37 weeks pregnant-குழந்தையின் தலை திரும்ப‌

அனைவறூக்கும் வணக்கம்,

நான் 37 வாரம் கர்ப்பமாக‌ உள்ளேன்.குழந்தையின் தலை இன்னும் திரும்பவில்லை.due dAte sep 23.டாக்டர் இன்னும் ஒரு வாரம் கழித்து வர‌ சொல்லி இருக்காங்க‌..தலை திரும்ப‌ என்ன செய்ய‌ வேண்டும்.....தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தோழிகளே.

Daily 1 hour continuously walk panunga...
walking best intha time la..
aprm sit up panalam athavathu ukanthu ukanthu enthikanum mutti madangi irukamathri...

veedu perukunga nala kuniju nimunthu short sweeper vachi....

ithathan na panen..
nengalum try panunga

நல்லா நடங்க காலையில் கொஞ்சம் வெளியே பொய் வாக்கிங் மாறி போங்க நடக்க நடக்க தான் குழந்தையின் தலை கீழே இறங்கும்

நன்றி jenisa and asma beevi........ எனக்கு சுகப் பரசவம் ஆக‌ நீங்க‌ ப்ராத்தனை பண்ணிக்கோங்க‌..

டாக்டர் என்ன‌ சொன்னாங்க‌? அவங்க‌ அட்வைஸ் படி நடங்க‌. குழந்தையின் தலை சரியான‌ நேரத்துக்கு சரியான‌ பொசிஷனுக்கு வரும். இப்போ தேவையில்லாமல் ஓவரா , சிட் அப்ஸ் எல்லாம் வேண்டாம். //சுகப் பரசவம் ஆக‌// போன‌ வாரம் எப்படி இருந்தீங்களோ அப்படி இருங்க‌. டாக்டர் சொல்லாம‌ எதையும் பண்ண‌ வேண்டாம்.

‍- இமா க்றிஸ்

OK imma amma.......regular walking panren............ water niraiya kudikkiren.......

Sit up enbathu romba over ahna visayam ilai ..
Ukanthu enthipathu pola than..
Atha pana iduppu elumpu nala valanju kudukum...
Nama udamba varuthama panra ella visayamum nalathu than pregnancy la...
Nama satharanama ella velayum seiaalam..
Pregnancy oru noi ilaye...
Enjoy panni ovonayum panunga exercise kooda...
En anubavathla solren ...

சகோதரி நீங்கள் ஏற்கனவே கர்ப்ப காலத்தில் எக்சர்சைஸ் செய்து பழக்கமுள்ளவரா இருந்தா சுக பிரசவத்துக்கும் தலை திரும்புறதுக்குமான சில சின்ன சின்ன எக்சர்சைஸ் தாராளமா செய்யலாம் . அதுவும் உங்களுடிய டாக்டர் அல்லது நர்ஸ் சொன்னால் மட்டுமே . எந்த எக்சர்சைஸ் ம் செய்யாமல் இருந்துட்டு தடால் னு 37 வது வாரத்தில செய்யுறது தப்பு .எனது சகோ 2 வது குழந்தைக்கு நெட் ல் பாத்துட்டு ப்ரக்னன்ஷி எக்சர்சைஸ் செய்யுற பந்து தெரியுமோ அதை வாங்கி செய்து. பிரசர் அதிகமாகி டாக்டர் திட்டு .நடக்கிறது கூட நீங்கள் வழக்கமா நடந்ததை இன்னும் கொஞ்சம் அதிகமாக்கலாமே தவிர இதுக்காக சட்டெண்டு 2, 3 மடங்கா எல்லாம் அதிகரிக்க குடாது .இன்னும் நாள் இருக்கு நீங்கள் மனசை ஆரோக்கியமாவும் சந்தோசமாவும் வச்சிருங்கோ. வழமை போலவே இருங்கோ .கண்டிப்பா பிரார்த்தனை பண்றோம் .மற்றும்படி அப்பிடி செயுங்கோ இப்பிடி செய்யுங்கோ ன்னு சொல்ல பயமாயிருக்கு சகோஸ் .எல்லாருக்கும் உடல் நிலை ஒரேமாதிரி இல்ல .எல்லாருக்கும் பிரக்னன்சி சர்வ சாதாரணமும் இல்ல .புது வரவை நினச்சு சந்தோசமா இருங்கோ .

அன்புள்ள‌ விஜிக்கு,
மனதில் உள்ள‌ பயத்தினை முதலில் நீக்குங்கள்.
இன்று கண்ணன் பிறந்த‌ நாள். அவன் அருளால் உங்களுக்குக் குழந்தை
நல்லபடியாகப் பிறக்கும். இறைவனை வேண்டுங்கள்.நல்லதே நடக்கும்.
உங்கள் குழந்தையோடு பேசுங்கள் அன்பாக‌ கெஞ்சலாகப் பேசுங்கள்.
அம்மாவைத் தொல்லை செய்யாமல் நல்ல‌ பிள்ளையாக‌ வெளியே வா
என்று பேசுங்கள். குழந்தை கட்டாயம் கேட்டுத்தலை திரும்பிவிடும்.
இது ஓரளவு டெலிபதி முறைபோல‌. திரும்பத் திரும்பப் பேசுங்கள் நீங்கள்
மற்றவர்கள் முன்னால் செய்யாதீர்கள், தனிமையில் உங்கள் குழந்தையோடு
பேசுங்கள், பிறர் முன்னிலையில் செய்யும் போது தேவையில்லாத‌ விமரிசனங்கள் எழும்பும். முயற்சியில் தடை ஏற்படும். முயன்று பாருங்கள்
விரைவில் உங்கள் கவலை தீர்ந்து அம்மாவாக‌ வாழ்த்துக்கள்.
அன்புடன் பூங்கோதை கண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

நன்றி ஜெனிசா...டாக்டர் exercise செய்யலாம் நு சொன்னாங்க‌ பா....அதனால‌ பயமில்லாமல் இருக்கேன் ....ரொம்ப‌ நன்றி பா

விஜி,

நீங்க ரொம்ப குழம்ப வேண்டாம், பயப்பட வேண்டாம். குழந்தையின் தலை எப்போ வேணும்னாலும் திரும்பும். அதுக்குன்னு நேரம் காலம் எல்லாம் இல்ல. நாளைக்கு உங்களுக்கு பிரசவ தேதி ன்னா இன்னைக்கு நைட் கூட தலை திரும்பும். தலை திரும்ப 5-10 நிமிடமே போதும்... அதனாலா அதையே யோசிச்சுட்டு இருக்க வேண்டாம். சிட் அப்ஸ், வாக்கிங் & எக்சர்சைஸ் பண்ணி தான் தலை திரும்பனும் ன்னு எந்த அவசியமும் இல்ல. கவலை படமா நிம்மதியா, சந்தோசமா இருங்க. எக்சர்சைஸ், யோகா அது இதுன்னு சுக பிரசவத்துக்கு practice பண்ணி சிசேரியன் ஆனதும் இருக்கு, ஒண்ணுமே பண்ணாம நார்மல் ஆகறதும் இருக்கு.... புடுச்ச வேலை பண்ணிட்டு சந்தோசமா இருங்க... புது வரவுக்கு வாழ்த்துக்கள்

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

மேலும் சில பதிவுகள்