அம்மை பற்றிய சந்தெகம்

ஹலோ தோழிகளெ

என் கணவரின் அக்கா ஊரிலிருந்து வந்து ஒரு வாரம் ஆகிரது. அவர்களின் பாப்பாவிற்க்கு 2 வயது அவளுக்கு அம்மை போட்டு உள்ளது. என் பையனுக்கு 1 1/2 வயது அவன் பாப்பாவுடன் விளையாடினால் என் பையனுக்கு யேதவது பாதிப்பு ஆகுமா

ஆம் பெரியவங்க‌ அப்படிதான் சொல்வாங்க‌ அதனால‌ கொஞ்சம் பாதுகாப்பா இருங்க‌

அன்புள்ள‌ சங்கீதாவுக்கு உங்கள் நாத்தனார் சொன்னது மிக‌ மிகச் சரியானதே.
அம்மை ஒட்டுவார் ஒட்டி. ஐ சியு வில் இருப்பது போலத்தான். நீங்கள் வசிப்பது
எங்கே என்று தெரியவில்லை. தாழம்பூ ஷர்பத் வாங்கி உங்கள் பையனுக்குக்
கொடுங்கள். அம்மை வராமல் தடுக்கும் . முடிந்தால் கத்தரிக்காயைச் சுட்டு
அதோடு சேர்க்கும் தக்காளி,வெங்காயம்,மிளகாய்,புளீ இவற்றையும் சுட்டு உப்பை
வறுத்து துவையல் அரைத்து மற்றவர்கள் அனைவரும் சோற்றில் கலந்து உண்ண‌
மற்றவர்களுக்கு அம்மைனோய்க்கு தடுப்பாக‌ அமையும். ஓரிரு நாள்கள்
உண்டால் போதுமானது .
அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

அம்மை தொற்றும் .அந்த கொப்பிளம் ல் நீர் இருக்கும் .அது தானாவே உடையும்போது ஆங்காங்கே பட்டு நெருக்கமான ஏற்கனவே அம்மை வராத குழந்தை களுக்கு சட்டெண்டு வரும். 1 1/2 வயசு குழந்தை இன்னும் பாவம் கவனமா இருங்கோ .குறிப்பா அம்மை வந்துட்டு ஒருவருக்கு சுகம் வர அடுத்தவருக்கு வரும் .அதாலதான் ஸ்கூல் ல எல்லாம் லீவு எடுக்க சொல்லுவார்கள் .

மேலும் சில பதிவுகள்