Three month babykku

என் மூன்று மாத குழந்தை எப்பொழுதும் பச்சை நிறத்தில் மலம் கழிக்கிறான் இது எதனால் காரணம் என்ன சொல்லுங்கள் தோழிகளே

குழந்தையின் துணிகளை (ஜட்டி முக்கியமாக‌) பிறர் கண்படும்படி காயவைக்காதீர்கள், திருஷ்டி இருந்தால் குழந்தைகள் மலம் பச்சையாகப்
போகும். பால் கொடுப்பதையும் பிறர் கண்படும்படித் தராதீர்கள்.மூடித்தரவும்.
செவ்வாய் ஞாயிற்றுக் கிழமைகளில் உங்கள் வழக்கப்படி திருஷ்டி கழிக்கவும்.
இன்றே செல்லுங்கள், அந்தி சந்தி நேரங்களில்( மாலையில் 5 முதல் 6மணி
வரை )வெளியே கொண்டு செல்லாதீர்கள். வெளியே போகும்போது குழந்தை
தலைமீது கட்டாயம் துணியால் மூடிக் கொண்டுதான் போகவேண்டும்.
ஆகாயத்தில் பறக்கும் சில‌ பறவைகளின் நிழல் குழந்தைமீது படக்கூடாது.
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மிக்க நன்றி தோழி

நீங்க‌ தாய்பால் கொடுக்கறீங்களா ஃபார்முலா மில்க் கொடுக்கறீங்களா? ஃபார்முலா மில்க் கொடுத்தா இன்ஃபெக்ஷன் இருக்க‌ வாய்ப்பிருக்கு. பச்சை மோஷன் எப்பவும் அசட்டை செய்ய‌ கூடாது. ஒருமுறை மருத்துவரை பார்த்துவிடுவது நல்லது. தாய்பால் கொடுக்கும் போது கூட‌ இன்ஃபக்ஷனுக்கு வாய்ப்பு உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்