கத்தரிக்காய் சம்பல் (துவையல்)

தேதி: February 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

கத்தரிக்காய் - 2
தேங்காய்ப்பால் - 5 மேசைக்கரண்டி
எலுமிச்சைச்சாறு - 4 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 3
வெங்காயம் - பாதி
மல்லிக்கீரை - 2 கொத்து
உப்பு - ஒரு ஸ்பூன்


 

கத்தரிக்காயை முள் கரண்டியால் குத்திவிட்டு மிதமான நெருப்பில் காட்டி சுட்டு ஆறவைக்கவும்.
தேங்காய்ப்பால், எலுமிச்சைச்சாறு, உப்பை கலந்துவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரையை நைசாக நறுக்கி அதனுடன் சேர்க்கவும்.
ஆறிய கத்தரிக்காயை தோல் நீக்கி பிசைந்து ஏற்கனவே கலந்து வைத்துள்ளவற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதை பிரியாணி போன்றவற்றுடன் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் அஸ்மா! இன்று உங்கள் கத்தரிக்காய் சம்பல் செய்தேன்.
மிகவும் நன்றாக வந்தது. ருசியும் அபாரம் நன்றி
அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.