நீர் உருண்டை

தேதி: September 11, 2015

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

அரிசி - ஒரு கப்
தேங்காய் துருவல் - ஒரு கப்
உப்பு - அரை மேசைக்கரண்டி
வெல்லம் - சிறிது


 

தேங்காயை துருவிக் கொள்ளவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசியை போட்டு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
அரிசி ஊறியதும் களைந்து க்ரைண்டரில் போட்டு 5 நிமிடம் அரைக்கவும். 5 நிமிடம் கழித்து அதில் தேங்காய் துருவல், உப்பு போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ரொம்ப கெட்டியாக இல்லாமல் சற்று தளர்வாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து அதன் நடுவில் குழி போல் செய்து சுண்டைக்காய் அளவு வெல்லத் துண்டை நடுவில் வைத்து மூடி உருட்டி விடவும்.
இதே போல் அனைத்து மாவையும் உருண்டைகளாக தயார் செய்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும். இனிப்பு பிடிக்காதவர்கள் வெல்லம் இல்லாமலும் செய்யலாம்.
ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு தயார் செய்த உருண்டையை கொதிக்கும் தண்ணீரில் போடவும். உருண்டை போட்ட உடனே கரண்டியை வைத்து கிளற கூடாது. உடனே கிளறினால் உருண்டை தண்ணீரில் கரைந்து விடும். 5 நிமிடம் கழித்து லேசாக கிளறி விடவும்.
பிறகு 15 நிமிடம் உருண்டையை வேக விட்டு இடையில் லேசாக கிளறி விடவும். உருண்டை வெந்ததும் இறக்கவும்.
சூடான நீர் உருண்டை தயார். தண்ணீருடன் உருண்டையை சேர்த்து சாப்பிடவும். இதில் உள்ள தண்ணீர் உடம்புக்கு ரொம்ப நல்லது. தண்ணீர் பிடிக்காதவர் வெறும் உருண்டையை மட்டும் தனியாக எடுத்தும் சாப்பிடலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஜெயலக்ஷ்மி, குறிப்பு நன்றாக உள்ளது. இதனை பச்சரிசியில் செய்ய வேண்டுமா? புழுங்கல் அரிசி பயன்படுத்தலாமா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.