வீகன் டயட்

வில்லியம் லாம்பேங்கிறவர் (1765-1848) தான் இந்த‌ வீகன் டயட்டின் தந்தைனு சொல்லப்படறார். வீகன் டயட் எடுத்துகிறவங்களை ஒபிசிட்டி, டயாபடீஸ், உயர் இரத்த‌ அழுத்தம், ஆஸ்துமா, இதய‌ சம்பந்தபட்ட‌ நோய்கள், மலசிக்கல், தோல் வியாதி எதுவும் தாக்காது. சில‌ வகை கேன்ஸர் கூட‌ வராமல் தடுக்க‌ வீகனால் முடியும். இப்போது இந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது வீகன் டயட். ஆமாம் அது என்ன‌ வீகன் டயட் னு கேக்கறீங்களா?

வீகன் டயட்:

டயட் னாலே சாப்பாட்டை தவிர்க்கிறதுனு நம்ம‌ கிட்ட‌ ஒரு தவறான‌ கண்ணோட்டம் இருக்கு. இது சாப்பாட்டை தவிர்க்கறது இல்ல‌. சாப்பாட்டில் சிலவற்றை தவிர்க்கிறது. கறி, மீன், முட்டை, மட்டுமில்லாம‌ பாலும் பால் சார்ந்த‌ உணவுப் பொருட்களும், தேனும் கூட‌ சாப்பிடாம‌ இருக்கறதுக்கு பேர் தான் வீகன் டயட். அதாவது காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், பயறு மற்றும் பருப்பு வகைகள், எண்ணைகள் போன்ற‌ தாவர‌ உணவுகளை அடிப்படையாக‌ கொண்ட‌ உணவு முறை.

நம் நாட்டை பொருத்தவரை சமணர்களும், வள்ளலாரும் இந்த‌ உணவு முறையை பின்பற்றியவர்கள்.

அசைவ‌ உணவுகள்ல‌ இருக்கிற‌ புரதம், கொழுப்பு அமிலங்கள், கொலஸ்ட்ரால் இதெல்லாம் நச்சுப் பொருட்களா செயல்பட்டு நிறைய‌ வியாதிகளை ஏற்படுத்தும்னு மருத்துவ‌ உலகம் சொல்லுது. அதுக்கெல்லாம் தீர்வு தான் இந்த‌ வீகன் டயட். உலகம் முழுக்க‌ இருக்க‌ சிறந்த‌ 100 மருத்துவர்கள் RETHINK FOOD ங்கிற‌ புத்தகத்துல‌ வீகன் டயட் மூலமா பல்வேறு வியாதிகளை குணமாக்க‌ முடியும்னு ஆதாரத்தோட‌ விளக்கி இருக்காங்க‌.

எப்படி ஆரம்பிக்கறது:

எந்த‌ வயதில் வேணும்னாலும் இதை கடைபிடிக்க‌ தொடங்கலாம். இந்த‌ டயட்குள்ள‌ வர்றதுக்கு முன்னாடி சம்பந்தப்பட்டவங்களுக்கு ஏதாவது வியாதிகள் இருந்தா அவங்களை சர்க்கரை, மைதா, ஃபாஸ்ட் ஃபுட், எண்ணை பதார்த்தத்தை தவிர்க்க‌ சொல்றாங்க‌.

அசைவ‌ உணவு சரி பால் கூட‌ ஏன்?

ஆரோக்கியத்தை கெடுக்கிற‌ உணவுகள்ல‌ பாலுக்கும் இடம் உண்டு. இதை பலராலும் ஜீரணிக்க‌ முடியாது. உலகில் வாழும் மக்களில் பலருக்கு பாலை ஜீரணிக்கும் என்சைம்களே கிடையாது. பாலில் CASEIN ங்கற‌ புரதம் சில‌ வகை புற்றுநோய்கள் உட்பட‌ வேறுசில‌ நோய்களையும் உருவாக்க‌ வாய்ப்பிருக்கு. இப்போலாம் மாட்டுக்கு ஊசி போட்டு தான் பால் கறக்கறாங்க‌. இதை பற்றி என்னோட‌ இன்னும் சில ங்கிற‌ வலைபதிவில் நான் கூறி உள்ளேன். ஊசி போடுவதால் பாலில் இயற்கையாக‌ இருக்கிற‌ கேஸின் மட்டும் இல்லாம‌ ஆன்டிபயாடிக் மருந்துகள், ஹார்மோன்கள், யூரியா இதெல்லாம் கலந்திருக்கும். இது இன்னும் கெடுதல். ஸ்வீடன் நாட்டுல‌ வெளியிட்ட‌ ஆய்வறிக்கையில் பால் குடிப்பதால் எலுப்பு தேய்மானம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்னு சொல்லி இருக்காங்க‌.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன், மற்றும் பல‌ ஹாலிவுட் ஸ்டார்ஸ் வீகன் டயட் பிரியர்கள் தான். இப்போது இந்தியாவிலும் பல‌ பிரபலங்கள் இதை பின்பற்ற‌ தொடங்கி இருக்காங்க‌. டெல்லி, மும்பை, புனே, பெங்களூரு சென்னை போன்ற‌ நகரங்களில் வீகன் ஹோட்டலும் உருவாகிட்டு வருது.

