தேதி: September 3, 2015
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
கேரட் - கால் கிலோ
தேங்காய் - கால் மூடி
வெல்லம் - சுவைக்கு
கேரட்டை நறுக்கி தேங்காய் சேர்த்து நன்கு அரைக்கவும்.

இதை நன்கு அரைத்து தேங்காய் பால் வடிக்கட்டுவது போல் 2 அல்லது 3 முறை தண்ணீர் விட்டு வடிக்கட்டவும்.

அதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.

சுவையான சத்தான கேரட் ஜூஸ் தயார்.

இதை 6 மாத குழந்தை முதல் அனைவரும் பருகலாம்.
தேங்காய் உடலுக்கு நல்லது. அதை சூடு பண்ணினால் மட்டுமே கொழுப்பாக மாறும். மற்றபடி பச்சையாக சாப்பிடும் பட்சத்தில் தேங்காயில் பல நல்ல குணங்கள் உள்ளன. இது உடலுக்கு மிகவும் நல்லது
கேரட் நம் தோலுக்கு நல்ல நிறத்தை கொடுக்கும். கண் பார்வைக்கு நல்லது. விட்டமின் பி, சி, கே நிறைந்தது. கெட்ட கொழுப்பை குறைக்கும் ஆற்றல் கொண்டது
Comments
கேரட் ஜூஸ்
பாலா மேடம்
ஜூஸ் ரொம்ப கெட்டியா இருக்க மாதிரி இருக்கு இல்ல நல்லா தண்ணி கலந்துக்கலாமா?
நன்றி டீம்
குறிப்பை அழகாக வெளியிட்ட டீமிற்கு நன்றிகள் பல.
எல்லாம் சில காலம்.....
அன்பு அபி
தேங்காய் பால் பிழிவது போல் இரண்டு மூன்று முறை தண்ணீர் சேர்த்து பிழியவும். ஒரு முறை பிழிந்ததில் மீண்டும் தண்ணீர் சேர்த்து கரைத்து பிழியவும்.
எல்லாம் சில காலம்.....
பாலா மேடம்
கண்டிப்பா செஞ்சு பார்த்துட்டு சொல்றேன். விளக்கத்திற்கு நன்றி