மலேஷிய வெங்காயக்கறி

தேதி: February 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆட்டுக்கறி (அல்லது) பீஃப் - அரை கிலோ
நாட்டு வெங்காயம் - 600 கிராம்
தக்காளி - 150
பச்சை மிளகாய் - 4
ஏலக்காய், கிராம்பு - தலா 3
பட்டை - ஒரு துண்டு
மல்லிக்கீரை - ஒரு பிடி
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
எண்ணெய், நெய் சேர்த்து - 50 கிராம்
உப்பு - 2 ஸ்பூன்


 

கறியை சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு நாட்டு வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, பச்சை மிளகாயை நைசாக நறுக்கி மற்ற அனைத்து பொருட்களோடு சேர்த்து கறியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அடுப்பை மிதமான தீயில் (சிம்மில்) வைத்து வேகவைக்கவேண்டும்.
வெந்தவுடன் அப்படியே எடுத்து சோறுடன் பரிமாறலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்மா,தண்ணீர் இல்லாமல் எப்படி கறி வேகும்.

from,veena.

ஹாய் வீனா! நீங்க வீணா பயப்படவேண்டாம் :-) தண்ணீரே இல்லாமல் வெங்காயத்திலிருந்து வெளியாகும் சாற்றிலேயே வேகவைப்பதுதான் இதன் தனிச்சிறப்பே உள்ளது :) தக்காளி வேறு சேர்க்கிறோம் அல்லவா? கண்டிப்பாக தண்ணீரே சேர்க்காமல்தான் சமைக்கணும். ஆனால் அடுப்பை சிம்மில் மட்டுமே வைத்து வேகவிடணும். வெங்காயச்சாற்றில் வெந்த கறி சூப்பரா இருக்கும்! அதிக காரமில்லாததால் பிள்ளைகளும்கூட விரும்பி சாப்பிடுவார்கள்.நான் சொல்லியுள்ளதுபோல் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்!

என் சந்தேகத்திற்கு விடை தந்ததற்கு.Thank you very much.

from,veena.