இதெல்லாம் சரி வீகன் டயட்ல‌ மைனஸ் ஏதாவது இருக்கா?

கண்டிப்பா கிடையாது. நமக்கு விருப்பமானால் ஆம்லெட் முதல் ஐஸ்கிரீம் வரை, பிரியாணி முதல் பாயாசம் வரை எல்லா உணவுகளையும் தாவர‌ பொருட்களை வைத்தே சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் செய்து சாப்பிட‌லாம். ஆனால் இது பச்சை காய்கறிகளை சிரமப் பட்டு சாப்பிடுவது போலிருக்கு. இதனால் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வாய்ப்பிருக்குனு நிறைய‌ பேருக்கு தோணலாம். இது முற்றிலும் தவறு. வீகன் டயட் எனபது சத்தான‌ உணவு முறை.

மற்ற‌ விலங்கின் ஹார்மோன் வேறு. நம் ஹார்மோன் வேறு. அவை நம்முடன் ஒத்துபோக‌ வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு. அவற்றை தவிர்க்கலாமே. அவற்றை தவிர்ப்பதில் தவறில்லையே. நான் சமீபத்தில் படித்த‌ வாசகம் ஒன்று.

is cows milk nature’s perfect food? Yes. If you’re a calf.

பால் சிறந்தது தான் ஆனால் அதன் குட்டிக்கு. நமக்கு சிறந்தது தாய்ப்பால். மாட்டுப்பால் அல்ல‌.

நான் சிலரிடம் வீகன் டயட் பற்றி கூறினேன். இதன் விளைவு என்னனு கேட்டாங்க‌. இதை பின்பற்றினால் பல‌ வருடம் ஆரோகியமாக‌ வாழலாம்னு கூறினேன். இல்லனானு கேட்டாங்க‌. கஷ்டப்பட்டு தான் வாழனும்னு சொன்னேன். பரவாயில்ல‌. 60 இருந்தா போதும்னு சொன்னாங்க‌. ஆனா அவங்க‌ புரிஞ்சிகிட்டது தவறு. இதை பின்பற்றினா வாழும் காலம் வரை நோயின்றி ஆரோக்கியமாக‌ வாழலாம். இல்லனா இருக்கும் காலம் வரை கஷ்டப்பட்டு சிரமப்பட்டு நோய் நொடியுடன் வலி தாங்கி வாழ‌ வேண்டி இருக்கும். இன்றைக்கு 30 தாண்டின‌ உடனே பெண்களுக்கு எலும்பு தேய்மானம், கால்சியம் குறைபாடு, மூட்டுவலி இதெல்லாம் சர்வ‌ சாதாரணம் ஆகிடுச்சி.

இதனால் தாம் கூற‌ வரும் கருத்து என்ன பாலானு நீங்க‌ கேக்கறது எனக்கு கேக்குது. இத‌ ஃபாலோ பண்ணுங்கனு சொல்ல‌ வரல‌. முடிந்த‌ வரை சிலவற்றைக் குறைத்துக் கொள்ளலாம்னு சொல்ல‌ வரேன். கொஞ்சம் கொஞ்சமா குறைத்தால் நம்மால் முடியும். முக்கியமா வெள்ளை பொருட்கள். மைதா, சர்க்கரை, பால், உப்பு போல‌. நான் இத‌ செஞ்சிட்டனானு நீங்க‌ கேக்கறதும் எனக்கு கேக்குது. நானும் இப்போ தான் குறைக்க‌ ஆரம்பிச்சி இருக்கேன். கூடிய‌ விரைவில் மாறி விடுவேன். மனக்கட்டுப்பாடு மட்டுமே அவசியம்.

என்றும் அன்புடன்,

பாலநாயகி தமிழ்வேந்தன்

5
Average: 4.3 (3 votes)

Comments

நானும் இதைப் பற்றி படித்திருக்கிறேன். முடிந்தவரை பின்பற்றுகிறேன்.

