தேதி: August 29, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
உளுந்து - ஒரு கப்
கடலைப்பருப்பு - ஒரு கைப்பிடி
நல்லெண்ணெய் - 50 கிராம்
வெல்லம் - 100 கிராம்
ஏலக்காய் - ஒன்று
உளுந்துடன் கடலைப்பருப்பை சேர்த்து மூழ்கும் அளவிற்கும் அதிகமாக தண்ணீர் சேர்த்து ஒருமணி நேரம் ஊற விடவும்.

பின்னர் தண்ணீர் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் 50 கிராம் நல்லெண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள உளுந்தை சேர்க்கவும்.

இதை கைவிடாமல் நன்கு கிளறவும். தேவைப்பட்டால் மேலும் நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். அதனுடன் ஒரு ஏலக்காயை பொடியாக்கி தூவவும்.

வெல்லத்தை பாகு காய்ச்சவும்.

வெல்லப்பாகை வடிக்கட்டி களியுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரியும் திராட்சையும் சேர்க்கலாம்.

சுவையான சத்தான உளுந்து களி தயார்.

Comments
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
Balanayagi
மிகவும் சத்தான உணவு தோழி...
செய்முறையும் வித்தியாசமாக உள்ளது...
என்றும் அன்புடன்,
அப்சரா.
எந்த ஒரு மனிதனையும் அவர்கள் சக்திக்கு மீறி இறைவன் சோதிப்பதில்லை.
அப்பு
நன்றிமா. வித்யாசமா இருக்குனு சொன்னா மட்டும் போதாது. நீங்களும்
செய்து பாருங்க.
எல்லாம் சில காலம்.....