண்டு வெளியில் அப்படியே எடுத்து தட்டில் வைத்து துண்டுகள் போடலாம். சீக்கிரம் தேவைப்படும் எனில் ஃப்ரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து எடுத்து துண்டுகள் போடலாம்.

உடனே சாப்பிட்டால் ப்ரவ்னி சிறிது அழுத்தமாக இருப்பது போன்று தோன்றும். மறுநாள் தான் இது மிகவும் மிருதுவாக அதிக சுவையுடன் இருக்கும்.

பார்ட்டிக்கு குழந்தைகளுக்கு செய்ய வேண்டுமெனில் முதல் நாள் இரவே செய்து வைத்து விடலாம்.

ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நான்கு நாட்கள் வரை வெளியில் வைத்தாலும் கெடாமல் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் குறிப்பே அட்டகாசமா ஸ்வீட்டோட ஆரம்பித்துருக்கிங்க. சிம்பிளி சூப்பர் ரெசிபி. இனி இன்னும் ரெசிபிகள் தொடர வாழ்த்துக்கள்.

Be simple be sample

நான் புதிய உறுப்பினர் இல்லை தோழி....
ஏற்கனவே 70 குறிப்புகள் தந்துள்ளேன் மா....
முன்பு போல் என்னால் இந்த அறுசுவையில் பங்கெடுக்க முடிவதில்லை...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழி ரேவதி....
என் குறிப்பினை வெளியிட்ட அட்மின் குழுவிற்கும் நன்றி....

என்றும் அன்புடன்,
அப்சரா.

எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.

நேம் பார்த்த்தும் யோசிச்சேன். மற்ற குறிப்பு லிஸ்ட் இல்லயா அதான் முதல் குறிப்புன்னு நினைசுட்டேன்.

Be simple be sample

Nice Brownie.. Any alternate for chocolate chips..