சிலர் பாலை மிகுந்த‌ சத்துள்ள‌ ஒன்றாக‌ எண்ணி ஒரு நாளைக்கு நாலு டம்ளர் அருந்துவதைப் பார்த்திருக்கிறேன். சொன்னாலும் அவர்களுக்கு புரியவில்லை.:((

//இதை பின்பற்றினா வாழும் காலம் வரை நோயின்றி ஆரோக்கியமாக‌ வாழலாம்.//
உண்மை தான் பாலா. சமைக்காமல் சாப்பிடும் உணவை அதிகப்படுத்தலாம். மாலை நேரம் பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது.

நான் மைதா, சர்க்கரை இதையெல்லாம் விட்டுவிட்டேன். அசைவத்தில் மட்டன், சிக்கன் எப்போதாவது சமைப்பது உண்டு. மீன் மட்டும் அடிக்கடி உண்டு.
நாங்க‌ மாறிட்டு வரோம்.
நல்ல பதிவு பாலா.:))

முதல் பதிவிற்கு நன்றி நிகி.

நாங்களும் மைதா, சர்க்கரை விட்டு நாட்கள் ஆகுது. இங்கும் சிக்கன் இல்லனா மட்டன் எப்போதாவது ஒரு நாள் மட்டும். நான் மாற‌ தயாராக‌ உள்ளேன். ஆனால் வீட்டில் உள்ள‌ பெரியவர்களால் மாற‌ முடியவில்லை.

அடுப்பில்லாத‌ சமையல் பற்றி நானும் கேள்வி பட்டேன் நிகி. ஆனால் வீட்டில் உள்ள‌வர்கள் சமைத்த‌ உணவே சாப்பிட்டு பழகி விட்டார்கள். சமைக்காததை ஏற்றுக்கொள்ள‌ மறுக்கிறார்கள். இதற்கும் மாற‌ வேண்டும்.

என் அடுத்த‌ சில‌ குறிப்புகள் அடுப்பில்லாத‌ சமையல் பற்றியே. நன்றி நிகி

எல்லாம் சில‌ காலம்.....

நல்ல்அ விஷ்யம். வீட்டுல சின்ன பசங்க இருக்கறதால எல்லாமே கடைபிடிக்க கஷ்டமா இருக்கு. நமக்காக நாம செய்துக்கவும் ஒரு சோம்பல். முடிந்தவரை முயறிசிக்கிறேன். பேலியோ டய்ட் பற்றியும் எழுதுங்க.

Be simple be sample

நல்ல்அ விஷ்யம். வீட்டுல சின்ன பசங்க இருக்கறதால எல்லாமே கடைபிடிக்க கஷ்டமா இருக்கு. நமக்காக நாம செய்துக்கவும் ஒரு சோம்பல். முடிந்தவரை முயறிசிக்கிறேன். பேலியோ டய்ட் பற்றியும் எழுதுங்க.

Be simple be sample

பேலியோ டயட் பற்றி நீங்க‌ சொல்லி தான் கேள்வி படறேன். நெட்ல‌ தேடினா நிறைய‌ வருது. படித்து அதை பற்றி நன்கு தெரிந்து கொண்டு கண்டிப்பா எழுதறேன். நன்றி ரேவ்'ஸ்.

//வீட்டுல சின்ன பசங்க இருக்கறதால எல்லாமே கடைபிடிக்க கஷ்டமா இருக்கு.// ஆனா எங்க‌ வீட்ல‌ பெரியவங்களால‌ எதும் செய்ய‌ முடியாம‌ இருக்கு. அவங்கள‌ மாத்தறது தான் கஷ்டமா இருக்கு. இத‌ சாப்பிட்டே இவ்ளோ காலம் பழகிட்டோம் இதுக்கப்புறம் மாற‌ முடியாதுனு சொல்றாங்க‌. என்ன‌ பண்ண‌? நாம‌ மட்டும் தான் மாறி ஆகனும்.

////நமக்காக நாம செய்துக்கவும் ஒரு சோம்பல்.// புதுசா ஏதும் செய்ய வேணாம். சிலவற்றில் செஞ்சத‌ சாப்பிடாம‌ இருந்தா போதும்.

எல்லாம் சில‌ காலம்.....

//நமக்காக நாம செய்துக்கவும் ஒரு சோம்பல்.// இத‌ படிக்கும் போது ஒரு எக்ஸர்சைஸ் ஞாபகம் வருது. இது ஒல்லி ஆவதற்குனு கிண்டலா சொல்வாங்க‌. என்ன‌ எக்ஸர்சைஸ்னா எல்லாம் சமைத்து டேபிளில் அடுக்கி தலையை மட்டும் இடமிருந்து வலம் பின் வலமிருந்து இடம் ஆட்டனும். இதே போல் 10 முறை சற்று வேகமா ஆட்டனும். அவ்ளோ தான். ரொம்ப‌ சிம்பிள்.

எல்லாம் சில‌ காலம்.....