தேதி: September 2, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கம்பு - 50 கிராம்
வெல்லம் - ஒரு துண்டு
தேங்காய் - சிறிதளவு
கம்பை இரவில் ஊற வைத்து மறுநாள் முளைக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

அதோடு வெல்லம், தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.

அரைத்த கம்புடன் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வடிக்கட்டவும்.

சுவையான கம்பு ஜூஸ் ரெடி.

சமைக்கத் தேவையில்லை. காலையில் காபிக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
விரும்பினால் அரைக்கும் போது ஒரு முந்திரிப்பருப்பு மற்றும் ஏலக்காய் சேர்க்கலாம்.
Comments
Niki
சூப்பர் நிகி. இது வேகவைக்காம அப்படியே குடிக்கறதால உடம்புக்கு எதுவும் பண்ணாதா.
Be simple be sample
நிகி க்கா
உங்க எல்லா சிறு தானிய குறிப்பும் ரொம்ப நல்லா இருக்கு,
கம்பு ஜீஸ் புதுசா இருக்கு, ஈஸியாவும் இருக்கு,
நான் கேட்க நினைச்சத ரேவா க்கா கேட்டுட்டாங்க,
அன்ட் இதுல தேங்காய் சேர்க்கிறோமே ஒண்ணும் பிராப்ளம் இல்ல, இப்போலாம் தேங்காய் அவ்ளோவா சேர்க்க கூடாது சொல்றாங்களே அதான் கேட்டேன்.
எனக்கு ஒரு ஐடியா, அரைச்சு மீதி இருக்க கம்புல இன்னும் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அடை மாதிரி கைல தட்டி தோசைக்கல் ல சுட்டு சாப்பிடலாம், எங்க வீட்ல செய்வோம்.
வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் சுபி *
அன்பு ரேவா
வேக வைக்க தேவையில்லை ரேவா.
சாலட் எல்லாம் பச்சையா சாப்பிடற மாதிரி அப்படியே குடிக்கலாம்.
பாசிப்பயறு முளைகட்டி சாப்பிடுவோம் ல.
அது மாதிரி கொள்ளு, எள்ளு, வேர்க்கடலை, பாசிப்பயறு கூட முளைக்கட்டி ஜூஸ் மாதிரி செய்யலாம். எல்லா வகையான தானியத்திலும் செய்யலாம்.
சுவையாக இருக்கும்.
செய்து பாருங்க ரேவா:))
அன்பு சுபி
தேங்காய் பால் உடம்புக்கு மிகவும் நல்லது.
அதைப் பச்சையாகக் குடிப்பது ரொம்பவும் சிறப்பானது. வயிற்றுப்புண்ணை ஆற்றும். குளிர்ச்சியானது. சூட்டைத் தணிக்கும்.
தேங்காயை சூடாக்கி கொதிக்க வைக்கும் போது கொலஸ்ட்ராலாக மாறும். எனவே தான் தேங்காய் சட்னியைக் கூட சூடுபண்ணாமல் சாப்பிடுகிறோம்.
தேங்காய் நட்ஸ் வகையைச் சேர்ந்தது. பாதாம், பிஸ்தா மாதிரி சூப்பர் உணவாக்கும்.
தைரியமா சாப்பிடுங்க சுபி :)
கம்பு மாவில் மட்டுமல்ல சுபி, கேழ்வரகு மாவிலும் கூட வெல்ல அடை நானும் செய்வேன். சுவையாகவே இருக்கும்.:))
கம்பு முளை கட்ட
கம்பு ஜூஸ் ரொம்ப சுவையாக இருந்தது. செய்முறைக்கு நன்றி. நான் காலை 8 மணிக்கு ஊறவைத்து இரவு 8 மணிக்கு முளைகட்டி மறுநாள் காலை 8 மணிக்கு தயார் செய்தேன். ஆனால் மிகவும் லேசாகத்தான் முளை வந்திருந்தது. நன்கு முளை வர என்ன செய்ய வேண்டும். காலை உணவாக எடுத்துக்கொள்ள நான் எப்பொழுது \ எவ்வளவு நேரம் ஊற வைத்து எவ்வளவு நேரம் முளை கட்ட வேண்டும்?
இதை நீரிழிவு நோயாளிகள் அருந்தலாமா என்பதையும் சொல்லவும்.
அன்புடன்
ஜெயா
நிகிலா - கசப்பு கம்பு ஜுஸ்
கம்பு ஊறவைத்து இரவு முளைகட்டி வைத்தேன். காலையில் ஜுஸ் எடுக்க முடியாததால், அடுத்த நாள் எடுத்து பார்த்தேன். நன்கு முளை வந்திருந்தது. ஆனால் ஜுஸ் செய்தபின் சிறிது கசப்பு இருந்தது. அதிகமாக முளை வந்தால் பயன்படுத்தக்கூடாதா?
அன்பு ஜெயா
உங்கள் கேள்வியை இப்போது தான் பார்த்தேன்.
நீங்கள் முதலில் செய்த முறையே சரி. நானும் அப்படியே தான் செய்தேன்.
அதிக நேரம் முளை விடனும்னு அவசியமில்லை.
எட்டு மணி நேரம் போதுமானது.:)
சுகர் பேஷண்ட் இனிப்பு சேர்க்காமல் அருந்தலாம் ஜெயா.
nikila akka
Kampu juice very nice