பாப் கார்ன்

தேதி: February 15, 2007

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

காய்ந்த மக்காச்சோளம் - ஒரு கப்
மிளகாய்தூள் (அல்லது)
மிளகுத்தூள் - 2 சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
உப்பு தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி


 

தூள் வகைகளை ஒன்றாக கலந்துவைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நன்கு சூடாக்கிய பின், அடுப்பை மெதுவான தீயில் வைத்து, கால் கப் சோள விதைகளையும் கால் பங்கு (கலந்து வைத்த) தூள் வகைகளையும் போட்டு கலந்து விட்டு, உடனே ஆவி வெளியாகாத அளவு மூடியை போட்டு மூடி தீயை அதிகமாக்கவும்.
எல்லா சோளவிதைகளும் பொரிந்து சப்தம் நின்றவுடன் திறந்து வேறு ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
இதேப்போன்று மீதியுள்ள 3 பங்கு விதை, தூள் வகைகளையும் கலந்து பொரிக்கவும்.
சற்று ஆறியவுடன் காற்றுப்புகாத பாத்திரத்தில் மூடிவைத்து அவ்வெப்போது பரிமாறவும்.


கால் கப் அளவிற்கு மேல் அதிகமாக போட்டால் சோளம் முழுமையாக பொரிந்து வராது. சோள விதைகளுக்கு ஏற்றாற்போல் பாத்திரத்தின் அளவை பெரியதாக வைத்துக்கொள்ளவும். சோள விதைகள் வாங்கும்போது பாப்கார்ன் செய்வதற்காக உள்ள விதைகளை கேட்டு வாங்கவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அஸ்மா, இன்று உங்கள் முறையில் பாப் கார்ன் செய்தேன். ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு. நான் எதிர்பார்க்கவே இல்ல வீட்ல பாப்கார்ன் செய்ய கத்துகிட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கு ரொம்ப நன்றி.

ஹாய் அஸ்மா!
பாப் கார்ன் செய்வது புதுமுறையாக இருக்கிறது. செய்வதும் மிகவும் சுலபம்.
நான் எண்ணையும், உப்பும் மட்டும் கலந்து மைக்கிரோவேயில்
வைத்து பொரிப்பேன். நான் உங்கள் முறைப்படி செய்தேன்
நன்றாக வந்தது. நன்றி அன்புடன் ராணி

தாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்
தமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.