
தேதி: September 14, 2015
ஃபோம் ஷீட்
ரப்பர் துண்டு
பென்சில்
பெரிய ஸ்டோன்
கத்தரிக்கோல்
ஃபேப்ரிக் க்ளூ
விளக்கு
தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஃபோம் ஷீட்டைத் தேவையான அளவிற்கு வட்டமாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

நன்கு தடிமனாக இருக்க வேண்டுமென்றால் இரண்டு வட்டத் துண்டுகள் நறுக்கியெடுத்து இரண்டையும் சேர்த்து ஒட்டிக் கொள்ளவும்.

ஒட்டிய ஃபோம் சீட்டில் ஏதேனும் ஒரு பக்கத்தை மட்டும் பாதி வரை நறுக்கிவிடவும்.

நறுக்கிய இடத்தை படத்தில் உள்ளது போல ஒரு பகுதியின் மேல் மற்றொரு பகுதி இருக்குமாறு வைத்து ஒட்டிவிடவும்.

பிறகு நடுவில் ரப்பர் துண்டை வைத்து ஒட்டிவிடவும்.

ரப்பர் துண்டைச் சுற்றி பெரிய அளவிலான முத்து ஸ்டோனை வைத்து ஒட்டவும்.

அதைச் சுற்றிலும் சிவப்பு மற்றும் பச்சை நிற பெரிய ஸ்டோனை ஒட்டவும்.

பெரிய பெளலில் தண்ணீர் நிரப்பி அதில் செய்து வைத்திருக்கும் ஃபோம் டிசைனை மிதக்கவிடவும். (ஃபோம் ஷீட் என்பதால் மிதக்கும் உள்ளே போகாது).

டிசைனின் நடுவில் விளக்கை வைத்து ஏற்றிவிடவும்.

கொலு சமயங்களில் இதே போல் செய்து வீட்டை அலங்கரிக்கலாம்.

Comments
floating candle
Romba azagu senbaga. Kundan stones colour eduppaa arumaiya irukku.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கைவினை
சூப்பரா இருக்கு செண்பகா.
இது... அந்த தண்ணீர் ரங்கோலி போட்ட பாத்திரம் இல்ல!! :)
- இமா க்றிஸ்
ரொம்ப அழகு செண்பகா
ரொம்ப அழகு செண்பகா
கேண்டில் ஹோல்டர்
supper madam. romba alaga iruku