மசாலா டோஸ்ட்

தேதி: February 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் துண்டுகள் - 12
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
சட்னிக்கு :
இஞ்சி - ஒரு இன்ச்
பூண்டு - 4 பல்
சீரகம் - 1/3 ஸ்பூன்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
புளி - ஒரு நெல்லிக்காயளவு
மல்லிக்கீரை - 2 கொத்து
உப்பு - அரை ஸ்பூன்


 

முதலில் சட்னிக்கு கூறிய அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டின் ஒருபுறம் வெண்ணெய் தடவி, தோசைக்கல்லை காயவிட்டு, சிறிது எண்ணெய்விட்டு வெண்ணெய் தடவிய அந்த பக்கத்தை மட்டும் லேசாக சிவக்கவிட்டு எடுக்கவும். இதேபோல் இரண்டு துண்டுகளை தயார் பண்ணிக்கொள்ளவும்.
இப்போது அந்த துண்டுகளின் மறுபக்கங்களில் வெண்ணெய் தடவிக்கொண்டு, முறுகிய பக்கத்தின் மேல் அரைத்த சட்னியை தடவி, இன்னொரு துண்டின் முறுகிய பக்கத்தை அதன் மேல் கவிழ்த்து, தோசைக்கல்லில் போட்டு சிறிது எண்ணெய்விட்டு, இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்.
இதேபோல் அனைத்தையும் தயார் பண்ணி சூடாக பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்